நானும் சாதரான மனுஷன் தான்: இப்படிக்கு கூகுள் சுந்தர் பிச்சை.!

வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் நாளின் ஒவ்வொரு பகுதியையும் சவால் மிக்கதாக மாற்றுகிறது.

|

வெற்றியும் மன அழுத்தமும் எப்போதும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து கொண்டே இருக்க வேண்டியதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது கூகுள் சி.ஈ.ஓ சுந்தர் பிச்சையின் எளிமையான மற்றும் அமைதியான அன்றாட காலை நடவடிக்கைகள்.

நானும் சாதரான மனுஷன் தான்: இப்படிக்கு கூகுள் சுந்தர் பிச்சை.!

உலகம் முழுக்க 5 கண்டங்களில் பரந்துவிரிந்து, 85,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டுள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, எப்போதும் நிறுவனத்தின் தேவைகளை கவனிப்பதிலும், தொழில் மேம்பாட்டிற்காக நீண்ட கால திட்டங்களை வகுப்பதிலுமேயே பணியாற்றிக்கொண்டிருப்பார். உயர் பதவியில் இருக்கும் பெரும்பாலானோர், அதிகாலையிலேயே எழுந்து உடற்பயிற்சிகள் செய்வது மற்றும் மின்னஞ்சல் பார்ப்பது என செலவளிப்பர். ஆனால் சுந்தர் பிச்சை அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த துவக்கத்தையே விரும்புகிறார்.

இது சிறப்பான பழக்கம்

இது சிறப்பான பழக்கம்

அதிகாலையில் அமைதியான மனநிலையில் தங்களுடைய நாளை படிப்புடன் துவங்கினால், அது அந்த நாள் முழுவதும் தொடரும் என்கிறது வார்டன் பிஸ்னஸ் ஸ்கூலின் ஆய்வு.

இக்கால இளைஞர்களுக்கு அமைதியான ஓய்வெடுக்கும் காலை தான் முக்கியமாக தெரிகிறது. எந்த தலைமுறையினருக்கும் இல்லாத வகையில், இவர்கள் அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர் ஆனால் தங்களை "வேலைக்காக தியாகம் செய்தவர்கள்" என நினைத்துக்கொள்கின்றனர்.

வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் நாளின் ஒவ்வொரு பகுதியையும் சவால் மிக்கதாக மாற்றுகிறது. வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம், அலுவலகத்தை காட்டிலும் வீட்டில் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

கூகுள் நிறுவனத்தின் சி.ஈ.ஓ சுந்தர் பிச்சை எப்படி மன அழுத்தம் ஏற்படாதவாறு அமைதியாக பணியாற்றுகிறார் என்பதற்கான 5 வழிகள் இதோ.

1. முன்கூட்டியே எழுதல் - ஆனால் மிகவும் முன்கூட்டியே அல்ல

1. முன்கூட்டியே எழுதல் - ஆனால் மிகவும் முன்கூட்டியே அல்ல

கெவின் ஓ'லியரி மற்றும் டிம் கூக் போன்ற உயர் பதவியில் இருக்கும் சிலர் அதிகாலை 4:30 அல்லது அதற்கு முன்பே எழுந்துவிடுவர். ஆனால் இதில் முற்றிலும் மாறுபடுகிறார் சுந்தர் பிச்சை. "நான் அதிகாலை மனிதனல்ல" என குறிப்பிடும் அவர், தினசரி காலையில் 6:30 லிருந்து 7 மணிக்குள் எழுந்து தனது நாளை துவங்குகிறார்.

அதிகாலையில் எழும் பழக்கம் உங்களுக்கு இல்லையெனில், சில ஆய்வு முடிவுகள் உங்கள் மனதை மாற்றும். ஒரு ஆய்வின் படி, முன்கூட்டியே எழுபவர்கள் தங்கள் தொழில் நிலையில் சிறப்பான வெற்றியை பெறுவர் ஏனெனில் அவரின் தினசரி நடவடிக்கைகள் கார்ப்பரேட் அட்டவணையுடன் ஒத்துப்போகும். ஆனால் மற்றொரு ஆய்வு முடிவின் படி, சராசரியாக 7 மணி அளவில் எழுபவர்கள் பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் எனவும், மன அழுத்தம், அதிக எடை போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு எனவும் தெரிவிக்கிறது.

2. புத்தகம் அல்லது செய்தித்தாள் படித்தல்

2. புத்தகம் அல்லது செய்தித்தாள் படித்தல்

உங்கள் உடலுக்காக உடற்பயிற்சி செய்து வலிமையாக்குவது போலதான் படிப்பதன் மூலம் மூளை வலுவாகிறது. கண்விழித்தவுடன் சமூக வலைதளங்களில் உலாவாமல், புத்தகம் அல்லது செய்தித்தாள் படிக்க முயற்சி செய்யுங்கள்.

படிப்பதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும், ஞாபகசக்தி மேம்படும், மன நெகிழ்வு அதிகமாகும் மற்றும் மன அழுத்தம் கூட குறையும் என்கிறது ஆய்வு முடிவுகள்.

ஒவ்வொரு நாளும் உண்மையான தாளில் படிப்பதாக கூறுகிறார் சுந்தர் பிச்சை.

3.ஊட்டச்சத்துள்ள காலைஉணவு

3.ஊட்டச்சத்துள்ள காலைஉணவு

"நான் சைவம் என்பதால் , எப்படியாவது புரத்தத்தை பெற வேண்டும். எனவே காலையில் ரொட்டித்துண்டுடன் ஆம்லெட் சாப்பிடுவேன்" என்கிறார் சுந்தர் பிச்சை.

நாளின் முதல் உணவு என்பதால் காலை உணவு அந்நாளுக்கு தேவையான ஆற்றல் மற்றும் சத்துக்களை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. மற்றொருபுறம் காலை உணவை தவிர்ப்பதால், ஒட்டுமொத்த செயல்திறனும் குறையும்.

4. தேநீர் பருகுதல்

4. தேநீர் பருகுதல்

இந்திய வம்சாளியை சார்ந்தவர் என்பதால் என்னவோ, தினமும் காலை உணவுடன் ஒரு குவளை தேநீர் அருந்துவதாக கூறுகிறார். எனினும் எந்த வகை தேநீர் என குறிப்பிடவில்லை எனினும், அதில் ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் உள்ளன எனவும், காபி அருந்துபவர்களுக்கு சிறந்த மாற்று என்கிறார்.

காபியில் உள்ள காப்பைன் சிறிதளவு கருப்பு தேநீரிலும் உள்ளதால் , மன அழுத்தம் உள்ள சமயத்தில் ஒரு அமைதியை தேநீரும் ஏற்படுத்தும் என்கிறது ஒரு ஆய்வு.

5. பெரியதாக நினைத்தல்

5. பெரியதாக நினைத்தல்

கூகுள் செய்யும் வேலையை"ஜிரோ சம் கேம்' என கருதியது இல்லை மற்றும் நீண்ட கால அடிப்படையில் தான் யோசிப்பேன் என்கிறார் சுந்தர். பெரிய அளவில் கவனம் செலுத்துவதன் மூலம், பணியாளர்களை நாள் முழுவதும் முற்றிலுமாக புரிந்துகொள்ள முடியும் என்கிறார்.

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai has a surprisingly calm, simple morning routine: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X