Home
News

தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது : சுந்தர் பிச்சை கூறிய விளக்கம் என்ன?

மக்கள் தங்களுடைய தனிப்பட்ட ரகசியங்களை எந்தவித விலையும் கொடுக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும்

கடந்த டிசம்பரில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பயனாளிகளின் தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பது எப்படி என்பதை தனது நிறுவனம் நன்றாக புரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட ரகசியத்தை காப்பது ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் உரிமை என்றும், அதை இன்னொரு வாங்க எந்தவிதத்திலும் உரிமை இல்லை என்றும் தெரிவித்தார்.

தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது : சுந்தர் பிச்சை கூறிய விளக்கம் என்ன?

நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுந்தர் பிச்சை, 'மக்கள் தங்களுடைய தனிப்பட்ட ரகசியங்களை எந்தவித விலையும் கொடுக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

தனிப்பட்ட உரிமை

தனிப்பட்ட உரிமை

தனிப்பட்ட உரிமையை காப்பது என்பது செல்வந்தர்கள் மற்றும் அதிகம் செலவு செய்பவர்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரிமையானது என்றும், அது ஒரு ஆடம்பரம் அல்ல என்றும் தெரிவித்தார்.

 ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ்

ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ்

உலகில் உள்ள ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனங்களும் தனிப்பட்ட உரிமையை காப்பது பெரும் சவாலாக இருப்பதாகவும், ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனால்டிக்கா சர்ச்சைக்குரிய விவகாரத்திற்கு பின்னர் பலவிதமான தனியுரிமை பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வைத்துள்ளதாகவும், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் அவர்க்ளும் இதுகுறித்த பல ஆலோசனைகள் செய்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 ஜிமெயில், டாக்குமெண்ட்

ஜிமெயில், டாக்குமெண்ட்

கூகுள் நிறுவனமும் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது குறித்து ஆலோசித்துள்ளதாகவும், பயனாளிகளின் அதிகபட்ச டேட்டாக்கள் கசியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால் விளம்பரங்கள் மூலம் வரும் வருமானங்கள் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சுந்தர் பிச்சை இதுகுறித்து விரிவாக விளக்கியதோடு அதன் நன்மைகளையும் தெரிவித்தார். பயனாளிகளின் டேட்டாக்கள் அவர்களுக்கு தோன்றும் விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், அதே சமயத்தில் விளம்பரத்தின் மூலம் உங்கள் ஜிமெயில், டாக்குமெண்ட் ஆகியவைகளில் உள்ள விபரங்கள் வெளியே கசிய வாய்ப்பு இல்லை என்றும் உறுதியளித்தார்.

விரைவில்

விரைவில்

மேலும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க மேலும் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் வெளியிடப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் பிச்சை தெரிவித்தார். கூகுள் குரோமில் தற்போது 'Incognito' என்ற செயலி அறிமுகம் செய்யப்படுள்ளதாகவும், அதனை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களுடைய பயன்பாடுகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே இந்த செயலியை பலர் யூடியூபில் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆட்டோ டெலிட்

ஆட்டோ டெலிட்

மேலும் கூகுள் தற்போது ஆட்டோ டெலிட் வசதியை கொண்டு வந்துள்ளதாகவும், அதன் மூலம் எவ்வளவு காலம் உங்களுடைய டேட்டாக்களை சேமிக்க வேண்டும் என்பதை நீங்கள் குறிப்பிட்டால் அதன் பின்னர் நீங்கள் பயன்படுத்தும் வெப் மற்றும் செயலியில் உங்கள் டேட்டா தானாகவே டெலிட் ஆகிவிடும் என்றும், கூகுளின் புதிய வசதிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் பெரும் உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது

மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது

மேலும் அமெரிக்காவின் பிரைவசி கொள்கையை கூகுள் சரியாக பின்பற்றுவதாகவும், அதேபோல் ஐரோப்பிய டேட்டா பாதுகாப்பு கொள்கையையும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் உலகில் உள்ள அனைத்து மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் கூகுள் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai Thinks Privacy Is Every Consumers Right Not A Luxury For The Rich: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X