அமெரிக்காவில் $13 பில்லியன் முதலீடு: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு
24 மாகாணங்கலில் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலகங்களை புதியதாக தொடங்கவுள்ளது
உலகின் நம்பர் ஒன் தேடுதள இணையதளமான கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலகங்களை $13 பில்லியன் டாலர் செலவில் அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

கலிபோர்னியாவை தலைமை அலுவலகமாக கொண்ட கூகுள் நிறுவனம் ஏற்கனவே பல பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவில் $8 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு அமெரிக்காவில் மேலும் 24 மாகாணங்கலில் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலகங்களை புதியதாக தொடங்கவிருப்பதாக கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை சமீபத்தில் அறிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை
இதுகுறித்து சுந்தர் பிச்சை மேலும் கூறியபோது அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்கா, நேவிடா, ஒஹியோ, டெக்ஸாஸ், ஒக்லஹாமா, தெற்கு கரோலினா மற்றும் விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் சுமார் 10 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் இதனால் உருவாகும் என்றும் கூறியுள்ளார்.

கன்சர்வேடிவ்
கடந்த ஆண்டு, கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல்வாதிகள், பெரும்பாலும் காங்கிரஸை அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஊழியர்களை மேற்கோள் காட்டி கூகுள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

எவ்வளவு பணம் தேவை
புதிய டேட்டா மையங்களில் முதலீடு செய்ய எவ்வளவு பணம் தேவை என்பதை கூகுள் அடிக்கோடிட்டு காட்டுகிறது, சியர்ச் மற்றும் விளம்பர தயாரிப்புகளில் அதன் முக்கிய வியாபாரங்களை ஆதரிப்பதற்கு கூகுள் திட்டமிட்டு வருகிறது. மேலும் கிளாஸ்-செர்வேசன் வியாபாரத்திற்கான வருவாயைப் பொறுத்தவரையில், கூகுள் தொடர்ச்சியான லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1 பில்லியன்
கூகிள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனமும் புதிய அலுவலகங்களில் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து டெக்சாஸ் பகுதியில் சுமார் 15,000 புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி அமேசான்.காம் அமேசான் நிறுவனம் நியூயார்க் நகரத்திலும் வர்ஜீனியாவிலும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை செய்ய திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications