குழந்தைகளுக்கான எளிய கோடிங் டூடுலை உருவாக்கி வெளியிட்டது கூகுள்.!

இது ஒரு ஆமையின் அசைவுகளை ப்ரோகிராம் செய்ய குழந்தைகளுக்கு உதவியது. இதன்மூலம் கணக்கு மற்றும் அறிவியலில் தங்களின் சிந்தனைகளைக் வெளிகொணர வாய்ப்புகளைப் பெற்றனர், என்றார்.

|

சிறப்பு நாட்களைக் கொண்டாடும் வகையில், கூகுல் நிறுவனம் ஒரு தனித்தன்மையுள்ள டூடுலை வெளியிடுவது வழக்கம். இந்த வரிசையில், குழந்தைகளுக்கான ப்ரோகிராமிங் மொழியின் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில், இப்போது ஒரு தனித்தன்மையான தீம்மை கூகுள் டூடுல் தேர்ந்தெடுத்துள்ளது.

குழந்தைகளுக்கான எளிய கோடிங் டூடுலை உருவாக்கி வெளியிட்டது கூகுள்.!

கோடிங்கை குழந்தைகள் கற்று கொள்ளும் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், 'கோடிங் ஃபார் கேரட்ஸ்' என அறியப்படும் தனது முதல் கோடிங் டூடுலை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. மேலும், நாம் கணினியியல் கல்விக்கான வாரத்தில் இருக்கும் நிலையில், ஒரு முயல் நண்பரின் உதவியுடன் கோடிங் எழுத பயனர்களுக்கு இந்த டூடுல் கற்றுக் கொடுக்கிறது. இது போன்ற ஒரு டூடுல் இதுவரை கண்டதில்லை.

இதில் பயனர்கள் ஒரு கேம்மை ஆடும் போதே, மறுமுறையில் ஒரு வெள்ளை நிற முயலுக்கு பல நிலைகளை கடக்க உதவும் ப்ரோகிராம் செய்யப்படும் வகையில் ஒன்றுக்கொன்று இசைந்த டூடுலாக உள்ளது. இதில் 6 நிலைகள் காணப்படுகிறது.

குழந்தைகளுக்கு ப்ரோகிராமிங் மொழியை மனதில் பதிய வைக்கும் அடிப்படையில் அமைந்த கோடிங் பிளாக்குகளை ஒன்றாக முறிப்பதன் மூலம் முயலுக்கு தேவையான கேரட்களைத் திரட்ட உதவும் ஒரு தேடலைப் பயனர் மேற்கொள்ள வேண்டும்.

ரூ.19/- முதல் ரூ.199/- வரை கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள் குழப்புகிறதா.?ரூ.19/- முதல் ரூ.199/- வரை கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள் குழப்புகிறதா.?

கூகுள் டூடுல், கூகுள் பிளாக்கி மற்றும் எம்ஐடி ஸ்கிராச்சைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் என்று மூன்று துறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து செயலாற்றி, இந்த டூடுலை அமைத்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.

இது குறித்த வரலாற்று பக்கங்களைத் திருப்பினால், கடந்த 1960-களில் குழந்தைகளுக்கான முதல் கோடிங் மொழி வடிமைக்கப்பட்ட போது, அது மிகவும் சாத்தியமற்ற முறையில் உருவாக்கப்பட்டது. ப்ரோகிராமிங் மொழியில் யாராவது வேலை செய்யும் பட்சத்தில், ஒரு கருப்பான திரையில் சிறிய பச்சை நிறத்திலான ஆமை ஒன்று சுற்றித் திரிந்து வரிகளை வரையும்.

இது குறித்து ஸ்கிராச் அணியின் தகவல் தொடர்பு இயக்குநரான சாம்பிகா பெர்னாண்டோ கூறுகையில், நீண்டகாலம் முன்பு பெர்சனல் கம்ப்யூட்டர்களின் உதவுடன் சேமர் பெப்பர்ட் மற்றும் எம்ஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து லோகோவை உருவாக்கினர்.

இது ஒரு ஆமையின் அசைவுகளை ப்ரோகிராம் செய்ய குழந்தைகளுக்கு உதவியது. இதன்மூலம் கணக்கு மற்றும் அறிவியலில் தங்களின் சிந்தனைகளைக் வெளிகொணர வாய்ப்புகளைப் பெற்றனர், என்றார்.

இந்நிலையில், தொழிற்நுட்ப வளர்ச்சியை எட்டிய இந்த நவீன காலத்தில் மேற்கண்ட நிலை கணிசமான அளவு மாற்றத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google has introduced its first-ever coding doodle known as 'Coding for Carrots' on the golden jubilee of children learning to code.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X