Home
News

அடேங்கப்பா.. கிடுகிடுவென உயர்ந்த கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் தற்போது அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சையின் (Google CEO Sundar Pichai) சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது தமிழ்நாட்டில் பிறந்து இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஆகிய இரண்டிற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை. அதுவும் இவர் எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்து, கடின உழைப்பாலும் தொடர் முயற்சியாலும் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

அடேங்கப்பா.. கிடுகிடுவென உயர்ந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு..

இவரது திறமையால் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். தற்போது அவர் இந்த பதவிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். குறிப்பாக ஒரு நிறுவனத்தில் மிக நீண்ட காலம் உயர் பதவியைச் சுந்தர் பிச்சை வகித்து வருகிறார்.

குறிப்பாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றது முதல் இப்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. பின்பு கடந்த 2023-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 86.5 லட்சம் கோடி) அதிகமாக உள்ளது. முன்பு கூறியது போல் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியது.

தற்போது இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கும் 120 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தை இது வழங்கி உள்ளது.

அதேபோல் கூகுள் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தி உள்ளது. தற்போது ப்ளூம் பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்து உள்ளது.

இதுதவிர போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ. 1.2 பில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார். மேலும் ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனை. தற்போது இந்த சாதனையைச் சுந்தர் பிச்சை நிகழ்த்தி தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலை நாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. கிடுகிடுவென உயர்ந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு..

இந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், 2025-ல் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் நன்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும்,பயனர் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி (Gemini) ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு என்று கூறினார் சுந்தர் பிச்சை.

மேலும் கடந்த சில மாதங்களாகப் பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு அதிக வரவேற்பு உள்ளது. இருப்பினும் 2025-ல் இடைவெளியை சரி செய்வதற்கும், முதலிடத்தைத் தக்க வைப்பதற்கும் சில வேலைகளை நாம் செய்து முடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichais net worth hits 1.1 billion after Alphabets market rally
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X