Just In
- 23 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 1 day ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடியுடன் போராடிய இந்தியர்களை ஓட ஓட தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகள்!
- Movies
பதான் பாக்ஸ் ஆபிஸ்: முதல் வாரத்தில் 400 கோடி வசூல்... ஷாருக்கானின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் படித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..
Google CEO Sundar Pichai: அனைத்து தரப்பிலிருந்தும் பல ஊகங்களுக்குப் பிறகு, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இறுதியாகச் சென்னையில் தான் படித்த பள்ளியின் பெயரை வெளிப்படுத்தியிருக்கிறார். ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நடந்த ஒரு உரையாடலில், அவர் படித்த பள்ளியைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்ட பிறகு, அவரது விக்கிப்பீடியா பக்கத்தில் தோன்றிய பள்ளிகளின் பட்டியலையும் அவருக்குக் காட்டப்பட்டு, இந்த கேள்வி கேட்கப்பட்டது.

350 கல்வி நிறுவனங்கள் சுந்தர் பிச்சையைச் சொந்தம் கொண்டாடுவது உண்மையா?
அல்பபெட் நிறுவனத்தில் சுந்தர் பிச்சையின் நியமனத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 350 கல்வி நிறுவனங்கள் அவரைச் சொந்தம் என்று கூறிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சுந்தர் பிச்சையின் விக்கிப்பீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டன் கணக்கான பெயர்களில், இரண்டு பெயர்கள் மட்டுமே சரியானவை என்று சுந்தர் பிச்சை சமீபத்திய உரையாடலின் போது தெளிவுபடுத்தினார். தனக்குத் தெரிந்து அந்த இரண்டு பெயர்கள் மட்டுமே சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

சென்னையில் உள்ள எந்த பள்ளியில் சுந்தர் பிச்சை படித்தார்?
இதில், சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த போது எந்த பள்ளியில் படித்தார் என்ற தகவல் அவர் மூலமாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நெட்டிசன்ஸ் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகத்தின் முன்னணி நிறுவனத்தில் தலை நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் இவர், நமது தமிழகத்தின் தலைநகரில் தான் படித்திருக்கிறார் என்பது பலரின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவலின் படி, அவர், சென்னையில் உள்ள வன வாணியில் பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்ததாகக் கூறியுள்ளார். இந்த பள்ளி ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் அமைந்துள்ளது.

சுந்தர் பிச்சையின் கல்லூரி வாழ்க்கை
மேலும், தான் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து படித்ததாக வெளியான வதந்திகள் தவறானவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அவரது உயர் கல்விக்காக, அவர் IIT காரக்பூர் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தான் அவர் உலோகவியல் பொறியியலில் B Tech பட்டம் பெற்றார். பின்னர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று எம்.எஸ்., பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. 2008 ஆம் ஆண்டு குரோம் உலாவியை அறிமுகப்படுத்திய குழுவில் அவர் ஒருவராக இணைந்திருக்கிறார்.

சுந்தர் பிச்சை பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரசியமான தங்கள் இதோ
கூகுளில் கூகுள் டிரைவ், குரோம் ஓஎஸ் மற்றும் பிறவற்றிற்கு அவர் பின்னர் பொறுப்பேற்றார். கூகுளில் சேருவதற்கு முன், பிச்சை உற்பத்தியாளர் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தார், அதைத் தொடர்ந்து மெக்கின்சி & நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசனையில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர் பிச்சை பற்றி உங்களுக்குத் தெரியாத, இன்னும் பல சுவாரசியமான தகவலை இந்த பதிவில் இணைத்துள்ளோம். சுந்தர் பிச்சை எங்கு பிறந்தார், அவரின் சம்பளம் எவ்வளவு, இவர் எப்படி கிரிக்கெட் அணியின் தலைவரானார் என்பது போன்ற தகவல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை எந்த ஊர் தெரியுமா?
அல்பாபெட் மற்றும் கூகிள் நிறுவனத்தின் CEO-வாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்திருக்கிறார். இவருடைய அம்மா-லட்சுமி மற்றும் அப்பா-ரகுநாத பிச்சை இருவரும் இவரை நல்ல பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்துள்ளனர். சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு என இவரின் பள்ளிப் பருவத்தைத் தமிழ்நாட்டிலேயே முடித்திருக்கிறார்.

பெரிதும் வெளிவராத சில உண்மை தகவல்கள்
ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல்,ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ- வாக இருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். ஆனால், இவர் பற்றி பெரிதும் வெளிவராத சில தகவல்களைத் தேடி ஆராய்ந்த போது தான், பல உண்மைகள் தெரியவந்துள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.

