பெயர் மற்றும் நிறங்கள் மூலம் ப்ரவுசர் டேப்களை குழுவாக இணைக்கும் வசதியை வழங்கும் கூகுள் குரோம்!

|

நமது கணிணி அல்லது லேப்டாப்பில் மணிக்கணக்கில் தொடர்ந்து வேலை செய்யயும்போது பொதுவாக நமக்கு வலை உலாவியில் (வெப் ப்ரவுசர்) ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யவேண்டியுள்ளது (மல்டி டாஸ்க்கிங்)..

ஒரே நேரத்தில் பல ப்ரவுசர் டேப்களை திறந்துவைத்து

இந்த நடைமுறையில், வழக்கமாக ஒரே நேரத்தில் பல ப்ரவுசர் டேப்களை திறந்துவைத்து பணியாற்றுவது தான் பொதுவாக நடைபெறும். தற்போது கூகுள் நிறுவனம் அதன் உலாவியான கூகிள் குரோம்-ல் இதுபோன்ற ப்ரவுசர் டேப்களை சிறப்பாக நிர்வகிக்க விரும்புகிறது.

பதிப்பானது‌ ‘டேப் குரூப்ஸ்'

கூகிள் குரோம்-ன் பீட்டா பதிப்பானது‌ ‘டேப் குரூப்ஸ்' என்ற புதிய அம்சத்தைப் பெற்றுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், கூகுள் குரோம் பயனர்கள் பல டேப்களை ஒரே குழுவாக இணைத்து அவற்றை ஒரே டேப் ஆக ஒழுங்கமைக்க முடியும்.

அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?

 தனிப்பட்ட பெயர் ,

இந்த டேப் குரூப்களூக்கு தனிப்பட்ட பெயர் , ஈமோஜிகள் மற்றும் நிறங்களை வழங்கி அவற்றை எளிதாக வேறுபடுத்தி பணிகளை சுலபமாக்க இந்த புதிய அம்சம் குரோம் பயனர்களை அனுமதிக்கிறது‌. பல டேப் குழுக்களை உருவாக்கி அவற்றை ஒற்றை டேப் போல இயக்கலாம். எளிமையான கிளிக் மூலம் டேப்களை தேவையான இடத்திற்கு இழுத்து எளிதாக மறுவரிசைப்படுத்தவும் முடியும்.

வசதிகள் இத்துடன்

இந்த புதிய அம்சத்தின் வசதிகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. ஒதுக்கப்பட்ட குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு ஒரு டேப்-ஐ மாற்ற பயனர்கள் முடிவு செய்தால், இப்போது குரோமில் டேப்களை இடமாற்றம் செய்யப்படுவது போல, இந்த புதிய செயல்பாட்டினை கொண்டு ஒரு எளிய கிளிக் மற்றும் ஸ்லைடு மூலம் அவ்வாறு செய்ய அனுமதிக்கும் . எந்தவொரு குழுவிலிருந்தும் டேப்-ஐ கிளிக் செய்து பிடித்துக் கொண்டு அதை மற்றொரு குழுவில் ஸ்லைடு செய்து இணைக்க செய்யலாம்.

 பொருள், ஒரு

டேப் குழுக்கள் குரோமில் பின் செய்யப்பட்ட டேப்கள் போல செயல்படும். இதன் பொருள், ஒரு குழுவில் உள்ள டேப்களை மூடிய பின் குரோம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் அவற்றின் வலைப்பக்கங்களைத் தக்க வைத்துக் கொள்ளும்.

குரோம் பயனர்கள்

ஒரு குழுவில் டேப்-ஐ சேர்க்க, குரோம் பயனர்கள் டேப் மீது வலது கிளிக் செய்து, மெனுவில் இரண்டாவது தேர்வான ‘புதிய குழுவில் சேர்'-ஐ (add to new group) தேர்ந்தெடுக்க வேண்டும். அதை கிளிக் செய்தவுடன், டேப் குழு பெயர் மற்றும் அதனுடன் முன்னிலைப்படுத்த விருப்பும் வண்ண விருப்பங்களுக்கான பெயர் புலத்துடன் உரையாடல் பெட்டி ஒன்று திறக்கும். பயனர்களுக்கு ‘குழுவில் புதிய டேப்', ‘குழுவை கலைத்தல்', ‘குழுவை மூடல்', ‘குழுவை புதிய சாளரத்தில் திறத்தல்' மற்றும் பல உள்ளிட்ட பல வசதிகளும் பயனர்களுக்குக் கிடைக்கும்.

அம்சம் அடுத்த வாரத்திற்குள்

இந்த புதிய ‘டேப் குரூப்' அம்சம் அடுத்த வாரத்திற்குள் கூகுள் குரோம் பயனர்களை சென்றடையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் குரோம் ஓஎஸ், விண்டோஸ், மேக் மற்றும் லினெக்ஸ் என அனைத்து வரவிருக்கும் பதிப்புகளிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Google Chrome Will Let You Group Browser Tabs With Name And Colour Very Soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X