Google CEO இந்தியாவிற்காக மீண்டும் கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

|

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் 10,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர், 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நெருக்கடியான இந்த நேரத்தில், அனைத்து மக்களும் அரசுக்கு உதவிக் கரம் கொடுக்கின்றனர்.

உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்

உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்

பாலிவுட் பிரபலங்கள், தொழில்முனைவோர் அல்லது அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக சேவகர்கள் என அனைவரும், தங்களால் முடிந்த சேவையை நாட்டிற்குச் செய்வதில் ஆர்வம் காட்டி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனமும், தன்னால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் மக்களுக்காக உதவிக்கரம்

மீண்டும் மக்களுக்காக உதவிக்கரம்

கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவில் இப்போது நிகழும் இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வரும் நிலையில், மீண்டும் மக்களுக்காக உதவிக்கரம் நீட்ட சுந்தர் பிச்சை முன்வந்துள்ளார். முதல் முறை கூகிள் நிறுவனத்தின் சார்பாக நன்கொடை வழங்கிய சுந்தர் பிச்சை, இப்பொழுது தனது சொந்த சார்பில் உதவ முன்வந்துள்ளார் என்பதும், குறிப்பாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறு தொழில் மற்றும் அன்றாட ஊழியர்களுக்காக இம்முறை உதவ முன்வந்துள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

அன்றாட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிப்பு

அன்றாட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முதல் கட்டமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இன்றுடன் நிறைவடைய வேண்டிய ஊரடங்கு இரண்டாம் கட்டமாக இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஊரடங்கின் போதே சிறு தொழிலாளர்கள் மற்றும் அன்றாட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு

இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு

இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு இவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்பதே உண்மை. முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த சுந்தர் பிச்சை, இம்முறை தொழிலாளர்களுக்கு உதவுவ முன்வந்துள்ளார். இதற்கான உதவி நன்கொடையையும் சுந்தர் பிச்சை இப்பொழுது இந்திய அரசிடம் வழங்கியுள்ளார்.

சுந்தர் பிச்சை வழங்கிய நன்கொடை எவ்வளவு தெரியுமா?

இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட "கிவ் இந்தியா" பிரச்சாரத்திற்கு நேரடியாகக் கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார். குறிப்பாகத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தேவைப்படும் பண உதவிகளுக்காக இந்த தொகையை அவர் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் செலவழித்த 800 மில்லியன் டாலர்

கூகிள் செலவழித்த 800 மில்லியன் டாலர்

சுந்தர் பிச்சை தானாக முன்வந்து நன்கொடை அளித்ததற்காக, கிவ் இந்தியா அமைப்பு அதன் டிவிட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் மூலம் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது. முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்குக் கூகிள் 800 மில்லியன் டாலர் செலவழித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio பைபர் காம்போ பிளான் அறிமுகம்!சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio பைபர் காம்போ பிளான் அறிமுகம்!

இரண்டாம் கட்ட ஊரடங்கிற்கும் ஒத்துழைப்போம்

இரண்டாம் கட்ட ஊரடங்கிற்கும் ஒத்துழைப்போம்

அதேபோல், சிறு வணிகங்களுக்கு உதவத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு 200 மில்லியன் டாலர் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீடிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்டஊரடங்கின் போதும் மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு மக்களாகிய நாமும் நம்முடைய ஒத்துழைப்பை வீட்டிலிருந்தபடி வழங்கலாம் என்பது தாழ்வான வேண்டுகோள்.

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai Once Again Donates To Help The Needs During Indias Lockdown : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X