"யூஸ்" பண்ணாத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்துளீர்களா.? உஷார்.!
சரி உங்கள் (கூகுள் ட்ரைவ்) ஆண்ட்ராய்டு பேக்-அப் எப்போது டெலிட் செய்யப்படவுள்ளது என்பதை கண்டறிவது எப்படி.?
ஒருவேளை உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போ பழுதில் இருக்கலாம், அல்லது அதை சரிசெய்ய ஏதேனும் லோக்கல் சர்வீஸ் சென்டர்களில் கொடுத்து திரும்பி பெறாமலேயே இருக்கலாம், அல்லது ஆண்ட்ராய்டு வேண்டாம் ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கு மாறுவதாக காத்திருக்கலாம்.

இதில் எந்தவொரு காரணமாக இருந்தாலும் சரி, கிட்டதட்ட "இரண்டு மாதங்கள் பயன்படுத்தப்படாத" உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை உடனே கண்டுபிடிக்கவும்.

குறிப்பாக தொலைபேசி எண்கள்
அதை கண்டுபிடித்து உங்கள் கணினியோடு இணைத்து, புகைப்படங்கள், விடியோக்கள், இதர ஆவணங்கள் மற்றும் குறிப்பாக தொலைபேசி எண்கள் ஆகிய அணைத்து வகையான தரவுகளையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அனைத்தும் டெலிட் செய்யப்படவுள்ளது
ஏனெனில், சுமார் இரண்டு மாதங்களுக்கு பயன்பாட்டிற்குள் இல்லாத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் பேக்-அப் (Google Backup) அனைத்தும் டெலிட் செய்யப்படவுள்ளது.

கண்டறிவது எப்படி.?
ரெட்டிட்-ன் சமீபத்திய இடுகையில் "2 மாத காலங்களாக பயனர்களால் பயன்படுத்தப்படாத ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான ஆண்ட்ராய்டு பேக்அப் அனைத்தும் அழிக்கப்படவுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரி உங்கள் ஆண்ட்ராய்டு பேக்-அப் எப்போது டெலிட் செய்யப்படவுள்ளது என்பதை கண்டறிவது எப்படி.?

மோசமான அறிவிப்பு வழி
கூகுளின் ஆதரவு பக்கத்தின் படி, கூகுள் ட்ரைவ்-ற்க்குள் (Google Drive) நுழையும் பயனர்கள் அறிவிப்பு பலகையை காணலாம். அங்கு அவர்களின் ஆண்ட்ராய்டு பேக்-அப் எஇன்னும் எத்தனை நாட்களில் காலாவதியாகிவிடும் என்பதை காணமுடியும். ஆனால், நிச்சயமாக இதுவொரு ஒரு மோசமான அறிவிப்பு வழியாகும்.

"100ஜிபி தரவை இழந்து விட்டேன்"
ரெட்டிட்-ன் மற்றொரு இடுகையில் "கூகுள் நிறுவனத்திடம் இருந்து எந்த எச்சரிக்கையும் இல்லை. அவர்கள் எனது தரவை நீக்கிவிட்டனர். கூறப்படும் பேக்-அப் காலாவதி தேதி எனக்கு கிடைக்கவில்லை; எந்த அறிவிப்பும் இல்லை; எந்த மின்னஞ்சலும் இல்லை, எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லை, மிக முக்கியமாக, என் கூகுள் டிரைவ் சேமிப்பகத்தின் 100ஜிபி தரவை இழந்து விட்டேன்" என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் ட்ரைவ் ஸ்ட்ரோஜிற்கு நீங்கள் பணம் செலுத்தினாலும் கூட.!
இதன் பொருள் நீங்கள் கூகுள் ட்ரைவ் ஸ்ட்ரோஜிற்கு நீங்கள் பணம் செலுத்தினாலும் கூட உங்கள் தரவுகள் அழிக்கப்படும். கவனத்தில் கொள்ளப்படாது. இதை கூகுள் செய்ய என்ன காரணமென்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரும்பினால், கூகுளின் இந்த செயல்பாட்டை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த கூகுள் நடவடிக்கையில் இருந்து ஒவ்வொரு சாதனங்களும் கூகுள் நிறுவனத்தின் சர்வர்களின் கீழ் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.

பேக்-அப்'தனை தக்கவைத்துக்கொள்ள ஒரே வழி
ஆண்ட்ராய்டு பேக்அப்-களை மற்ற இயங்குதளங்களில் பயன்படுத்த முடியாது என்பதால், உங்கள் ஆண்ட்ராய்டு பேக்-அப்'தனை தக்கவைத்துக்கொள்ள ஒரே வழி, சாதனத்தின் செயலியை கூகுளின் சேவையகங்களுடன் இணைக்க அனுமதிப்பதன் மூலம், அதாவது பயன்படுத்தாத உங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்தை உடனடியாக இணைய இணைப்புடன் இணைக்கவும்.


Click it and Unblock the Notifications