சுந்தர் பிச்சைக்கு 6 அமெரிக்க செனட்டர்கள் கடிதம் என்ன நடந்தது தெரியுமா?
6 அமெரிக்க செனட்டர்கள் கூகுள் இன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
6 அமெரிக்க செனட்டர்கள் கூகுள் இன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதன்படி சென்சார் செய்யப்பட்ட சைனீஸ் செர்ச் என்ஜின் பற்றிய தகவலை கூறும்படி கேட்டுக்கொண்டது அமெரிக்க செனட்டர் குழு.

கூகுள் 2010 ல் இருந்து சீனாவின் கடுமையான தணிக்கை ஆட்சிக்கு ஒத்துழைக்கும் விதமாக என்ன மாற்றங்களை மேற்கொண்டு இப்பொழுது என்ன மாற்றங்களை மாற்றியிருக்கிறது என்று செனட்டர்கள் கேட்டனர். புளோரிடா ரிபப்லிக் மார்கோ ரூபியோ பார்ச்சூன் உட்பட அனைவரும் ஞாயிறன்று அறிக்கை செய்தனர்.

சீன அரசாங்க தணிக்கைத் தேவைகள்
கடிதத்தின் படி, கூகுள் இன் திட்டமானது சீனாவில் மனித உரிமைகள் மீறல்களில் மற்றும் அபாயங்களில் கூகுள் உடந்தையாக இருப்பது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது என்றது. 2010 இல் கூகுள் சீன அரசாங்க தணிக்கைத் தேவைகள் மற்றும் நெறிமுறை அடிப்படையிலான தேவைகளுக்கு இணங்க மறுத்து, முக்கிய சந்தை ஓப்புதல்கள் கைவிடப்பட்டது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சென்சார்ஷிப் விதிமுறை
சீனாவிற்கு சென்சார் செய்யப்பட்ட தேடுபொறியை பயன்படுத்தக் கூகுள் திட்டமிடுவதாகக் கடந்த வாரம் செய்திகள் பல ஊடகங்களில் வெளிவந்தது.
தகவலின் படி,கூகுள் நிறுவனம் நாட்டின் தணிக்கை சட்டங்களுக்கு இணங்க, சீனாவில் பயன்படுத்த ஒரு செய்தி-ஒருங்கிணைப்பு செயலியை உருவாகியுள்ளதாகக் கூறியது. இந்த முயற்சி நாட்டின் சென்சார்ஷிப் விதிமுறைக்கு உட்பட்டது என்றும் கூகுள் குறிப்பிட்டிருக்கிறது.
இதுவரை கூகுள் நிறுவனம், தேடுபொறி திட்டத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செக்யூரிட்டீஸ் டெய்லி
இந்த ஒப்பந்தத்தில் சீனச் சந்தையில் கூகுள் நுழைவதற்கான முயற்சி நடவடிக்கைகள் ஏதேனும் இணைக்கப்பட்டுள்ளதா என்று செனட்டர்கள் கேட்டனர்.
கூடுதலாகக் கடிதத்தில், எந்தத் தணிக்கை தேடல்கள் மற்றும் வலைத்தளங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கேட்கப்பட்டிருந்தது.கடந்த வாரம் சீனா அரசுக்குச் சொந்தமான செக்யூரிட்டீஸ் டெய்லி, கூகுள் சீனாவிற்கு தேடுபொறியை உருவாகவில்லை என்று கூறி மறுத்துவிட்டது.

772 மில்லியன்
உலகில் மிகப்பெரிய ஆன்லைன் பயனர் சமூகம் சீனா தான். சுமார் 772 மில்லியன் இணையப் பயனர்கள் சீனாவில் தான் உள்ளனர். கூகுள் இன் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை அந்நாட்டிலேயே அறிமுகப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications