Home
News

அடேங்கப்பா.. சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலி இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா? இதோ முழு விவரம்..

பிரபலமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் சுந்தர் பிச்சை (google ceo sundar pichai). குறிப்பாக சுந்தர் பிச்சை இன்று உலகின் மிக வெற்றிகரமான நபர்களில் ஒருவராவார். ஆனால் அவரது ஆரம்ப நாட்கள் அவ்வளவு சுலபமானதாக இல்லை. மிகவும்
எளிமையான பின்புலத்தில் இருந்து வந்த அவர், சென்னையில் ஒரு சிறிய பிளாட்டில்வசித்து வந்தார். அவரது வீட்டில் கார், டிவி கூட இருந்தது இல்லை.

குறிப்பாக சுந்தர் பிச்சை படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில் தான். அதாவது பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி மற்றும் அமெரிக்காவிலும் முடித்தார். பின்பு 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.

அடேங்கப்பா.. சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலி இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?

அதேபோல் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) கரக்பூரில் படிக்கும் போது தான் சந்தித்த அஞ்சலியை பின்னர் திருமணம் செய்துகொண்டார் சுந்தர் பிச்சை. அதாவது அவர்களின் பொறியியல் இறுதி ஆண்டில், அஞ்சலியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டார் சுந்தர். சிறிதும் யோசிக்காமல் சட்டென சரி என்று கூறினார் அஞ்சலி. இதில் சிறந்த பகுதி என்னவெனில், சுந்தரைப் பற்றி முழுதும் அறிந்து வைத்திருந்த அஞ்சலி, அவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என தெரிந்தும் அவருடன் வாழ்க்கை முழுதும் பயணிக்க முடிவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார் அஞ்சலி. குறிப்பாக இவர் Accenture நிறுவனத்தில் ஒரு வணிக ஆய்வாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பின்னர் அவர் ஒரு முன்னணி நிதி மென்பொருள் நிறுவனமான Intuit-க்கு சென்றார் அங்கு அவர் தற்போது ஒரு முக்கிய நிர்வாக பொறுப்பை வகிக்கிறார்.

அஞ்சலி பிச்சை சொத்து மதிப்பு?
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது அஞ்சலி பிச்சையின் (Anjali Pichai) நிகர மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் தோராயமாக ரூ.830 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரது கணவர் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10,800 கோடி.உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் சுந்தர் பிச்சையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஐஐடி கரக்பூர் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. காரணம் என்னவென்றால், இது என் அன்பு மனைவி அஞ்சலியை முதன்முதலில் சந்தித்த இடம், நான் வளர்ந்த என இரண்டாவது வீட்டைப் பற்றிய அழகான நினைவுகள் இங்கே இருந்தன என்று சுந்தர் பிச்சை ஒருமுறை கூறியிருந்தார். அதுவும் தனது பழைய கல்லூரியில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற போது நடந்த விழாவில் சுந்தர் பிச்சை கூறியிருந்தார்.

அடேங்கப்பா.. சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலி இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?

மேலும் பிச்சை தம்பதியினர் தங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மிகவும் தனிப்பட்ட முறையில் பேசினாலும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதாவது காவ்யா என்ற மகள் மற்றும் கிரண் என்ற மகனும் உள்ளனர்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சுந்தர் பிச்சையின் வெற்றிக் கதை பல கோடி இந்தியர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறது. இருப்பினும், அவரது பர்சனல் வாழ்க்கையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது.

photo credit: in.pinterest.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai's Wife Anjali Pichai Net Worth: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X