ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு.!

எனவே ஆண்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் நாடுகளில் எல்லாம் ஒழுங்குமுறை ஆணையங்கள் அதனை தொடர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை செய்து வருகின்றன.

|

மொபைல் போன் சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆண்ட்ராய்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் நாடுகளில் எல்லாம் ஒழுங்குமுறை ஆணையங்கள் அதனை தொடர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை செய்து வருகின்றன.

ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு இனி $40 கட்டணம் : கூகுள் வைத்த புதிய ஆப்பு

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி,கூகுள் நிறுவனம் ஆண்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கருவிக்கும் 40 டாலர் கட்டணம் விதிக்கவுள்ளதாக தெரிகிறது.

ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு $40 கட்டணம் எதனால்?

ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு $40 கட்டணம் எதனால்?

ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு விதித்துள்ள அபராதத்தின் காரணமாகவே அந்நிறுவனம் விதிகளை திருத்தியுள்ளது. தற்போது கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிம கட்டணம் வசூலிக்கவுள்ளது.அந்த ஸ்மார்ட்போனில் உள்ள சில கூகுள் செயலிகளும் இந்த கட்டணத்தில் அடக்கம்.

 40 டாலர்

40 டாலர்

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி ஆண்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தபடும் ஒவ்வொரு கருவிக்கும் அதிகபட்சமாக 40 டாலர் உரிம கட்டணமாக (Licensing Fee) வசூலிக்கப்படும் என தெரிகிறது.

ஐரோப்பிய யூனியன் அபராதம் எதற்கு?

ஐரோப்பிய யூனியன் அபராதம் எதற்கு?

ஆண்ட்ராய்டு சந்தையில் முன்ணணியில் இருப்பதை பயன்படுத்திகொண்டு, பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் வலுகட்டாயமாக கூகுள் சர்ச் மற்றும் குரோம் செயலிகளை திணித்ததாக ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு கடந்த ஜூலை மாதம் அபராதம் விதித்தது. இந்த இரு செயலிகளை திணித்ததிற்கு கைமாறாக, அந்நிறுவனங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள உரிமம் வழங்கியது.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

இது ஆரோக்கியமான போட்டிக்கு எதிராக இருப்பதாக கருதிய ஐரோப்பிய ஆணையம் அபராதம் விதித்துள்ளது. இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையிலும், ஐரோப்பிய ஆணையத்தின் விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் தனது உரிம விதிகளில் திருத்தங்கள் செய்ய முடிவெடுத்துள்ளது. இங்கு தான் உரிமம் தொடர்பான பிரச்சனையை எழுத்துள்ளது. ஏனெனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மட்டும் என வைத்துக்கொண்டால், அதில் எந்தவொரு கூகுள் செயலிகளும் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்படாமல் முழுவதும் ஓபன் சோர்ஸாக மற்றும் இலவசமாக கிடைப்பது. ஆனால் இதை பயனர்கள் பயன்படுத்தும் வகையில் கொடுக்க வேண்டும் எனில், சில செயலிகள் மற்றும் சேவைகளை சேர்க்க வேண்டும். ஆயினும் இந்த செயலிகள் ஓபன் சோர்ஸாகவோ அல்லது இலவசமாகவோ கிடைப்பதில்லை என்பதால், அவற்றிற்கு உரிமம் வாங்குவது இன்றியமையாதது.

கூகுள் செயலி

கூகுள் செயலி

எனவே சமீபத்திய ஒப்பந்தப்படி பின்வரும் நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரும், தங்களது போனில் ஏதேனும் ஒரு கூகுள் செயலியை(எ.கா சர்ச் இன்ஜின்) சேர்க்க விரும்பினால், குரோம்,மேப்ஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கூகுள் செயலிகளையும் இணைக்க வேண்டும். இதற்கு கைமாறாக, உரிமம் வழங்க எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூகுள் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது இந்த விதிகளை பின்பற்ற விரும்பவில்லை எனில், உரிமத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஜெர்மனி,நார்வே, நெதர்லாந்து

ஜெர்மனி,நார்வே, நெதர்லாந்து

ப்ளே ஸ்டோரையும் உள்ளடக்கிய இந்த தொகுப்பிற்கான கட்டணம் ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடுகிறது. ஜெர்மனி,நார்வே, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள், தங்களின் கருவிகளின் திரையின் பிக்சல் 500ppi க்கு அதிகமாக இருந்தால் 40டாலரும், 400முதல்500ppi வரை இருந்தால் 20டாலரும், 400ppiக்கு குறைவாக இருந்தால் 10டாலரும் என ஒவ்வொரு கருவிக்கும் கட்டணமாக செலுத்தவேண்டும்.

2.5 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்

2.5 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்

மற்ற நாடுகளில் குறைபட்சமாக ஒவ்வொரு கருவிக்கும் 2.5 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும். டேப்லெட்-ஐ பொறுத்தவரை, ஐரோப்பிய யூனியன் முழுவதும் ஒரேமாதிரியாக உரிமகட்டணம் 20டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட சில கூகுள் செயலிகளை இன்ஸ்டால் செய்ய தவிர்த்து, சர்ச் என்ஜின் மற்றும் குரோம் செயலிகளை மட்டும் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்ய ஒப்புக்கொண்டால், உரிம கட்டணங்களை தவிர்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
Google To Charge 40 Per Device For Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X