கூகுள் க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.!

இந்த சமீபத்திய வெப் ப்ரவுஸர் அப்டேட்டில், பல வகையான புதிய அம்சங்கள் மற்றும் கொள்கை (பாலிசி) மாற்றங்களுடன் சேர்த்து ஏகப்பட்ட வடிவமைப்பு மாற்றங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

|

கூகுள் தனது ஜிமெயில் பயன்பாட்டை இன்னும் எளிமையாக மற்றும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்றும் முனைப்பின் கீழ், அதன் வெப் வெர்ஷன் மற்றும் மொபைல் ஆப் வெர்ஷனில், க்விக் ரிப்ளை, ஆப்லைன் சப்போர்ட் போன்ற பல அம்சங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலைபாட்டில், சத்தமின்றி கூகுள் க்ரோம் அப்டேட்டை நிகழ்த்தியுள்ளது.

க்ரோமில் புதிய அம்சங்கள் இணைப்பு; சத்தமின்றி வேலை பார்த்த கூகுள்.!

அதன் மேக், விண்டோஸ், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட அனைத்து மேடைகளுக்கான க்ரோம் 66 அப்டேட்டை கூகுள் நிறுவனம் உருட்டியுள்ளது. இந்த சமீபத்திய வெப் ப்ரவுஸர் அப்டேட்டில், பல வகையான புதிய அம்சங்கள் மற்றும் கொள்கை (பாலிசி) மாற்றங்களுடன் சேர்த்து ஏகப்பட்ட வடிவமைப்பு மாற்றங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பயன்படுத்துவது எப்படி.?

பயன்படுத்துவது எப்படி.?

ஆட்டோ பிளே கன்டென்டை பிளாக் செய்யும் அம்சம், க்ரோமில் ஏற்கனவே 'சேவ்' செய்து வைத்திருந்த பாஸ்வேர்டை டவுன்லோட் செய்ய உதவும் எக்ஸ்போர்ட் பாஸ்வேர்ட் அம்சம் மற்றும் இதர செக்யூரிட்டி அம்சங்கள் உட்பட கூகுள் க்ரோம் 66 பதிப்பில் பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது, அவைகளை பற்றிய மேலும் பல விவரங்களையும், அவைகளை பயன்படுத்துவது எப்படி.? என்பதையும் விரிவாக காண்போம்.

ஆட்டோ-பிளே கன்டென்ட்

ஆட்டோ-பிளே கன்டென்ட்

ஜனவரி மாதத்தில் உருட்டப்பட்ட க்ரோம் 64 வெர்ஷனில், க்ரோம் தளத்தில் காட்சிப்படும் ஒரு ஆட்டோ பிளே கன்டென்ட்டை (வீடியோ) ம்யூட் செய்ய அனுமதிக்கும் ஒரு அம்சத்தினை வெளியிட்டது. தற்போது உருட்டப்பட்டுள்ள க்ரோம் 66 வெர்ஷனில் இந்த குறிப்பிட்ட அம்சம் இன்னும் விரிவடைகிறது. அதாவது க்ரோம் 66-ல் காட்சிப்படும் ட்டோ பிளே கன்டென்ட்டை பிளாக் செய்யும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

ம்யூட் செய்ய மட்டுமே உதவும்.?

ம்யூட் செய்ய மட்டுமே உதவும்.?

அதாவது க்ரோம் 66 ஆனது தளத்தில் தோன்றும் ஆடியோ பாப் அப் விளம்பரங்களையும் மற்றும் பிற அனிமேஷன்களையும் ஆட்டோமெட்டிக்காக பிளாக் செய்ய அனுமதிக்கிறது. அதை குறிப்பிட்ட கஸ்டமைஸ் விருப்பத்தின் கீழ் இயக்கலாம். இருப்பினும், இந்த அம்சம் குறிப்பிட்ட வீடியோவின் ஆடியோவை ம்யூட் செய்ய உதவுமே தவிர விளம்பரத்தை மறைக்க உதவாது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

பாஸ்வேர்ட் எக்ஸ்போர்ட்

பாஸ்வேர்ட் எக்ஸ்போர்ட்

க்ரோம் 6 வெர்ஷனில் ஒரு முற்றிலும் புதிய 'பாஸ்வேர்ட் எக்ஸ்போர்ட்' அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. 'மேனேஜ் பாஸ்வேர்ட்' என்கிற என்ற விருப்பத்தின் கீழ், இந்த 'பாஸ்வேர்ட் எக்ஸ்போர்ட்' அம்சம் இடம்பெற்றுள்ளது. இது நீங்கள் க்ரோமில் சேமித்து வைத்திருக்கும் பாஸ்வேர்ட் பட்டியலை உங்களுக்கு வெளிப்படுத்தும். அல்லது நேரடியாக, செட்டிங்ஸ் > அட்வான்ஸ்டு > பாஸ்வேர்ட்ஸ் அண்ட் பார்ம்ஸ் > மேனேஜ் பாஸ்வேர்ட்ஸ் உள்நுழைய அங்கு சேவ்டு பாஸ்வேர்ட்ஸ்-ன் கீழ் க்ரோமில் சேமித்து வைத்திருக்கும் பாஸ்வேர்ட் பட்டியல் அணுக கிடைக்கும்.

