Circle to Search: ரவுண்டு கட்டிய Google.. இனி கூகிளில் சர்ச் செய்ய டைப் செய்ய வேண்டியதில்லை.. புது அப்டேட்..
கூகுள் சர்ச் (Google Search) ஒரு நாளைக்கு சுமார் 8.5 பில்லியன் முறை பிராசஸ் செய்யப்படுகிறது. 1 நொடிக்கு சுமார் 99,000 சர்ச்கள் உலகளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சுமார் 2 ட்ரில்லியன் முறை கூகுள் பயன்படுத்தப்படுகிறது. இதுவொரு பெருந்தொகையாகும்.
இவை கூகுள் சர்ச் மூலம் டைப் செய்து தேடப்படும் தேடல்களின் எண்ணிக்கையாகும். கூகுள் சர்ச்சில் டைப் (Google search type) செய்து ஒரு தகவலை தேடுவதை போல, நீங்கள் பார்க்கும் வீடியோ (video) அல்லது புகைப்படத்தில் (images) இருக்கும் தகவல்களை ரிவர்ஸ் இமேஜ் மூலம் சர்ச் (reverse image search) செய்ய அனுமதிக்கும் கூகுள் லென்ஸ் (Google Lens) அம்சத்தை கூகுள் சமீபத்தில் அறிமுகம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது.

கூகுள் லென்ஸ் (Google Lens) அம்சத்தை ஒரு மாதத்திற்கு மக்கள் சுமார் 12 பில்லியன் முறை பயன்படுத்தி AI உதவியுடன் இமேஜ் சர்ச் (Google Image Search) செய்கிறார்கள் என்று கணக்கு தெரிவிக்கிறது. தெரியாதவர்களுக்கு, கூகுள் லென்ஸ் என்பது காட்சி தேடல் கருவியாகும். இது AI அம்சத்தை பயன்படுத்தி, படங்களில் உள்ள பொருட்களையும் (objects) டெக்ஸ்ட்களையும் (text) கண்டறியும்.
கூகுள் சர்ச் AI எத்தனை முறை ஒருநாளைக்கு பயன்படுத்தப்படுகிறது(How many times does Google search AI been used per day):
இந்த அம்சத்தை தொடர்ந்து, கூகுள் மீண்டும் ஒரு புதிய அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது. இப்போது கூகுள் நிறுவனம் அதன் சர்ச் கருவியை (google search tool) அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. இனி நீங்கள் கூகுள் சர்ச் செய்ய டைப் செய்ய வேண்டியதில்லை, உங்கள் டிஸ்பிளேவில் (display) இருக்கும் தகவலை வட்டமிட்டு (circle) சுட்டிக்காட்டினால் போது, அந்த பொருள் அல்லது டெக்ஸ்ட் தொடர்பான தகவல்களை இனி கூகுள் உங்களுக்கு காண்பிக்கும்.
இந்த அம்சத்தை கூகுள் நிறுவனம் "சர்க்கிள் டு சர்ச்" (Circle to Search) என்று பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Circle to Search படி, நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஹோம் பட்டனை லாங் பிரஸ் செய்தால், Circle to Search அம்சம் ஆக்டிவேட் (activate) செய்யப்படும். இப்போது உங்கள் டிஸ்பிளேவில் தெரியும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதை வட்டமிட்ட வேண்டும்.

சர்க்கிள் டு சர்ச் என்றால் என்ன? (What is Circle to Search):
நீங்கள் வட்டமிட்டு சுட்டிக்காட்டிய மறுநொடியில், அந்த பொருள் தொடர்பான தகவலை கூகுள் AI தேடி, உங்களுக்கு அதுதொடர்பான தகவலை வழங்கும். இது ஒரு பொருளாக இருக்க வேண்டும்பத்தில்லை. எழுத்து வடிவமாக இருந்தாலும், நீங்கள் பார்க்கும் வீடியோ அல்லது இமேஜில் இருக்கும் வார்த்தை தொடர்பான தகவல்களை காண்பிக்கும்.
இந்த புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் இப்போது சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் வரும் ஜனவரி 31ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது. இது முதற்கட்டமாக சாம்சங் பிரீமியம் ஸ்மார்ட்போன் (premium smartphones) மற்றும் கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8 Series) சாதனங்களில் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்க்கிள்-டு-சர்ச் (Circle To Search) அம்சம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மேலும் பல பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் (premium android smartphones) கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் ஆப்ஸில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மல்டி சர்ச் தேடல் செயல்பாடு அமெரிக்காவில் உள்ள ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS பயனர்களுக்கு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








