Home
News

ஆஹா இதுவல்லவா சாதனை.. உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு..

சுந்தர் பிச்சையின் தலைமையிலான கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது உலகிலேயே அதிகமாகச் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திகழ்கிறார். இது குறித்து விரிவான தகவல்கள் இந்த பதிவில் சற்று விரிவாகாப் பார்ப்போம்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை..

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (sundar pichai) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.

தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ (Google CEO) என்ற பதவியைப் பெற்றார் இவர். குறிப்பாக சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆகிறது. அதேபோல் 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரு முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1800 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை..

பின்பு கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்குச் சம்பளம் ரூ.1869 கோடியாக இருந்தது. குறிப்பாக இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் சுமார் 400 சதவீதத்திற்கும் மேலும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களைத் தொட்டுவரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார்.

அதன்படி சமீபத்தில் வெளியான தகவலின்படி, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு ரூ.8,342 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் பெரிதாகப் பார்க்கப்படுகிறது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை..

மேலும் கடந்த 2022-ம் ஆண்டு அவரது நிகர மதிப்பு 1,310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10215 கோடி என ஹூருன் பட்டியலில் ( Hurun List) மதிப்பிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தையும் கூறியுள்ளார். அதன்படி, கடந்த 2004 எப்ரல் 26-ம் தேதி கூகுள் நிறுவனத்தில் எனது முதல் பணி நாள். அப்போது முதல் நிறைய மாறுதல்கள் வந்து விட்டன. அதாவது தொழில்நுட்பம், எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, என் தலைமுடி என நிறைய மாறுதல்கள் வந்துவிட்டன.

ஆனாலும் மாறாதது ஒன்று தான், அது இந்த அற்புதமான நிறுவனத்தில் வேலை செய்வதில் கிடைக்கும் த்ரில் ஒன்று தான். 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நான் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன் என்றார் சுந்தர் பிச்சை. குறிப்பாக சுந்தர் பிச்சை நன்றாகப் படித்து தனது திறமை மூலம் இந்த கூகுள் சிஇஒ பதவிக்கு வந்துள்ளார். ஆனால் அவர் தன்னை அதிர்ஷ்டசாலி என்று கூறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai close to billionaire status thanks to AI development
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X