செக்யூரிட்டி அம்சங்கள்

செக்யூரிட்டி அம்சங்கள்

பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரையில், க்ரோம் 66-ல், ஜூன் 1, 2016 க்கு முன்னர் வழங்கப்பட்ட சைமென்டெக் சான்றிதழ்கள் நீக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பாதுகாப்புத் தரங்களை பின்பற்றுவதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வெர்ஷன், ஸ்பெக்டர் CPU பாதிப்புகளை தடுப்பதற்கான புதிய தடுப்பு நுட்பத்தை தன்னுள் கொண்டுள்ளது. உடன் சைட் ஐசோலோஷன் எனும் அம்சமும் கூகுள் 66-ல் இணைக்கப்பட்டுள்ளது. இது வெவ்வேறு செயல்முறையின் கேள், தளங்களில் இயங்கும் ஒரே பக்கங்களுக்கு இடையே எந்த தகவல் பரிமாற்றமும் நிகழ்ந்து விடமால் பார்த்துக் கொள்ளும்.

புதிய ஜிமெயில் டிசைன் மற்றும் அம்சங்கள்.!

புதிய ஜிமெயில் டிசைன் மற்றும் அம்சங்கள்.!

ஜிமெயிலில் இடம்பெறவுள்ள புதிய அம்சங்களை பொறுத்தவரை, வெளியான ஸ்க்ரீன் ஷார்ட்டின் படி, ஜிமெயிலின் புதிய டிசைன், எளிய ஆப்ஸ், ஸ்மார்ட் ரிப்ளை, ஸ்னூஸ் செய்யும் விருப்பம் மற்றும் ஆப்லைன் சப்போர்ட் போன்ற அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிமெயில் டிசைன் மற்றும் அம்சங்களானது, அதன் வெப் வெர்ஷனில், வருகிற ஜூன் 2018-ல் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமெயிலின் கீழே ஆட்டோ ரிப்ளை.!

இமெயிலின் கீழே ஆட்டோ ரிப்ளை.!

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வழியாக வெளியான மற்றொரு அறிக்கையானது, டெக் க்ரஞ்ச் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புதிய மாற்றங்களை இன்னும் கூடுதல் விவரத்தோடு காட்டுகிறது. அது ஜிமெயில் ஆப்பின் புதிய இன்டர்பேஸ், புதிய ஐகான்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற இமெயிலின் கீழே இடம் பெற்றுள்ள ஆட்டோ ரிப்ளை விருப்பம், மேல் வலது பகுதியில் உள்ள கூகுள் கீப், கேலண்டர், ஜிமெயில் டாஸ்க்ஸ் போன்ற பல அம்சங்களை வெளிப்படுத்தி உள்ளது.

"டீபால்ட், "கம்போர்ட்டபில்" மற்றும் "காம்பாக்ட்".!

எல்லாவற்றிக்கும் மேலாக, கூகுள் நிறுவனம் அதன் ஜிமெயிலில் வேறுபட்ட லே-அவுட்களை தேர்வு செய்யும் ஒரு விருப்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதாவது "டீபால்ட், "கம்போர்ட்டபில்" மற்றும் "காம்பாக்ட்" என மொத்தம் மூன்று லே-அவுட்கள் இடம்பெறும். அறிக்கை படி, டீபால்ட் லே-அவுட் ஆனது கிடைக்கப்பெற்றுள்ள ஒரு இமெயிலில் உள்ளே அட்டாச் செய்யப்பட்டுள்ள ஃபைலின் வகை என்ன என்பதை இன்பாக்ஸிலேயே காண்பிக்கும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
பேப்பர் கிளிப் ஐகான்.!

பேப்பர் கிளிப் ஐகான்.!

கம்போர்ட்டபில் லே-அவுட்டை பொறுத்தவரை, கிடைக்கப்பெற்ற இமெயில் உள்ள அட்டாச்சமெண்டை, ஒரு பேப்பர் கிளிப் ஐகான் வடிவில் காட்டும். இறுதியாக உள்ள காம்பாக்ட் லே-அவுட் விருப்பமானது, கம்போர்ட்டபில் லே-அவுட்டை ஒத்திருக்கிறது, ஆனால் இமெயிலின் செங்குத்தான வெற்றிடத்தை குறைத்து காட்டும்.

வரும் மாதங்களில் பீட்டா வெர்ஷனில்.?

வரும் மாதங்களில் பீட்டா வெர்ஷனில்.?

இந்த மாற்றங்கள் ஜிமெயில் ஆப்பில் எப்போது வெளியாகும் என்பது பற்றி எந்த உறுதிபடும் இல்லை. இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் சோதனை நோக்கத்தின் கீழ், வரும் மாதங்களில் பீட்டா வெர்ஷனில் உருட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது சார்ந்த பல அதிகாரபூர்வ அறிவிப்புகளை வரும் மே மாதம் நிகழும் கூகுள் ஐ/ ஓ டெவலப்பர்களின் மாநாட்டில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Google Chrome 66 With Export Password Feature is Now Rolling Out. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X