என்ன சொல்றீங்க.! 2023-ல் Google Chrome இயங்காதா? இது பாதுகாப்பு சிக்கலை அதிகரிக்குமா?

|

கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசர் பயன்படுத்தும் நபரா நீங்கள்? உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் நீங்கள் Google Chrome Browser தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த பதிவை மிகவும் கவனமாகப் படியுங்கள்.

சமீபத்தில் வெளியான ஒரு புதிய தகவலின் படி, வரும் 2023 ஆம் ஆண்டு முதல் சில லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்களில் இனி Google Chrome பிரௌசர் அம்சம் பாதுகாப்பாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எது.! இனி Google Chrome அம்சம் வேலை செய்யாதா?

எது.! இனி Google Chrome அம்சம் வேலை செய்யாதா?

வருகின்றன 2023 ஆம் ஆண்டு முதல் துவங்கி, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 இல் இயங்கும் சாதனங்களில் இனி Google Chrome அம்சம் வேலை செய்வதை நிறுத்தும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஃபோரம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனமான கூகிளின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் Google Chrome வெப் பிரௌசரை தொடர்ந்து பயன்படுத்த Windows 10 அல்லது 11 உடன் புதிய அமைப்பைப் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் 2023 முதல் துவங்கி Google Chrome பாதுகாப்பாக இருக்காது?

யாருக்கெல்லாம் 2023 முதல் துவங்கி Google Chrome பாதுகாப்பாக இருக்காது?

கவனிக்க, வருகின்ற பிப்ரவரி 7, 2023 அன்று தற்காலிகமாகத் திட்டமிடப்பட்ட Google Chrome v110 வெளியீட்டைத் தொடர்ந்து, பழைய Google Chrome சேவைகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது Windows 7 ESU மற்றும் Windows 8.1 நீட்டிக்கப்பட்ட ஆதரவிற்கான Microsoft இன் ஆதரவுடன் ஜனவரி 10, 2023 அன்று செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தேதிக்கு பிறகு Google Chrome பழைய விண்டோஸ் சாதனங்களில் முழு பாதுகாப்புடன் இயங்காது.

அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!

இது பற்றி கூகுள் நிறுவனம் என்ன சொல்கிறது? Chrome இனி வேலை செய்யுமா? இல்லையா?

இது பற்றி கூகுள் நிறுவனம் என்ன சொல்கிறது? Chrome இனி வேலை செய்யுமா? இல்லையா?

Google Chrome இன் பழைய பதிப்புகள் Windows 7 மற்றும் 8.1 உடன் PC-களில் தொடர்ந்து வேலை செய்யும் என்று கூகுள் கூறுகிறது.

ஆனால், பழைய வெர்ஷன் வெப் பிரௌசர்கள் 2023 முதல் எந்தவொரு புதுப்பிப்புகளையும் பெறாது என்று நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது.

அதாவது, அடுத்தடுத்து வரக்கூடிய அப்டேட்கள் என்று எதையும் நிறுவனம் வெளியிடாது என்பதே இதற்கான அர்த்தமாகும்.

சரியான அப்டேட் இல்லதாக பிரௌசரை யூஸ் செய்வது பாதுகாப்பானதல்ல என்பதையும் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Chrome இன் புதிய பதிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா?

Chrome இன் புதிய பதிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா?

நீங்கள் தற்போது Windows 7 அல்லது Windows 8.1 இல் இருந்தால், சமீபத்திய பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் Chrome அம்சங்களை நீங்கள் தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்ய, அந்தத் தேதிக்கு முன் ஆதரிக்கப்படும் Windows வெர்ஷனிற்கு செல்லுமாறு கூகிள் அதன் பயனர்களை ஊக்குவிக்கிறது.

Google Chrome இன் அனைத்து பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் பெற, Chrome இன் புதிய பதிப்புகளைப் பயனர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

ஜனவரி 10, 2023 இந்த தேதியை மறக்காதீர்கள்.!

ஜனவரி 10, 2023 இந்த தேதியை மறக்காதீர்கள்.!

இதற்கிடையில், மைக்ரோசாப்ட் Windows 7 ESU (Extended Security Update) மற்றும் Windows 8.1 -க்கான ஆதரவை ஜனவரி 10, 2023 அன்று நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Windows 7 ஆதரவு ஜனவரி 2020 இல் முடிவடைந்தாலும், அது சில பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 8.1 பயனர்கள் இன்னும் புதிய OS-க்கு மாறவில்லை என்றால், உடனே மாறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் எந்த ESU-களையும் பெற மாட்டார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?

இப்படி அப்டேட் செய்தால் சிஸ்டம் ஸ்லோவ் ஆகுமா?

இப்படி அப்டேட் செய்தால் சிஸ்டம் ஸ்லோவ் ஆகுமா?

மைக்ரோசாப்ட் பயனர்கள் விண்டோஸ் 11 உடன் இயங்கும் புதிய லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் சாதனங்களை வாங்கப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ஏனெனில் பழைய சாதனங்களில் புதிய OS-க்கு மேம்படுத்துவது உங்கள் சிஸ்டம்மை மெதுவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Windows 8.1 இல் இயங்கும் கம்ப்யூட்டர்களில் கூகிள் குரோம் இன்னும் செயல்படும் என்று Microsoft கூறுகிறது. ஆனால், இது பாதுகாப்பானதல்ல.

சிக்கல்கள் இதில் அதிகமாக இருக்கிறதா?

சிக்கல்கள் இதில் அதிகமாக இருக்கிறதா?

ஆனால், மைக்ரோசாப்ட் இனி எந்தச் சிக்கல், மென்பொருள் புதுப்பிப்புகள் அல்லது பாதுகாப்பு புதுப்பிப்புகள் அல்லது திருத்தங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்காது.

ஒருவேளை, Windows 8.1 இல் இயங்கும் கம்ப்யூட்டர் இல் தொடர்ந்து குரோம் பயன்படுத்துகிறோம் என்றால் என்னவாகும்?

முன்பே சொன்னது போல, உங்களுக்கு மென்பொருள் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எதுவும் கிடைக்காது.

இதனால், உங்கள் PC வைரஸ்கள் மற்றும் மால்வேர்களால் அதிகமாகத் தாக்கப்படக்கூடிய ஆபத்து மற்றும் சிக்கல்கள் இதில் அதிகமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Google Chrome Browser Will Stop Working On Some Laptop and Computers From Starting 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X