Home
News

கூகுள் டாக்குமெண்டில் பாதுகாப்பு குறைபாடா? மறுக்கும் கூகுள் நிறுவனம்.!

இரஷ்யாவில் உள்ள இணைய பயனர்கள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து இது போன்ற ஆவணங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதன் மூலமே இந்த பிரச்சனை முதலில் கண்டறியப்பட்டது.

By Vivek Sivanandam

கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,கூகுள் டாக்ஸ் தனது தார்மீக கொள்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என மறுத்துள்ளது. ரஷ்யாவின் பிரபல தேடுபொறியான யான்டெக்ஸ்-ல், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு உள்ள சில கோப்புகள் கிடைத்துள்ளன என்ற ரஷ்ய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை தொடர்ந்து கூகுள் நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.

கூகுள் டாக்குமெண்டில் பாதுகாப்பு குறைபாடா? மறுக்கும் கூகுள் நிறுவனம்.!

கூகுள் டாக்ஸ் மிகவும் பாதுகாப்பானவை என அந்த அறிக்கையில் கூறியுள்ள கூகுள் நிறுவனம், அந்த குறிப்பிட்ட கோப்புகள் அதன் எழுத்தாளர்களாலேயே பொதுவெளியில் பகிரப்பட்டிருக்கும் அல்லது அந்த கூகுள் டாக்ஸில் வெளியிடப்பட்ட அந்த ஆவணங்களின் ஹைபர்லிங்குகள் பொதுமக்களால் அணுகக்கூடிய வகையில் இருந்திருக்கலாம் என ரஷ்ய ஊடகத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதன் காரணமாக அந்த தனிப்பட்ட கோப்புகள் யான்டெக்ஸ் உள்ளிட்ட இணைய தேடுபொறிகள் வாயிலாக பொதுவெளியில் கிடைத்திருக்கும்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை "சேமிப்பது மற்றும் பாதுகாப்பது" தான் எங்களின் முக்கிய நோக்கம். கூகுள் டாக்குமெண்டிஸ் அதீதமாக பாதுகாக்கப்பட்ட, கூட்டு வேலைகளுக்கு பயன்படும் ஒரு கருவி மற்றும் இது சரியாக வேலை செய்கிறது.

இரஷ்யாவில் உள்ள இணைய பயனர்கள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து இது போன்ற ஆவணங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டதன் மூலமே இந்த பிரச்சனை முதலில் கண்டறியப்பட்டது. இது போல பகிரப்பட்ட சில கோப்புகளில், அந்நாட்டின் டிங்க்ஆப் வங்கியின் உள்-எச்சரிக்கை கடிதங்கள் (Internal Memo)உட்பட சில இரகசிய தகவல்களை உள்ளடக்கிய ஆவணங்களும் உள்ளன. அந்நிறுவனம் எப்படி பயனர்களிடம் அவரிகளின் பாலியல் விருப்பங்கள், இனம் மற்றும் தோற்றத்தை வைத்து பாகுபாடு காட்டுகிறது என்பது குறித்த தகவல்களும் அந்ந ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. எப்படி இருந்தாலும், அந்த வங்கி மெமோவிற்கு பொறுப்பேற்ற மறுத்து, பாகுபாட்டிற்கு அந்த ஊழியரையே குற்றஞ்சாற்றியுள்ளது.

கூகுள் டாக்குமெண்டில் பாதுகாப்பு குறைபாடா? மறுக்கும் கூகுள் நிறுவனம்.!

மற்றொருபுறம், இந்த தனிப்பட்ட ஆவணங்களை க்ராவ்லர்கள் தான் இணையத்தில் பதிவேற்றினர் என்பதை யான்டெக்ஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யான்டெக்ஸின் செய்திதொடர்பாளர் இல்யா கிராபோஸ்கி, "தற்போது யான்டெக்ஸ் இணையத்தில் லாகின் மற்றும் பாஸ்வேர்டு தேவைப்படாத இணைய பக்கங்களை மட்டுமே தேடுபொறியில் பட்டியலிடுகிறது" என கூறியுள்ளார். மேலும் அந்த குறிப்பிட்ட இரகசிய ஆவணங்கள் மற்ற தேடுபொறிகளில் கூட பட்டியலிடப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.


இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அந்நிறுவனம் கூகுள் டாக்ஸ்க்கு ஹைப்பர்லிங்க் உருவாக்குவதை நிறுத்தியுள்ளது. எனினும் இரஷ்ய மொழியில் உள்ள இணைய பத்திரிக்கையான மெடூசா கூறுகையில், யான்டெக்ஸ் நிறுவனம் திருப்தியளிக்கக்கூடிய எந்தவொரு பதிலையும் இந்த சூழ்நிலையில் அளிக்கவில்லை.

கூகுள் டாக்குமெண்டில் பாதுகாப்பு குறைபாடா? மறுக்கும் கூகுள் நிறுவனம்.!

இந்த ஆவணங்கள் சில தனிப்பட்ட மற்றும் இரகசிய தகவல்களை கொண்டிருக்கும் என்பதால் இந்த சம்பவத்திற்கு தங்களின் பாதுகாப்பு குழு கூகுளுடன் இணைந்து பணியாற்றுவதாகவ கூறியதாகவும் இந்த செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google contradicts the reports of security breach at Google Docs following the Yandex controversy: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X