பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்களே.. என்ன சுந்தர் பிச்சை இது நியாயமா.. அப்படி என்ன சொன்னார்?
உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்ப வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது தான் உண்மை.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை(Google CEO Sundar Pichai) பாட்காஸ்டில் பேசியது அதிக வைரலாகி உள்ளது. அதாவது சுந்தர் பிச்சை யூடியூபர் வருண் மாயாவுடன் ஒரு குறுகிய பாட்காஸ்டில் கலந்துரையாடினார். தற்போது இதுதான் இணையதளத்தில் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.

அதாவது வருண் மாயாவுடன் பாஸ்ட்காஸ்டில் சுந்தர் பிச்சை, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, நமது நாட்டின் பொறியாளர்களுக்கு அவரது அறிவுரை, புதிய ஸ்டார்ட்அப்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இதுதவிர சுந்தர் பிச்சைக்கு பிடித்த இந்திய உணவுகள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு இந்தியாவில் மூன்று முக்கிய பெருநகரங்களான பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் இருந்து ஒவ்வொரு பிடித்த உணவைக் கூறினார். முதலில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் இருக்கும்போது, தோசையை (Dosa) சாப்பிட விரும்புவதாகக் கூறினார். அடுத்து டெல்லியில் அவருக்குப் பிடித்த உணவு சோளே பாதுரா (Chola Bhatura) என்று கூறினார்.

கடைசியில் மும்பையில் பாவ் பாஜ்ஜி (Pav Bhaji) சாப்பிடுவேன் என்று பாட்காஸ்ட் தொகுப்பாளர் வருண் மாயாவிடம் சுந்தர் பிச்சை கூறினார். ஆனாலும் அவர் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டில் ஒரு முக்கிய உணவைக் கூட பேசாதது வருத்தம் தான்.
குறிப்பாக 51 வயதான சுந்தர் பிச்சை படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில் தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி மற்றும் அமெரிக்காவிலும் முடித்தார். பின்பு 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.
படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என்ற பதவியைப் பெற்றார் சுந்தர் பிச்சை. குறிப்பாக இவர் கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆகிறது. மேலும் கடந்த 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரு முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1800 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்பு கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்குச் சம்பளம் ரூ.1869 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் சுமார் 400 சதவீதத்திற்கும் மேலும் உயர்ந்துள்ளது.
அதேபோல் சமீபத்தில் வெளியான தகவலின்படி, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு ரூ.8,342 கோடி) என்று தெரிவிக்கப்பட்டது. அதுவும் உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் பெரிதாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








