திடீரென எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை.. காரணம் இதுதான்..
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு செய்யும் நிறுவனமாக இருக்கிறது. அதுவும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க் (Elon Musk) இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். குறிப்பாக பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
அதன்படி இந்த ஸ்கேஸ் எக்ஸ் நிறுவனம் காட்டுத்தீயைக் கண்டறிந்து கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளது. அதில் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. குறிப்பாக கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி தளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸின் டிரான்ஸ்போர்ட்டர்-13 மிஷன் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோள், உலகளவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை அனுப்பும்.

எனவே இதன் மூலம் காட்டுத்தீ மேலாண்மையைச் சிறப்பாக கையாள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai) இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வார இறுதியில் வெற்றிகரமாக ஏவப்பட்ட AI - FireSat செயற்கைக்கோள் இப்போது பூமியைச் சுற்றி வருகிறது.
அதுவும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5x5 மீட்டர் அளவுள்ள 50-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், காட்டுத்தீயைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் செயற்கைக்கோள்கள் தொகுப்பில் இந்த செயற்கைக்கோள் முதன்மையானது. பின்புMuon Space, Earth Fire Alliance, Moore Foundation போன்றவற்றுடன் இணைந்து, FireSat செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதைக்குக் கொண்டு சென்ற SpaceX உள்ளிட்ட அனைத்து நிறுவனத்துக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.
அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் ராக்கெட் 2026-ம் ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கும் என்று சமீபத்தில் எலான் மஸ்க் கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் தான் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் 23 ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. மேலும் இந்நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்ப மும்முரம் காட்டி வருகிறது.
அதுவும் கடந்த 8 முறையாக ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் திட்டம் தோல்வி அடைந்தது. கடந்த மார்ச் 7-ம் தேதி கூட ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அடுத்த இறுதியில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஸ்டார்ஷிப்பில் மனித ரோபோவும் சேர்த்து அனுப்பப்பட உள்ளது. பின்பு வரும் 2029-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தரையிறங்கலாம் அல்லது 2031-ம் ஆண்டிற்குள் கட்டாயமாக இது நடக்க வாய்ப்பு உள்ளது என எலான் மஸ்க் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஜியோ (jio) மற்றும் ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. விரைவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை இந்தியாவில் கிடைக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








