இனி பணத்தை மறந்துருங்க.. குட்டி ஸ்டோரி சொன்ன Google CEO சுந்தர் பிச்சை!

|

நிறுவனம் ஊழியர்களின் பொழுதுபோக்கு மற்றும் பயண வரவுச் செலவுத் திட்டங்களை குறைத்ததை அடுத்து Google CEO Sundar Pichai பங்கேற்ற மீட்டிங்க் இல் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். அதன்படி நடந்த நிகழ்வை தான் பார்க்கப்போகிறோம்.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் கேள்வி..

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் கேள்வி..

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்தில் நடந்த கூகுளின் வாராந்திர ஆல்-ஹேண்ட்ஸ் மீட்டிங்கில் ஊழியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில் கூகுள் பணியாளர்கள், பொழுதுபோக்கு பயண வரவுச் செலவுகள் மற்றும் பிற சலுகைகளை குறைப்பது ஏன் என கூகுள் சிஇஓ இடம் கேள்வி எழுப்பினர்.

பொறுப்புடன் செயல்படுவது அவசியம்..

பொறுப்புடன் செயல்படுவது அவசியம்..

தற்போது கடினமான பொருளாதார நிலைமைகளை சந்தித்து வருவதாகவும், பணியாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுமாறும் சுந்தர் பிச்சை ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பயணம் மற்றும் பொழுதுபோக்குக்கான பட்ஜெட்..

தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட பலவீனமான வருவாய் கிடைத்ததை அடுத்து, கூகுள் ஊழியர்களின் பயணம் மற்றும் பொழுதுபோக்குக்கான பட்ஜெட்டைக் குறைத்துள்ளது.

மந்தநிலை மற்றும் பணியாளர் நலன்களுக்காக குறைக்கப்பட்ட பட்ஜெட்டுக்காக கவலைப்படுவதற்கு பதிலாக வேலையை ஜாலியாக செய்யுங்கள் என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைவது அவசியம்..

அனைவரும் ஒன்றிணைவது அவசியம்..

CNBC தளத்தில் சுந்தர் பிச்சை கூறியதாக வெளியான தகவலில், இதுபோன்ற பெரிய பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்ள ஊழியர்கள் ஒன்றாக செயல்பட வேண்டும்.

வெளியாகும் அனைத்து செய்திகளையும் படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள கடினமான பொருளாதார நிலைகளின் காரணமாக பொறுப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரு நிறுவனமாக இதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ளும் போது அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என சிஎன்பிசி ஆடியோ கிளிப்பில் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை மறந்து வேலையை ஜாலியாக செய்யுங்கள்..

பணத்தை மறந்து வேலையை ஜாலியாக செய்யுங்கள்..

கூகுளில் அதிகமான மக்கள் உள்ளனர் என்றும் உற்பத்தித்திறன் இந்த எண்களில் பிரதிபலிக்கவில்லை என்றும் சுந்தர் பிச்சை மீண்டும் சுட்டிக்காட்டினார்.

கூகுள் சிறியதாகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்ட காலமும் எனக்கு நினைவிருக்கிறது. ஜாலியாக வேலை செய்ய வேண்டும், அதை எப்போதும் பணத்துடன் ஒப்பிடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குள் நுழையும் போது அங்கு ஊழியர்கள் வேடிக்கையாக இருப்பதை பார்க்கலாம். ஆனால் அந்த வேடிக்கை பணத்திற்கு ஒத்ததாக இருக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

மிகவும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்..

மிகவும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்..

இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட பலவீனமான வருவாய் கிடைத்ததை அடுத்து, கூகுள் ஊழியர்களின் பயணம் மற்றும் பொழுதுபோக்குக்கான பட்ஜெட்டை குறைத்துள்ளது.

கூகுள் பணியாளர்களின் பொழுதுபோக்கு மற்றும் பயண பட்ஜெட்டில் குறைப்பு ஏற்படுத்தியது ஏன் என்ற ஊழியர்களின் கேள்விக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில் பேசு பொருளாகி வருகிறது.

தற்போது நிலவும் கடினமான மேக்ரோ பொருளாதார நிலைமைகளில் பணியாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுமாறு சுந்தர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார்.

சுந்தர் பிச்சையும் விதிவிலக்கு அல்ல

சுந்தர் பிச்சையும் விதிவிலக்கு அல்ல

கூகுளின் இந்த நிலைக்கு சுந்தர் பிச்சையும் விதிவிலக்கு அல்ல. சுந்தர் பிச்சை தனது சொத்து மதிப்பில் 20 சதவீதம் இழந்துள்ளார் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் டெக் நிறுவனங்கள் பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டுள்ளன.

இதன் காரணமாக வெளிநாட்டில் இருக்கும் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் சொத்து மதிப்பு பாதிப்பில் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது.

சொத்து மதிப்பை இழந்த சுந்தர் பிச்சை

மேலும் சமீபத்தில் வெளிவந்த IFL Hurun India Rich List 2022 அறிக்கையின்படி, கடந்த ஒரு ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 20 சதவீதம் சரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இவரின் சொத்து மதிப்பு ₹5,300 கோடியாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு தனது சொத்து மதிப்புடன் ஒப்பிடும் போது ஐந்தில் ஒரு பங்கை அவர் இழந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Google CEO Sundar Pichai Advice to Employees: Dont Compare Fun With Money, Forget and Fun

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X