கூகுள் இணையத் தேடல் முடிவுகளில் மாற்றம் : சுந்தர் பிச்சை!

“உலகெங்கிலும் உள்ள தகவல்களைத் திரட்டி ஒருங்கிணைத்து அதனைப் பயனுள்ள வகையில் அனைவரும் பெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் .

|

அரசியல் ரீதியான காரணங்களுக்காக கூகுள் இணையதளத் தேடல் முடிவுகளில் (search results) மாற்றங்கள் கொண்டுவர இருப்பதாக வெளியான தகவலை கூகுள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மறுத்துள்ளார். இந்தத் தகவலை அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி மற்றும் தகவல் இணைய தளமான அக்சியாஸ் (Axios) 21.09.2018, வெள்ளிக் கிழமையன்று வெளியிட்டுள்ளது.

கூகுள் இணையத் தேடல் முடிவுகளில்  மாற்றம் : சுந்தர் பிச்சை!

இணையம் வழியான தேடுதல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக கூகுள் நிறுவனப் பணியாளர்கள் தங்களுக்குள் விவாதித்ததாக அமெரிக்காவின் செய்தி இதழான தி வால் ஸ்டிரீட் (The Wall Street Journal) தெரிவித்துள்ளது. அவர்களுக்கு இடையேயான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் மூலம் இது தெரிய வந்ததாக இச்செய்தி இதழ் கூறுகிறது. 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில நாட்டுகளின் பயணிகள் அமெரிக்காவுக்கு வருகை புரிவதைத் தடுக்கும் வகையில் ஆணை பிறப்பித்தார். இதனைப் பின்னணியாகக் கொண்டே கூகுள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது.

தேடல் முடிவுகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கூகுள் நிறுவனம் மிகத் தீவிரமாக யோசிக்கவில்லை எனவும் தி வால் ஸ்டிரீட் இதழ் தெரிவித்துள்ளது.

கூகுள் இணையத் தேடல் முடிவுகளில்  மாற்றம் : சுந்தர் பிச்சை!

கூகுள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தன்னுடைய பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், அரசியல் காரணங்களுக்காக இணைய தளத் தேடுதல்களில் சில மாற்றங்களைக கொண்டு வர கூகுள் நிறுவனம் முயற்சி செய்கிறது என்னும் தகவல் முற்றிலும் தவறானது எனத் தெரிவித்திருந்ததாக அக்சியாஸ் (Axios) இணைய இதழ் குறிப்பிட்டுள்ளது.

“உலகெங்கிலும் உள்ள தகவல்களைத் திரட்டி ஒருங்கிணைத்து அதனைப் பயனுள்ள வகையில் அனைவரும் பெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்கின்ற நம்முடைய குறிக்கோளில் இருந்து விலகப் போவதில்லை. அரசியல் காரணங்களுக்காக இணையத் தேடல் முடிவுகளில் சமரசம் செய்து கொள்ளப் போகிறோம் என வரும் செய்திகளில் உண்மையில்லை” என சுந்தர் பிச்சை மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்துள்ளதாக அக்சியாஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கூகுள் இணையத் தேடல் முடிவுகளில்  மாற்றம் : சுந்தர் பிச்சை!

இது குறித்துக் கருத்துக் கேட்கக் கூகுள் நிறுவனத்தை அணுக முயற்சித்தபோது அந்நிறுவனத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai denies efforts to tweak search results : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X