கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையே இப்படி சொல்லிட்டாரு: புதிய விதிகள் குறித்து கருத்து!
இந்திய அரசு அறிவித்துள்ள புதிய டிஜிட்டல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோம் என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆசிய பசிபிக் நாடுகளின் செய்தியாளர்கள் பங்கேற்ற காணொலியில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம். கூகுள் செயல்படும் அனைத்து நாடுகளிலும் அந்தந்த உள்ளூர் சட்டங்களை எந்த சூழ்நிலையிலும் மதித்தே வந்திருக்கிறது என குறிப்பிட்டார்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
அதுமட்டுமின்றி சுதந்திரமான வெளிப்படைத்தன்மை வாய்ந்த இணையம் என்பது அடிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் இதுபோன்ற அதிக பாரம்பரியம் நிலவுவதற்கும் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை பாராட்டு தெரிவித்தார். அதுமட்டுமின்றி சுந்தர்பிச்சை இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை குறித்து தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க இயலாது எனவும் குறிப்பிட்டார். மேலும் கூகுள் இந்திய பிரிவினர் இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கையை ஆராய்ந்து வருவதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள்
இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த தளங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

சமூகவலைதளம் பயனர்கள்
சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ர விதிமுறைகள் விதிக்கப்பட்டது. கூ என்ற இந்திய சமூகவலைதளம் தவிர வேறு எந்த முன்னணி சமூகவலைதளம் நிறுவனத்தின் குறைகளை கேட்கும் அதிகாரி போன்ற எதையும் நியமிக்கவில்லை.

இடையீட்டாளர்கள் என்ற நிலை இழக்க நேரிடும்
இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும். இது எதையும் சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை, இது அரசு தரப்பை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல்
தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டன போன்ற அறிக்கையும் சமூகவலைதளம் தரவில்லை. சில சமூகவலைதளங்கள் கால அவகாசம் கோரியுள்ளன. கருத்துப்படி உடனடியாக தடைவிதிக்கப்படுமா என்றால் அது கேள்விக்குறியே, சமூகவலைதளங்கள் இதை நிறைவேற்ற கால அவகாசம் கோரலாம், இதற்கான கால அவகாசம் அரசு தரப்பில் நீட்டிக்கப்படலாம் என்பதே நிதர்சணமான உண்மை.

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி
இந்தநிலையில், திடீர் திருப்பமாக பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மெசேஜிங் செயலிகளை தகவலை முதலில் உருவாக்கியவரை கண்டறிய நிர்பந்திக்கும் விதிகளை, தனியுரிமைக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும், இந்த விதிகள் வாடிக்கையாளர்களின் பிரைவசிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
மேலும், மத்திய அரசின் புதிய விதிகள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷனுக்கு விரோதமானது எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications