Home
News

ஜிமெயில் அக்கவுண்ட் இருக்கா? செப்டம்பர் 20க்குள் இதை செய்யுங்க.. இல்லன்னா சிக்கல் ஆயிடும்.. ஏன்?

இந்திய முழுவதும் அதிக மக்கள் ஜிமெயில் (Gmail) சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த ஜிமெயில் சேவையில் அவ்வப்போது புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டு வருகின்றன இந்த புதிய அம்சங்கள் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி பல கோடி ஜிமெயில் அக்கவுண்ட்டுகளை நீக்க முடிவு செய்துள்ளது கூகுள் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது போன், லேப்டாப், டெஸ்க்டாப் போன்ற எந்த சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கட்டாயமாக நம் அனைவரிடமும் ஒரு ஜிமெயில் கணக்கு கட்டாயம் இருக்கும். அதேபோல் கல்லூரி முதல் மற்றும் பணி இடங்கள் வரை இந்த ஜிமெயில் அக்கவுண்ட் என்பது மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. எனவே இதனால் ஒவ்வொரு வருடமும் ஜிமெயிலில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜிமெயில் அக்கவுண்ட் இருக்கா? செப்டம்பர் 20க்குள் இதை செய்யுங்க..

அதேசமயம் பலர் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் அதை பல மாதங்கள் முறையாகப் பயன்படுத்துவது கிடையாது. பின்பு இறந்தவர்களின் ஜிமெயில் முகவரி கூட அப்படியே இருக்கும். இதுபோன்ற பயன்படுத்தாத ஜிமெயில் அக்கவுண்ட்கள் கூகுள் சர்வரின் அதிக இடத்தை பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் கூகுள் நிறுவனம் ஒரு முடிவு எடுத்துள்ளது.

அதாவது ஜிமெயில் சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் முகவரிகள் டெலிட் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சரியாக செப்டம்பர் 20ம் தேதிக்குப் பிறகு உலகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத பலகோடி ஜிமெயில் அக்கவுண்ட்டுகள் டெலிட் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை தான் நீக்க முடிவு செய்ய செய்துள்ளது கூகுள் நிறுவனம். அதுவும் இந்த பணி வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்கு பிறகு தொடங்க உள்ளது கூகுள் நிறுவனம். ஜிமெயில் முகவரி நீக்கப்படும் என்றால் அதில் இருக்கும் முக்கியமான ஆவணம், டிரைவ் மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.

ஒருவேளை இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை ஆக்டிவ்வாக வைத்திருக்க வேண்டும். கடந்த 2 வருடங்களாக நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட இப்போது உடனே அதனைப் பயன்படுத்தினால் போதும் இந்த பிரச்சனை இருக்காது. அதாவது இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் லாகின் செய்து மின்னஞ்சலை அனுப்புவது அல்லது உங்களுக்கு வந்த மின்னஞ்சலைப் படிப்பது போன்றவற்றைச் செய்தால் போதும். இப்படிச் செய்யும்பட்சத்தில் நமது ஜிமெயில் கணக்கு டெலிட் செய்யப்படாமல் தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிமெயில் அக்கவுண்ட் இருக்கா? செப்டம்பர் 20க்குள் இதை செய்யுங்க..

அதேபோல் உங்களுக்குப் பழைய ஜிமெயில் அக்கவுண்ட் தேவைப்படவில்லை என்றால், அதில் இருக்கும் முக்கியமான ஆவணங்கள் மற்றும் டேட்டக்களை இப்போது பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மேலே கூறியபடி அனைத்து ஆவணங்களும் திரும்ப கிடைக்காமல் போகும் என்பதை நினைவில் கொள்க.

மேலும் நீங்கள் பழைய ஜிமெயில் அக்கவுண்ட் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை மறந்திருந்தால் கூட ஜிமெயிலை ஓப்பன் செய்யும்போது, கீழே தோன்றும் ஃபர்கெட் இமெயில் (Forget Email) எனும் டேபை கிளிக் செய்து முதலில் ஐடியை ரிக்கவர் செய்யுங்கள். அதை வைத்து ஃபர்கெட் பாஸ்வேர்ட் (Forget Password) கொடுத்து பாஸ்வேர்ட்டையும் ரிக்கவர் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google deletes Gmail accounts that haven't been used for two years from September 20: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X