இவருடைய முதல் அலுவலக பணி கூகிளில் துவங்கவில்லை
கூகுள் நிறுவனத்தில் 2004 ஆம் ஆண்டில் இணைவதற்கு முன்பு, இவர் மெக்கின்ஸி நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் பணியை செய்துவந்திருக்கிறார். பின்பு கூகிளில் சேர்ந்து லார்ரி பேஜ் கவனத்தை ஈர்த்துள்ளார். கூகிள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலாவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.

இவரின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம்,கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு அதிகம் இருந்து வருகிறது. இவரின் சம்பளத்தைப் பற்றிக் கூறவேண்டும் என்றால், இவருடைய வருமானம் ஒரு வருடத்திற்கு சுமார் 200 மில்லியன் டாலர்களுக்கும். அதாவது இந்திய மதிப்பின் படி 200 மில்லியன் டாலர் என்பது ரூ.12838100000.00 ஆகும்.

இரு அறைகளில் துவங்கிய வாழ்க்கை! இப்போது இவர் இருக்கும் வீடு எப்படியானது?
இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை. ஆனால், இப்பொழுது சுந்தர் பிச்சை வசிக்கும் வீடானது லாஸ் அல்டாஸில் அமைந்துள்ளது. சாதாரண இல்லம் போல இல்லாமல், பல அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அதீத வசதியுடன் மொத்தம் 5 படுக்கை அறையைக் கொண்ட வீடாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் டென்னீஸ் கோர்ட் மற்றும் குழந்தைகளுக்கான மினியேச்சர் கால்பந்து மைதானமும் உள்ளது.

வாட்ஸ்அப்-ஐ விற்க வேண்டாம் அறிவுரை சொன்ன பிச்சை
முதலில் கூகுளின் ஆண்ட்ராய்டு துறை பல செக்டார்களில் இயங்கி வந்தது. ஆன்டி ரூபினிற்க்கு பின் இவருக்கு இந்த ஆண்ட்ராய்டு துறை அளிக்கப்பட்டவுடன் இதன் தோற்றத்தை தலைகீழாக மாற்றி இதிலும் வெற்றி இவருக்கே என்று தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். இதைக் கூகுளின் free flowing ecosystemஆக மாற்றிய பெருமையும் இவருக்கே சேரும்.

லாரி பேஜின் வலது கரம் இவர் தானா?
சிலகாலம் லாரி பேஜின் வலது கரமாக இருந்த பிச்சை, வாட்ஸ்ஆப் நிறுவனர் ஜான் கும், வாட்ஸ்ஆப்பை பேஸ்புக் நிறுவனத்திற்கு விற்கவேண்டாம் என சமாதானப்படுத்த முயன்றார். நெஸ்ட் நிறுவனத்தின் டோனி பெட்டலுடன் பேசி, தனது நிறுவனத்தைக் கூகுளுடன் இணைக்க லாரி பேஜீக்கு உதவியதும் சுந்தர் பிச்சை தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு மிகப்பெரிய உண்மை.

விசித்திரமாகத் தீர்வு காணும் பழக்கம்
வழக்கமாக மிகவும் ஆழமான சிந்தனையில் இருக்கும் போது, அலுவலக அறையைவிட்டு வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் மீட்டிங்கில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவாராம் திரும்பி உள்ளே வரும் போது பிரச்சனைக்குச் சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.

தனித்துவமான 'இந்த' திறமை இவரிடம் சிறுவயதில் இருந்தே இருக்கிறது
இவரது குடும்பம் முதலில் டெலிபோன் வாங்கிய போது இவரது ஆர்வம் மேலோங்கியது. அப்பொழுது இவருக்கு 12 வயது. ரோட்டரி இவரது எண்கள் ஆற்றலை ஊக்கப்படுத்தியது. இவர் டையல் செய்யும் எண்களை இவர் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் இவருக்கு இருக்கிறது.

முதல் மொபைல் எப்பொழுது வாங்கினார்? இப்போது இவரிடம் எத்தனை போன் உள்ளது தெரியுமா?
இப்போது இவரிடம் எத்தனை மொபைல் உள்ளது? சுந்தர் பிச்சை 1995 ஆம் ஆண்டில் தனது முதல் மொபைல் போன் மற்றும் 2006 ஆம் ஆண்டில் தனது முதல் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கியுள்ளார். தற்போது அவர் 20-30 ஸ்மார்ட்போன்கள் தனது வீட்டுக்குள்ளேயே பயன்படுத்துகிறார்.

கிரிக்கெட் அணியின் தலைவராகச் சுந்தர் பிச்சை
இந்தியாவின் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து இளங்கலை படிப்பில் சேருவதற்கு முன்னர் பிச்சை தனது உயர்நிலைப்பள்ளி கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்திருக்கிறார். கிரிக்கெட் பிடிக்கும், கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் பிடிக்கும் என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மேலும் கல்லூரி காலத்தில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் தற்போது உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் மிகுந்தளவு ஆர்வம் இல்லை என்றும் சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470