ராணுவ பிரச்சனையில் சிக்கிய கூகுள்: தொடர்ந்து சுந்தர் பிச்சையிடம் விசாரணை.!
கூகுள் நிறுவனம் சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான ஆராய்ச்சியில் முதலீடு செய்துவருகிறது. இந்த ஏஐ ஆய்வகங்கள் உலகம் முழுவதும் 18 இடங்களில் பரந்துவிரிந்துள்ளன.
கூகுள் நிறுவனம் சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான ஆராய்ச்சியில் முதலீடு செய்துவருகிறது. இந்த ஏஐ ஆய்வகங்கள் உலகம் முழுவதும் 18 இடங்களில் பரந்துவிரிந்துள்ளன. அவற்றில் ஒரு ஏஐ ஆய்வகம் 2017 ல் சீனாவின் பெய்ஜிங்கில் செயல்பட்டுவருகின்றது. அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்பதால், அந்த ஆய்வகம் "சீன இராணுவத்திற்கு மறைமுகமாக உதவுகிறது" என கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்விளைவாக வரும் புதனன்று வாஷிங்டன் டி.சி. இல், கூட்டு ஊழியர்களின் தலைவரான ஜெனரல் ஜோசப் டேன்போர்டை , கூகிள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள்
அதற்கேற்றாற் போல் கூகுள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஜெனரல் டேன்போர்டை சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு துறை (DOD) செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை . அடுத்த திங்களன்று, டேன்போர்டு உடனான சந்திப்பின் முக்கிய அம்சங்கள் பற்றி உள்நாட்டு பாதுகாப்பு குழுவின் ஊழியர்களுடன் கூகுள் நிறுவனம் கலந்தாலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவத்துடன் இணைந்து பணியாற்ற கூகுள் நிறுவனம்
செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வில் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து பணியாற்ற கூகுள் நிறுவனம் மறுத்ததே இந்த சர்ச்சைகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.அமெரிக்க இராணுவம் ஏரியல் ட்ரோன் புகைப்படங்களை ஆய்வுசெய்ய உதவும் ப்ராஜெக்ட் மாவென்-ன் ஒப்பந்தம் மார்ச் 2019 இல் காலாவதியாகவுள்ள நிலையில், அது புதுப்பிக்கப்படாது என கடந்த ஜூன் மாதம் கூகுள் கூறியது. கூகுள் தொழில்நுட்பம் போரில் பயன்படுத்துவதை கூகுள் நிறுவனத்தின் ஒரு பகுதி ஊழியர்கள் எதிர்த்ததால், ப்ராஜெக்ட் மேவென் அந்நிறுவனத்திற்குள் கிளிர்ச்சியை ஏற்படுத்தியது.

அபாய சூழ்நிலைகளில் எந்தவொரு தீங்கும் விளைவிக்காது
வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அபாய சூழ்நிலைகளில் எந்தவொரு தீங்கும் விளைவிக்காது என்ற கூகுள் நிறுவனத்தின் கொள்கைக்கு இது எதிரானது என மறுப்பாளர்கள் கூறுகின்றனர்.

அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட்
பென்டகன் மற்றும் சீன இராணுவம் ஆகிய இரண்டும் ஏஐ சார்ந்த சேவைகளை வாங்குபவர்களில் முக்கியமானவர்கள். எது கூகுள் நிறுவனத்திற்கு இதை கடினமாக்குகிறது எனில், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற போட்டியாளர்கள் ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம் அமெரிக்க இராணுவத்தை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை நியாயப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் சீனாவிற்கும் ஏஐ சேவைகள் வழங்குகின்றன

டொனால்ட் டிரம்ப்
சீனா மற்றும் அதன் இராணுவத்திற்கு கூகுள் உதவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-ம் குற்றம் சாட்டியுள்ளார்.

சீன இராணுவத்துடன் நாங்கள் வேலை செய்யவில்லை
" சீன இராணுவத்துடன் நாங்கள் வேலை செய்யவில்லை. பாதுகாப்புதுறை உட்பட பல்வேறு துறைகளுடன், சைபர் செக்யூரிட்டி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றிற்காக அமெரிக்க அரசுடன் தான் நாங்கள் பணியாற்றிவருகிறோம்" என கூகுள் நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளது.

கல்வி முன்னெடுப்புகள், மொழி புரிதல் தொடர்பான ஆய்வுகள்
கூகுளின் பெய்ஜிங் ஏஐ ஆய்வக வலைத்தளத்தலில், கல்வி முன்னெடுப்புகள், மொழி புரிதல் தொடர்பான ஆய்வுகள், பயனாளர் அனுபவம் மற்றும் பொறியியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பணிகளை ஆட்டோமேட் செய்ய உதவும் கூகுள் ஓபன் சோர்ஸ் "டென்சார்ப்ளோ" மேம்பாடுகள் போன்றவற்றை செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications