கூகுள் "தேடுதல்" பாரபட்சமாக நடந்து கொள்கிறது: வெள்ளை மாளிகைக்கு சுந்தர் பிச்சை விசிட்.!
பின்பு ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவரான லாரி குட்லாவை சந்தித்து, சர்சைக்கு உள்ளாகி இருக்கும் இந்த விவகாரம் குறித்து விளக்கியுள்ளார் சுந்தர்.
விரைவில் அமெரிக்காவில் மிட்-டெர்ம் தேர்தல்கள் நடக்க இருக்கிறது, மேலும் இதனால் அதிரபர் ட்ரம்ப் அங்கமாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் பிரசாரங்கள் சூடு பிடித்து வருகின்றன.

மேலும் குடியரசுத் கட்சியைக் சேர்ந்த பதிவுகளை கூகுள் வேண்டுமென்றே மட்டுப்படுத்துகிறது என்று கூகுள் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் அமெரிக்க அரசியல் களத்தில் பூதாகரமெடுத்துள்ள நிலையில், கூகுள்
நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அவர்கள் வெள்ளை மாளிகைக்க விசிட் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் தேடுதலில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று தனது குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்நிலையில் தான் சுந்தர் பிச்சை வெள்ளை மாளிகைக்கு விசிட் அடித்துள்ளார்.

வெள்ளை மாளிகை
பின்பு ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவரான லாரி குட்லாவை சந்தித்து, சர்சைக்கு உள்ளாகி இருக்கும் இந்த விவகாரம் குறித்து விளக்கியுள்ளார் சுந்தர். மேலும் இவருடனான சந்திப்பை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர்களிவ் ஒருவர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்கக்து.

இணையதளம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயங்கள
மேலும் நடந்த இந்த சந்திப்பில் இணையதளம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. அதன்படி சீக்கிரமே அதிபர் ட்ரம்ப் தலைமையிலான வட்டமேசை சந்திப்பில் பங்கேற்பதற்கும் சுந்தர் பிச்சை ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

சுந்தர் பிச்சை
வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்னர் சுந்தர் பிச்சை, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடனும் சந்தித்து,பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது மக்கள் பிரதிநிதிகள், ‘சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து எங்கள் அனைவருக்கும் பயம் உள்ளது' என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எங்கள் நிறுவனம் யாருடைய தரவுகளையும் சென்சார் செய்யும் நோக்கில் செயல்படவில்லை,எங்கள் தளத்தில் பாரபட்சம் வராத அளவிற்கு நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று பிச்சை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications