Home
News

மனைவியுடன் 6 மாதம் பேசாமல் இருந்த சுந்தர்பிச்சை ! காரணம் என்ன?

கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை இன்று உலகின் மிக வெற்றிகரமான நபர்களில் ஒருவராவார்.

கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை இன்று உலகின் மிக வெற்றிகரமான நபர்களில் ஒருவராவார். ஆனால் அவரது ஆரம்ப நாட்கள் அவ்வளவு சுலபமானதாக இல்லை. மிகவும் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்த அவர், சென்னையில் ஒரு சிறிய பிளாட்டில்வசித்து வந்தார். அவரது வீட்டில் கார், டிவி கூட இருந்தது இல்லை.

அஞ்சலி

அஞ்சலி

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) கரக்பூரில் படிக்கும் போது தான் சந்தித்த அஞ்சலியை பின்னர் திருமணம் செய்துகொண்டார் சுந்தர் பிச்சை. அவர்கள் இவரும் அங்கு மெட்டலார்ஜிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்தனர்.

திருமணத்திற்கு சம்மதம்

திருமணத்திற்கு சம்மதம்

அவர்களின் பொறியியல் இறுதி ஆண்டில், அஞ்சலியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டார் சுந்தர். சிறிதும் யோசிக்காமல் சட்டென சரி என்று கூறினார் அஞ்சலி. இதில் சிறந்த பகுதி என்னவெனில், சுந்தரைப் பற்றி முழுதும் அறிந்து வைத்திருந்த அஞ்சலி, அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிந்தும் அவருடன் வாழ்க்கை முழுதும் பயணிக்க முடிவெடுத்தார்.

அமெரிக்கா

அமெரிக்கா

பின்னர் சுந்தர் பிச்சை தனது உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற நிலையில், அஞ்சலியை இந்தியாவிலேயே விட்டுச் சென்றார். ஆனாலும் அவர்கள் தங்கள் காதலை விட்டுவிடவில்லை. அக்காலகட்டத்தில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக இருந்ததால், அஞ்சலியுடன் ஆறு மாதங்கள் பேச முடியவில்லை என பின்னாளில் ஒரு பேட்டியில் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

நல்ல சம்பளம் பெற்றார்

நல்ல சம்பளம் பெற்றார்

விரைவில் அஞ்சலி அமெரிக்காவிற்கு சென்று சுந்தருடன் சேர்ந்தார். அதுநேரம் சுந்தரும் அங்கு ஒரு வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெற்றார். அஞ்சலியின் பெற்றோரிடமிருந்து அனுமதிபெற்ற பின்னர் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. திருமணத்திற்குப் பிறகு, இருவரும் அமெரிக்காவில் குடியேறினர்.

கூகுள்

கூகுள்

பிச்சை கூகுளில் பணியாற்றும் போது, பல்வேறு பிராண்டட் நிறுவனங்களில் இருந்து பணியாற்ற வாய்ப்புகள் வந்தபோதும் அஞ்சலி அவரை கூகுள் நிறுவனத்திலேயே தொடர அறிவுறுத்தியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இப்போது அவர் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

காவியா மற்றும் கிரண்

காவியா மற்றும் கிரண்

சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி தம்பதியினருக்கு, காவியா மற்றும் கிரண் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

டெலிபோன் ஆர்வமே கூகுளில் பணியாற்ற வைத்தது, சுந்தர் பிச்சை உருக்கம்.!!

டெலிபோன் ஆர்வமே கூகுளில் பணியாற்ற வைத்தது, சுந்தர் பிச்சை உருக்கம்.!!

கூகுளின் புதிய சிஇஒ'வாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை தேர்வாகி உள்ளார். கூகுளின் அதிக அளவு வாக்கு இவருக்கு அளிக்கப்பட்டது. சென்னையில் துவங்கி கூகுள் வரை சென்றிருக்கும் இவரது வாழ்க்கை பயணத்தில் பலருக்கும் தெரிந்திராத பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இவர் சென்னையை சேர்ந்தவர். ஐஐடி கராக்பூரில் பொறியியல் பட்டம் பெற்றவர். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மற்றும் வார்டன் பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பெற்றவர். இவரது மனைவி அஞ்சலி பிச்சையை இவர் ஐஐட்- கேஜிபி'யில் சந்தித்தார். இரண்டு குழந்தைகளுடன் கலிஃபோர்னியாவில் அல்டாஸ் இல்லத்தில் தற்பொழுது இவர்கள் வசிக்கின்றனர்.

