வீடியோகாலில் சுந்தர்பிச்சை செய்த தவறு- என்னதான் சிஇஓ-வா இருந்தாலும் அவரும் மனிதர் தானே!

|

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கெர்மிட் தி ஃபிராக் உடனான வீடியோ அழைப்பு உரையாடலில் தனது மைக்கை அன்மியூட் செய்ய மறந்துவிட்டார். இதுகுறித்த வீடியோவை சுந்தர்பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி

பிச்சை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கலாம், ஆனால் அவரும் ஒரு மனிதர் தானே., நம் அனைவரையும் போல அவரும் விர்ச்சுவல் வீடியோ அழைப்பில் தனது மைக்கை மியூட் செய்ய மறந்துவிட்டார். கெர்மிட் தவளையுடன் வேடிக்கையான உரையாடலில் நிகழ்ந்த நிகழ்வை சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

DearEarth என்ற நிகழ்ச்சி

DearEarth என்ற நிகழ்ச்சி

யூடியூப் ஒரிஜினல்ஸின் #DearEarth என்ற நிகழ்ச்சியில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கெர்மிட் தி ஃபிராக் உடன் கலந்துரையாடினார். கூகுள் தலைமை நிர்வாகி அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் கெர்மிட் தி ஃபிராக் ஆகியோர் யூடியூப் திட்டத்தின் நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றும் என கருப்பொருள் குறித்து விவாதம் நடத்தினர். இந்த உரையாடல் ஆனது மிகவும் வேடிக்கையான முறையில் தொடங்கினர்.

டிஸ்னியின் தி மப்பேட்ஸ்

டிஸ்னியின் தி மப்பேட்ஸ்

டிஸ்னியின் தி மப்பேட்ஸ் உரிமையாளரின் கதாபாத்திரங்களில் ஒருவரான கெர்மிட் தி ஃபிராக் இந்த நிகழ்ச்சியில் கூகுள் தலைமை நிர்வாகி உடன் உரையாடினார். இதில் கூகுள் சிஇஓ கேமராவின் முன்பு பேசுவதை கெர்மிட் தி ஃபிராக் கண்டார். ஆனால் அவர் பேசுவது கெர்மிட் தி ஃபிராக்கிற்கு கேட்கவில்லை. வணக்கம் சுந்தர் என "கெர்மிட் பிராக் தனது உரையாடலை துவங்கியது. பிச்சை கேமராவில் பேசியதை கண்டாலும் ஆடியோ அமைதியாகவே இருந்துள்ளது.

மியூட்டில் இருந்த சுந்தர் பிச்சை

"சுந்தர் நீங்கள் மியூட்டில் இருப்பதாக நினைக்கிறேன் என குறிப்பிட்ட கெர்மிட் ஃபிராக், தான் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியுடன் பேசுவதை என்னால் நம்ப முடியவில்லை என குறிப்பிட்டார். பிச்சை பதிலளித்தார்., "மன்னிக்கவும் கெர்மிட், நான் மியூட்டில் இருக்கிறேன்... தங்களுடன் பேசுவது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் என குறிப்பிட்டார்.

தளத்தின் எதிர்காலம் மற்றும் காலநிலை மாற்றம்

தளத்தின் எதிர்காலம் மற்றும் காலநிலை மாற்றம்

இருவரும் தளத்தின் எதிர்காலம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பிரச்சனைகளை நகைச்சுவைகளுடன் கலந்தாலோசித்தனர். பின் தி ஃபிராக், "நன்றி சுந்தர், நான் உங்களின் தீவிர ரசிகன். நான் கூகுளில் தேடி நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணமாக உலகின் தோராயமாக 8384 வகையான நீர்வீழ்ச்சிகள் உள்ளன என தங்களுக்கு தெரியுமா? என கெர்மிட் தி பிராக் குறிப்பிட்டார்.

இரண்டு நிமிடங்கள் மற்றும் 19 வினாடி வீடியோ

இரண்டு நிமிடங்கள் மற்றும் 19 வினாடி வீடியோ

செசேம் ஸ்ட்ரீட் போன்ற குழந்தைகளுக்கான அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பலமுறை தோன்றிய மப்பட் கதாபாத்திரத்துடன் சுந்தர் பிச்சை பேசினார். இரண்டு நிமிடங்கள் மற்றும் 19 வினாடி வீடியோவில் பிச்சை மற்றும் கெர்மிட் கலந்து கொண்டு பேசுகின்றனர். பலருடன் வீடியோகால் மேற்கொள்ளும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மியூட் எடுக்க மறந்துவிட்டாரா என்ற கேள்வி ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருந்தாலும் அவரும் மனிதார் தானே எனவும் இதுபோன்ற பிழைகள் தவறுகள் நடக்கத்தான் செய்யும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்

அதேபோல் மற்றொரு நிகழ்வில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் தீபாவளிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார். குறிப்பாக இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி OS இல் இயங்குகிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் குறித்து சுந்தர் பிச்சை தகவல்

ஜியோபோன் குறித்து சுந்தர் பிச்சை தகவல்

குறிப்பாக இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் பார்க்கப்படுகிறது என்று முதலீட்டாளர்களுக்கு சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அதேபோல் ஃபீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கான மாற்றத்தை இது முன்னெடுத்துச் செல்லும் என்று கூறியுள்ளார். அதாவது ஃபீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாற விரும்பும் மக்களுக்கான தேவையை அறிந்து இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அனைத்து அம்சங்களுடன் வெளிவரும் என்று சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai Forgot to Unmute his Mike in Video Call: Here Kermit the Frog's Answer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X