Home
News

ஒரே ஒரு வீடியோ.. சுந்தர் பிச்சையை கோர்ட் வரை இழுத்துட்டாங்க.. கடுமையாக கண்டித்த நீதிமன்றம்.. யார்மேல் தப்பு?

கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (CEO Sundar Pichai) ஒரே ஒரு சர்ச்சைக்குரிய யூடியூப் வீடியோவால் (YouTube) பெரும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார். இந்த 2024 ஆம் ஆண்டின் கணக்கு படி, யூடியூப் தளத்தில் சுமார் 3.9 பில்லியன் வீடியோக்கள் (As of 2024, there are 3.9 billion videos on YouTube) பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பில்லியன் கணக்கான வீடியோவில் இருந்து ஒரே ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவால் சுந்தர் பிச்சைக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. அது என்ன வீடியோ? அதில் என்ன இருந்தது?

யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க கோரி முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமற்ற உத்தரவை யூடியூப் வீடியோ தளம் (YouTube video site) சரியாக பின்பற்றாததால் சுந்தர் பிச்சை (sundar pichai) மீது சட்டப்படி நோட்டீஸ் (legal notice) அனுப்பப்பட்டுள்ளது. YouTube இல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் தினசரி பல பில்லியன் கணக்கான வீடியோக்களை பார்வையிடுகிறார்கள். இந்த தளத்தில் வரும் தகவல்கள் உலகளவில் விரைவாக பரவக்கூடும் படி இருக்கிறது.

ஒரே ஒரு வீடியோ.. சுந்தர் பிச்சையை கோர்ட் வரை இழுத்துட்டாங்க..

ஒரே ஒரு வீடியோ.. சுந்தர் பிச்சையை மும்பை கோர்ட் வரை இழுத்துட்டாங்க:

யூடியூப் தளத்தில் கடுமையான விதிகள் இருந்தபோதிலும், தீங்கு விளைவிக்கும் வீடியோ உள்ளடக்கம் இன்னும் யூடியூப் தளத்தில் வலம் வர தான் செய்கிறது. இந்த பிரச்சினை, தியான் அறக்கட்டளையின் நிறுவனர் யோகி அஷ்வினியை (Dhyan Foundation Founder Yogi Ashwini) அவமதிக்கும் வீடியோவைப் பற்றியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தியான் அறக்கட்டளையின் நிறுவனர் யோகி அஷ்வினியை அவமதிக்கும் விதமான ஒரு வீடியோ யூடியூப் தளத்தில் வெளியானது.

இந்த வீடியோவை அகற்றும் படி நீதிமன்றம் YouTube தளத்திற்கு உத்தரவிட்டது. வீடியோவை அகற்ற கூறிய போதே, நீதிமன்றம் இந்த வீடியோவை உலகளவில் அகற்ற வேண்டும் என்று தெளிவாக அறிவித்திருந்தது. இருப்பினும், இந்த அவதூறான வீடியோ இந்தியாவில் மட்டுமே தடைசெய்யப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் மற்ற வெவ்வேறு இடங்களில் இந்த வீடியோ இன்னும் அணுகக்கூடியதாகவே இருக்கிறது. இந்த கவனக்குறைவினால், சுந்தர் பிச்சைக்கு மும்பையில் உள்ள நீதிமன்றம் (a court in Mumbai) லீகல் நோட்டீஸை அனுப்பியுள்ளது.

ஜனவரி 3, 2025 ஆம் தேதி அன்று நீதிமன்ற விசாரணை:

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவரை பொறுப்பேற்று சட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் யூடியூப் தளத்தின் கவனக்குறைவினால், இப்போது சுந்தர் பிச்சைக்கு தலைவலி உருவாகியுள்ளது. கூகிள் நிறுவனம் தங்கள் நிறுவனரின் நற்பெயரை வேண்டுமென்றே கெடுத்து வருவதாக தியான் அறக்கட்டளை குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால், வருகிற 2025 ஜனவரி 3 ஆம் தேதி அன்று நீதிமன்ற விசாரணை நடத்த (next court hearing) திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் அடுத்த பெரிய விஷயம் என்ன?

இந்த சட்ட பிரச்சினை தவிர, இந்தியாவில் வரும் செயற்கைக்கோள் இணைய சேவைகள் (Satellite Internet Services) பற்றி பேச்சு நடக்கிறது. இது இலட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாக சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை இணைக்க அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, இந்திய அரசாங்கம் தற்போது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன்-ஐடியா (Vodafone Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சாட்டிலைட் இன்டர்நெட் சேவை என்று பேசும் பொழுது எலான் மஸ்க் (Elon Musk) இன் ஸ்டார்லிங்க் (Starlink) மற்றும் அமேசான் (Amazon) நிறுவனத்தின் குய்ப்பர் (Kuiper) போன்ற பெரிய நிறுவனங்களை எப்படி மறக்க முடியும். ஆகையால், இவர்களுடனும் இந்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தற்போது இணைந்து, இந்த சேவைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai has been charged with contempt of court on a video uploaded on YouTube case
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X