Home
News

மொத்தமா போச்சு.. Google Maps இல் இனிமேல் இந்த தகவல்கள் கிடைக்காது.. என்னது? ஏன்?

கூகுள் மேப்ஸை (Google Maps) திறந்த சில பயனர்கள் "நாயர்.. அத்திப்படி என்கிற ஒரு கிராமத்தையே காணோமே!" என்கிற அளவிற்கு ஷாக் ஆகியுள்ளனர். அவர்கள் தங்கள் அக்கவுண்டில் இருந்து அனைத்து மேப்ஸ் ஹிஸ்டரி டேட்டாவும் (Maps History Data) காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இது குறித்து எழுந்த புகார்களை தொடர்ந்து, கூகுள் நிறுவனம் ஆனது தனது கூகுள் மேப்ஸ் சேவையில் ஏற்பட்ட சிக்கலை ஒப்புக்கொண்டு, அதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் பயனர்களின் மேப்ஸ் ஹிஸ்டரி டேட்டா காணாமல் போனதற்கு என்ன காரணம் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது.

Google Maps இல் இனிமேல் இந்த தகவல்கள் கிடைக்காது.. என்னது? ஏன்?

கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் பயனர்களின் மேப்ஸ் டேட்டாவை தற்செயலாக நீக்கிவிட்டதாகவும், அவர்களில் சிலரால் மட்டுமே அவற்றை திரும்பப் பெற முடியும் என்றும் கூறியுள்ளது. கூகுள் நிறுவனம் மேப்ஸ் டேட்டாவை கிளவுட்டில் (Cloud) சேமிக்கும் விருப்பத்தை வழங்குகிறது. ஆனால் அது கூகுள் க்ளவுட் சர்வரில் சேமிக்கப்படும். தனிப்பட்ட தரவுகள் பகிரப்படலாம் என்கிற காரணத்தால் பலரும் இதை செய்ய விரும்பவில்லை.

இதற்கிடையில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப பிரச்சினையின் (Technical issue) காரணமாக, சில பயனர்களுக்கு, கூகுள் மேப்ஸ்-ல் உள்ள டைம்லைன் டேட்டாவை (TimelineData) டெலிட் ஆகியுள்ளது. இதன்கீழ் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரங்களை கூகுள் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

ஒருவேளை நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை (Google Account) பயன்படுத்தி கூகுள் க்ளவுட் இல் பேக்-அப் (Back-up) எடுத்திருந்தால், உங்களுடைய மேப்ஸ் டேட்டாவை எளிதாக மீட்டெடுக்க முடியும் என்று கூகுள் கூறுகிறது. மாறாக உங்கள் கூகுள் அக்கவுண்ட்டிற்கான மேப்ஸ்-ல் க்ளவுட் செட்டிங்ஸ்-ஐ நீங்கள் இயக்கவில்லை என்றால்,நீங்கள் இழந்த டேட்டாவை ஒருபோதும் திரும்ப பெற முடியாது!

கூகுள் க்ளவுட் இல் பேக்-அப் எடுத்திருந்தால் பின்வரும் படிகளை பயன்படுத்தி உங்களுடைய மேப்ஸ் ஹிஸ்டரி டேட்டவை மீது எடுக்கலாம்:
- உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் டிவைஸில் உள்ள கூகுள் மேப்ஸ்-ஐ திறக்கவும்
- ப்ரொபைல் ஐகானை (உங்கள் போட்டோவை) கிளிக் செய்யவும்
- உங்கள் டைம்லைன்-ஐ கிளிக் செய்யவும்
- இப்போது க்ளவுட் ஐகான் முடக்கப்பட்டிருப்பதை அல்லது இயக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்
- அதை எனேபிள் செய்ய பேக்கப் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

உங்கள் டைம்லைனில் என்கிரிப்ட் செய்யப்பட்ட நகலை உங்கள் அக்கவுண்டில் சேமிக்க முடியும் என்று கூகுள் கூறுகிறது. உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகி செயலற்ற நிலையில் இருக்கும்போது இந்த டேட்டாவானது வைஃபை வழியாக கூகுள் சர்வர்களுக்கு பேக்கப் எடுக்கப்படும்.

கூகுள் சந்தித்த மற்ற சமீபத்திய சிக்கல்களை பொறுத்தவரை, சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் மோடம் ஆனது மற்ற பிக்சல் 9 மாடல்களில் காணப்படும் மோடத்துடன் ஒப்பிடும் போது பழைய மாடலை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் எக்ஸினோஸ் 5300 மோடம் (Samsung Exynos 5300 modem) உள்ளதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

எக்ஸினோஸ் 5300 மோடம் என்பது கடந்த அக்டோபர் 2022 இல் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 7 சீரிஸ் (Google Pixel 7 Series) உடன் அறிமுகப்படுத்தப்பட்ட அதே மோடம் ஆகும். இது கூகுள் பிக்சல் 6 (Google Pixel 6) ஸ்மார்ட்போனின் ஷானான் ஏ5123 5ஜி (Shannon A5123 5G) மோடமின் மேம்படுத்தலாக அறிமுகமானது. இது கால் டிராப்ஸ் மற்றும் மெதுவான 5ஜி ஸ்பீட் (Call drops and slow 5G speeds.) போன்ற பொதுவான சிக்கல்களால் பாதிக்கப்பட்டதற்காக பரவலாக விமர்சிக்கப்பட்ட மோடம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Deleted Your Google Maps History Data Due To Technical Issue
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X