இல்லம்

இல்லம்

சுந்தர் பிச்சை வசிக்கும் வீடானது லாஸ் அல்டாஸில் அமைந்துள்ளது. மொத்தம் 5 படுக்கை அறையை கொண்ட இந்த வீட்டில் டென்னீஸ் கோர்ட் மற்றும் குழந்தைகளுக்கான மினியேச்சர் கால்பந்து மைதானமும் உள்ளது.

முதல் வேலை

முதல் வேலை

இவரது முதல் வேலையிலேயே இவரது கவர்திழுக்கும் தலைமைத்தன்மையை காட்டி உள்ளார். சிறிய வெப் பிரவுஸர் எக்ஸ்டென்ஷனை டெவலப் செய்யும் வேலைதான் முதலில் இவருக்கு அளிக்கப்பட்டது அதாவது googol toolbar. இதை முடித்தபின் இவரது தலைமை அதிகாரியான எரிக் ஸ்மிக்ட்'ஐ வியக்கவைத்து. அதன் பின் க்ரோம் பிரவுஸரின் வளர்ச்சியில் இறங்கினார். இதன் வழியில் இவரது வெற்றி க்ரோம் இயங்குதளத்தில் வந்து நின்றது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

இவருக்கு கிரிகெட் என்றால் பிரியம். மற்ற இந்தியர்களை போலவே கிரிகெட் வீரராகவே விரும்பினார் இருந்தும் விதி இவரை கணினி மேதையாக்கியது. இந்த குழந்தை பருவ ஆசையின் காரணமாக இவர் இந்தியா வந்த பொழுது சிறுவர்களுடன் கிரிகெட் விளையாடி மகிழ்ந்தார்.

தலைமை

தலைமை

க்ரோமுக்கு பின் ஆண்ட்ராய்டு என கூகுளின் தயாரிப்புகளுக்கு தலைமை இவருக்குதான். கூகுள் கார்ட்போர்ட் விஆர் இவரது மற்றொரு வெற்றியாக அமைந்தது.

ஆண்ட்ராய்டு துறை

ஆண்ட்ராய்டு துறை

முதலில் கூகுளின் ஆண்ட்ராய்டு துறை பல செக்டார்களில் இயங்கி வந்தது. ஆன்டி ரூபினிற்க்கு பின் இவருக்கு இந்த துறை அளிக்கப்பட்டவுடன் இதன் தோற்றத்தை தலைக்கீழாக மாற்றி இதிலும் வெற்றி இவருக்கே. இதை கூகுளின் free flowing ecosystemஆக மாற்றியதும் இவரே.

அறிவியல் மேதாவி

அறிவியல் மேதாவி

இவர் ஒரு உண்மையான அறிவியல் மேதாவி. கடந்த மாதம் இயற்பியல் துறையில் புவி ஈர்ப்பு அலையின் கண்டுபிடிப்பை பற்றிய இவரது பங்கு இதை உண்மையாக்கியது இவர் இதை பற்றி டிவட்டரில் " ஆயிர்கணக்கானவர்கள் இதில் பணி புரிந்துள்ளனர். இது மிகவும் அற்புதம். மனதை வியக்க வைக்கின்றது. ஏனென்றால் இதை பற்றி 100 வருடங்களுக்கு முன்பே ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். இது அவர் மனதில் அப்படியே இருந்துள்ளது. ஒரு மனிதன், தனி ஒருவனாக இதை செய்துள்ளார். இதை புரிந்து கொள்ள நான் பலவகையில் முயற்சி செய்துள்ளேன்" என குறிப்பிட்டிருந்தார்.

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளத்தை பற்றிய பேட்டியில் இவர் குடும்பம் இந்த வெள்ளத்தில் எப்படி பாதிக்க பட்டது என்பது பற்றி கூறியுள்ளார். இவரது பாட்டி தொடர்பு எதுவும் இல்லாமல் 4 நாட்களுக்கு வீட்டுக்குள் அடைப்பட்டு கிடந்துள்ளார். இவரது மாமன்கள் தரைத்தளத்தை விட்டு இரண்டாம் தளத்துக்கு உயிர் காத்து கொள்ள எப்படி சென்றனர் என்பது பற்றி கூறியுள்ளார்.

குழந்தைபருவம்

குழந்தைபருவம்

இவரது குடும்பம் முதலில் டெலிபோன் வாங்கிய போது இவரது ஆர்வம் மேலோங்கியது. அப்பொழுது இவருக்கு 12 வயது. ரோட்டரி இவரது எண்கள் ஆற்றலை ஊக்கப்படுத்தியது. இவர் டையல் செய்யும் எண்களை இவர் நினைவில் வைத்து கொள்ளும் ஆற்றல் இவருக்கு இருந்தது.

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai says he couldn’t talk to his wife for six month: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X