கூகுள் க்ரோம் வாசிகளுக்கு ஒரு "நிரந்தரமான" குட் நியூஸ்.!

கூகுள் க்ரோம் பயனர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நகர்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

|

கூகுள் க்ரோம் பயனர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நகர்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் இன்டர்நெட் ப்ரவுஸர் ஆன கூகுள் க்ரோமில் ஆடியோ உடனான ஆட்டோ பிளே வீடியோக்களை நிரந்தரமாக 'பிளாக்' செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் க்ரோம் வாசிகளுக்கு ஒரு

இந்த மாற்றமானது கூகுள் க்ரோமின் அடுத்த பதிப்பில் (அதாவது வெர்ஷன் 66) கொண்டுவரப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. தற்போது வரையிலாக, கூகுள் க்ரோம் பிரவுசரில் உள்ள விடியோக்கள் ஆனது தானாகவே பிளே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த மாற்றமானது க்ரோம் 64 பதிப்பில் கொண்டுவரப்படும்படி திட்டமிடப்பட்டிருந்தன. அது சாத்தியமாகி இருந்தால் கடந்த ஜனவரி மாதம் முதலே ஆடியோ உடனான ஆட்டோ பிளே வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, இந்த மாற்றம் கூகுள் க்ரோம் பீட்டா பதிப்பில் உருட்டப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் அடுத்த ஒரு சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும்.

கூகுள் க்ரோம் வாசிகளுக்கு ஒரு

பயனர்களிடம் இருந்து வந்த தொடர்ச்சியான புகார்களை தொடர்ந்து, ஆட்டோ பிளே ஆகும் வீடியோக்களை கொண்டுள்ள வலைத்தளங்களை நிரந்தரமாக 'ம்யூட்' (Mute) செய்யுமொரு அம்சம் வெளியிடப்படும் என்று கூகுள் (கடந்த ஜனவரி மாதம்) அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

How to check PF Balance in online (TAMIL)

அத்துடன் சேர்த்து, மாறுவேடமிட்ட (போலி) இணைப்புகள், பாப்-அப்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்குள் நுழைய அனுமதிக்கும் விண்டோக்கள் மற்றும் டாப்களை கண்டுபிடிப்பதற்க்கான ஒரு அம்சமும் அறிமுகமாகும் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, நிறுவனத்தின் ஹோம்-பில்ட் ஆட் பிளாக்கரை, க்ரோமில் இன்ஸ்டால் செய்வதின் மூலமாக, ஆன்லைனில் தோன்றும் "ஊடுருவும்" தன்மைமிக்க விளம்பரங்களை ஆட்டோமெட்டிக்காக தடுக்கலாம் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Chrome officially announces to permanently block audio-enabled autoplay videos. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X