வானவெடி போடும் Google: மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கூகுள் அளித்த பரிசு!
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் டி20 போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து பலதரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கூகுள் பாராட்டு தெரிவிக்கும் விதமாக பரிசு ஒன்றை அளித்துள்ளது.

ஐபிஎல் 2020 இறுதிப்போட்டி
ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை அணி வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாராட்டு
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஐந்தாவது கோப்பையை மும்பை அணி கைப்பற்றியுள்ளது. மும்பை அணியின் வெற்றிக்கு முன்னாள் வீரர்களில் தொடங்கி அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் மும்பை அணி முழுமையான ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
மும்பை இந்தியன்ஸ் வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் கூகுள் தனது பங்கிற்கு பரிசளித்து பாராட்டியுள்ளது. முன்னதாக அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட ரிலீஸைக் கொண்டாடும் வகையில் கூகுள் ஒரு அம்சத்தை கொண்டு வந்தது.

தானூஸின் இன்பினிட்டி கற்கள் பதிக்கப்பட்ட கை
கூகுள் சர்ச்சில் தானூஸ் என்று தேடினால் அவெஞ்சர் வில்லன் தானூஸின் இன்பினிட்டி கற்கள் பதிக்கப்பட்ட கையுறை பக்கத்தின் மேற்புற வலது மூலையில் காண்பிக்கப்பட்டது. அதை கிளிக் செய்தால் சொடக்கு போட்டு கூகுள் ரிசல்ட்களின் பாதி துகள்களாக மறையும்படியும் மீண்டும் கிளிக் செய்தால் முழு ரிசல்ட்கள் வரும்படியாகவும் இருந்தது.

கூகுள் பக்கத்தில் வான வேடிக்கைகள்
அதேபோல் தற்போது கூகுள் சர்ச்சில் IPL, IPL2020, mumbai indians, mi vs dc போன்ற வார்த்தைகளை தேடினால் பக்கம் முழுவதும் கீழ் இருந்து வான வேடிக்கைகள் வந்து வெடிப்பது போல் காண்பிக்கப்படுகிறது. இது மும்பை இந்தியன்ஸ் வெற்றியை பாராட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications