Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!

|

கொரோனா தொடர்பான நடவடிக்கை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னிிடம் மன்னிப்பு கோரியதாக கூறினார்.

கொரோனா அமெரிக்காவில் தோன்றியது

கொரோனா அமெரிக்காவில் தோன்றியது

கொரோனா அச்சம் பதற்றம் உலக நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து தோன்றியது என உலக நாடுகள் குற்றம் தெரிவித்து வரும் நிலையில், கொரோனா அமெரிக்காவில் தோன்றியது என்று அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் பரவச் செய்தது என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் தெரிவித்தார்.

அமெரிக்கா சார்பில் கண்டனம்

அமெரிக்கா சார்பில் கண்டனம்

இந்த அறிவிப்புக்கு வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை சீன வைரஸ் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொரோனா தாக்கம்: டிஜிட்டல் பேமன்ட் அதிகம் பயன்படுத்தும் மக்கள்.!கொரோனா தாக்கம்: டிஜிட்டல் பேமன்ட் அதிகம் பயன்படுத்தும் மக்கள்.!

அவசர நிலையை பிரகடனம்

அவசர நிலையை பிரகடனம்

இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் நாட்டில் அவசர நிலையை பிரகடனப் படுத்தினார்.

அமெரிக்க அரசுக்காக பிரத்யேக வலைதளம்

அமெரிக்க அரசுக்காக பிரத்யேக வலைதளம்

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். அப்போது, கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை அறிந்து கொள்ளவும், வைரஸ் சோதனைக்கு பதிவு செய்ய உதவும் வகையிலும் அமெரிக்க அரசுக்காக பிரத்யேக வலைதளம் ஒன்றை கூகுள் உருவாக்கி உள்ளது என கூறினார்.

கூகுள் நிறுவனம் மறுப்பு

கூகுள் நிறுவனம் மறுப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே கூகுள் நிறுவனம் அந்த தகவலை மறுத்துள்ளது. மேலும் டிரம்ப் அறிவித்தது போல் எந்த வலைதளமும் உருவாக்கவில்லை என தெரிவித்தது.

தாய் நிறுவனமான ஆல்பாபெட்

தாய் நிறுவனமான ஆல்பாபெட்

இந்த சமயத்தில் அறிவிப்பு கொடுத்த அதே நேரத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் குழுமத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வெர்லலி அமைப்பு இதற்கென ஒரு வலைதளத்தை உருவாக்கி உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், இந்த வலைதளம் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செயல்படுவதாக கூகுள் அறிவித்தது.

தனிப்பட்ட முறையில் மன்னிப்பு

தனிப்பட்ட முறையில் மன்னிப்பு

இந்த விவகாரம் குறித்து பேசிய டிரம்ப் வலைதள குழப்பங்கள் அனைத்தும் போலி ஊடகங்களால் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். அதேபோல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியதாக தெரிவித்தார்.

நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: whatsapp, facebook வதந்திக்கு முற்றுப்புள்ளி- வேணாம்யா., போதும்யா!நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: whatsapp, facebook வதந்திக்கு முற்றுப்புள்ளி- வேணாம்யா., போதும்யா!

 கூகுள் சிஇஓ சிறந்த மனிதர்

கூகுள் சிஇஓ சிறந்த மனிதர்

இருப்பினும் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் எதற்காக மன்னிப்பு கோரினார் என விளக்கவில்லை. அதே நேரத்தில் கூகுள் சிஇஓ சிறந்த மனிதர் எனவும் மரியாதைக்குரிய நபர் எனவும் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Google ceo sundar pichai say sorry for says US president Donald trump

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X