ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா.. Google-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்!

|

உங்களில் பலருக்கும் சாட்ஜிபிடி (ChatGPT) பற்றிய பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது என்று நம்புகிறோம். உலக அளவில், குறிப்பாக கல்வித்துறையில் சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ள சாட்ஜிபிடி-க்கு ஆப்பு வைக்க உள்ளார் "நம்ம அண்ணாத்த" சுந்தர் பிச்சை!

ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா!

அதென்ன ஆப்பு?

அறியாதோர்களுக்கு சாட்ஜிபிடி என்பது கடந்த டிசம்பர் 2022 இல், ஓபன்ஏஐ (OpenAI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு எளிய ஆன்லைன் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட் (Online Artificial Intelligence Chatbot) ஆகும்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் எந்த கேள்வியை கேட்டாலும் அதற்கான பதிலை வழங்கும் ஒரு சாட்பாட் (ChatBot) ஆகும்.

அறிமுகமான வேகத்தில் 100 மில்லியன் மாதாந்திர ஆக்டிவ் யூசர்களை (Monthly Active Users) பெற்று வரலாறு காணாத வளர்ச்சியை பெற்றுள்ள சாட்ஜிபிடி-க்கு ஆப்பு வைக்கப்போகும் தகவல் ஒன்றை சுந்தர் பிச்சை (Sundar Pichai) தெரிவித்துள்ளார்.

நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!

அப்படி என்ன சொல்லி உள்ளார்?

ஆல்ஃபபெட் இன்க். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, சாட்ஜிபிடி-க்கான போட்டியாளரை களமிறக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி கூறுகையில், கூகுள் நிறுவனம் எல்ஏஎம்டிஏ (LaMDA) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களை "வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில்" வெளியிடும் என்று என்று கூறியுள்ளார்.

அறியாதோர்களுக்கு எல்ஏஎம்டிஏ (LaMDA) என்பது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications) என்பதன் சுருக்கமாகும். ஆகமொத்தம் சாட்ஜிபிடி-க்கு ஒரு தரமான போட்டியாளர் தயாராகி கொண்டிருக்கிறது!

ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?

டிக்டாக்கிற்கு 9 மாதங்கள், இன்ஸ்டாகிராமிற்கு 2 ஆண்டுகள்!

முன்னரே குறிப்பிட்டபடி, சாட்ஜிபிடி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. சாட்ஜிபிடி-யின் யூசர் பேஸ் (User Base) ஆனது இன்றுவரை உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான நுகர்வோர் ஆப்களை விட மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இப்படி மேலோட்டமாக சொன்னால் உங்களுக்கு புரியாது. ஒப்பிட்டு கூறினால் மட்டுமே, சாட்ஜிபிடி-யின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்!

சென்சார் டவர் வழியாக கிடைத்த தரவுகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கும்போது, 100 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் என்கிற எண்ணிக்கையை எட்ட, டிக்டாக் (Tiktok) ஆப்பிற்கு ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் ஆனது!

அதே எண்ணிக்கையை எட்ட இன்ஸ்டாகிராமிற்கு (Instagram) இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆனது; ஆனால் சாட்ஜிபிடி இரண்டே மாதத்தில் அதை எட்டியுள்ளது!

தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?

சாட்ஜிபிடி தடை செய்யப்பட வேண்டும் என்று கூறுவதற்கு என்ன காரணம்?

சாட்ஜிபிடி என்பது ஓபன்ஏஐ (OpenAI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஏஐ லேங்குவேஜ் மாடல் (AI language model) ஆகும்.

இது கொடுக்கப்பட்ட இன்புட்டின் (Input) அடிப்படையில், மனிதர்களால் உருவாக்கப்படுவது போன்ற டெக்ஸ்ட்களை உருவாக்கும் திறன் கொண்டது.

அதாவது இந்த ஏஐ லேங்குவேஜ் மாடலானது ஒரு பெரிய அளவிலான டெக்ஸ்ட் டேட்டாக்களில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதால், இதனால் கேள்விகளுக்கான பதில்களை உருவாக்க முடியும்; நீண்ட டெக்ஸ்ட்களை சுருக்க முடியும், பெரிய பெரிய ஆய்வு கட்டுரைகள் மற்றும் கதைகளை கூட எழுத முடியும்!

இந்த காரணத்தினால் தான் இது சில கல்வித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.!

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai Confirms that ChatGPT to face a big competitor very soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X