Home
News

ChatGPT க்கு டாட்டா.. போட்டியாளரை களமிறக்கிய Google.. சொன்னதை செய்த சுந்தர் பிச்சை!

"அவ்ளோதான் கூகுளின் கதை முடிந்தது", "சுந்தர் அண்ணாச்சி, உங்க கடையை சாத்திட்டு கிளம்புங்க!" என்று கமெண்ட் அடித்தவர்களின் வாயில், பெரிய லட்டு ஒன்றை திணித்து உள்ளார் - ஆல்பபெட் இன்க். மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை (Sundar Pichai)!

என்னென்ன வேணுமோ.. அண்ணனை கேளுங்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமான, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அடிப்படையிலான சாட்ஜிபிடி (ChatGPT), மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள், கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியை சந்தித்தது.

ChatGPT க்கு டாட்டா.. சொன்னதை செய்த சுந்தர் பிச்சை!

ஏனென்றால், "என்னென்ன வேணுமோ அண்ணனை கேளுங்கள்" என்கிற சினிமா பாடல் வரிகளுக்கு ஏற்ப சாட்ஜிபிடி ஆனது எதை கேட்டாலும், என்ன கேட்டாலும் கொடுக்கும் திறனை கொண்டுள்ளது.

மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் கதை, கட்டுரை, கடிதம், இமெயில், வீட்டுப்பாடம் என எதை கேட்டாலும், எழுதி கொடுக்கும் திறனை சாட்ஜிபிடி கொண்டுள்ளது (இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்; சாட்ஜிபிடி இன்னும் பலவற்றையும் செய்யும்)

Google VS ChatGPT

சாட்ஜிபிடி-யின் அபார வளர்ச்சியானது கூகுளின் சாம்பிராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்கிற சில மிகையான கேள்விகளுக்கு வழிவகுத்தன.

சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஆகிய இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று மிகவும் வேறுபட்ட தளங்கள் என்றாலும் கூட, சாட்ஜிபிடி, கூகுளுக்கு ஒரு சிறிய அச்சுறுத்தலாகவே உள்ளது மற்றும் கூகுளின் வளர்ச்சி பாதையில் "அசௌகரியத்தையும்" உருவாக்கி உள்ளது.

ஆகையால், கூகுளுக்கு வேறு வழியே இல்லை. சாட்ஜிபிடி-யின் கதையை முடிக்க, அதற்கு ஈடான ஒரு போட்டியாளரை களமிறக்கியே தீரவேண்டும். சமீபத்தில் சுந்தர் பிச்சையும் கூட இந்த தகவலை உறுதிப்படுத்தி இருந்தார்!

சொன்னதை செய்த சுந்தர் பிச்சை!

சொன்னபடியே, ஆல்பபெட் இன்க். மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை சாட்ஜிபிடி-க்கான போட்டியாளரை களமிறக்கி விட்டுள்ளார். அந்த போட்டியாளரின் பெயர் - பார்ட் (Bard).

பார்ட் என்பது ஒரு எக்ஸ்ப்ரீமென்டல் கான்வெர்ஷேஷனல் ஏஐ சர்வீஸ் (Experimental conversational AI service) ஆகும். இது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications - LaMDA) மூலம் இயக்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் இந்த எல்ஏஎம்டிஏ (LaMDA), 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர ஐ/ஓ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது!

கூகுளின் Bard, ChatGPT ஐ விட திறமையாக செயல்படுமா?

கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, பார்ட் படைப்பாற்றலுக்கான ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆர்வத்திற்கான ஏவுதளமாகவும் இருக்கும்.

அதுமட்டுமின்றி, கூகுளின் இந்த ஏஐ மாடலானது புதிய மற்றும் உயர்தர பதில்களை வழங்கும். அதாவது 2021 ஆம் ஆண்டுக்கு முன் கிடைக்கும் தரவுகளில் பயிற்சி பெற்ற சாட்ஜிபிடி-ஐ போலல்லாமல், கூகுளின் இந்த ஏஐ மாடலானாது சமீபத்திய தகவல்களை பயன்படுத்தி, சிக்கலான கேள்விகளுக்கான பதில்களை கூட எளிமையாக வழங்கும்!

Bard பற்றி சுந்தர் பிச்சை என்ன கூறியுள்ளார்?

சுந்தர் பிச்சை, பார்ட்டின் அம்சங்கள் அல்லது திறன்களை பற்றி விரிவாக பேசவில்லை என்றாலும் கூட, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

பார்ட் போன்ற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அனுபவங்கள் நிஜ உலகிற்கு கொண்டுவரப்படும் போது, அது "தைரியமான மற்றும் பொறுப்பான முறையில்" கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பிச்சை குறிப்பிட்டுள்ளார்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai Introduced New AI ChatBot Called Bard Which is Rival For ChatGPT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X