அடேங்கப்பா! அம்மாடியோ! இவ்வளவா! என்று உயர்ந்தது சுந்தர் பிச்சையின் ஊதியம்!

|

சமூக வலைத்தளம், ஊடகம் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்து இடங்களிலும் அடேங்கப்பா! அம்மாடியோ! இவ்வளவா! என்று ஆச்சரியத்துடன் தலைப்பு வைத்து, புகழ்ந்து பாராட்டி வருவது கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சையைப் பற்றித் தான். இதற்கான காரணம் 2020 ஆம் ஆண்டில் அவருக்குக் கிடைக்கப் போகும் ஊதியம் பற்றிய தகவல்கள் தான்.

தாய் நிறுவனத்தின் தலைமை பொறுப்பும் சுந்தர் பிச்சைக்கே

தாய் நிறுவனத்தின் தலைமை பொறுப்பும் சுந்தர் பிச்சைக்கே

கூகுளின் தலைமை செயலதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை, கடந்த 3ம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதேபோல், சுந்தர் பிச்சை ஒரே நேரத்தில் இந்த இரண்டு நிறுவனங்களின் தலைமை செயலதிகாரியாகச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்திய ரூபாய் மதிப்பின் படி இவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய ரூபாய் மதிப்பின் படி இவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து ஆல்பாபெட் நிறுவனம், சுந்தர் பிச்சையின் ஊதியத்தைப் தற்பொழுது பலமடங்காக உயர்த்தியிருக்கிறது. அல்பாபெட் நிறுவனத்தின் முடிவுப்படி, ஆண்டு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சுந்தர் பிச்சைக்கு ஊதியமாக வழங்கப்படப்போகிறது. சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படும் 2 மில்லியன் டாலர் ஊதியம், இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் ரூ.14.22 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவை தொடர்ந்து இலவசத்தை அறிவித்த ஏர்டெல்ஜியோவை தொடர்ந்து இலவசத்தை அறிவித்த ஏர்டெல்

ரூ.1.707 கோடி ஊக்கத் தொகையா?

ரூ.1.707 கோடி ஊக்கத் தொகையா?

இதைக்கேட்டு உங்களில் சிலர் ரூ.14.22 கோடி ஊதியமா என்று ஆச்சரியத்தில் இருப்பீர்கள். உங்களுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருக்கிறது, அடுத்த மூன்றாண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஆல்பாபெட் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து சுமார் 240 மில்லியன் டாலர்கள் வரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.707 கோடி ரூபாய் சுந்தர் பிச்சைக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுவே முதல்முறை

வரலாற்றில் இதுவே முதல்முறை

மிகப்பெரிய தொகையைப் பரிசாகப் பெறுவது சுந்தர் பிச்சைக்குப் புதிதல்ல என்றாலும் கூட, நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆல்பாபெட் நிறுவனம் அறிவித்துள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். இந்த செய்தி தற்பொழுது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகிவருகிறது.

இது என்ன புது சோதனை: அடுத்த 1 வருடத்திற்கு கட்டண வசூல் தொடரும்- ஜியோஇது என்ன புது சோதனை: அடுத்த 1 வருடத்திற்கு கட்டண வசூல் தொடரும்- ஜியோ

200 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை

200 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை

இதற்கு முன்பு, கடந்த 2016ம் ஆண்டில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகையாக சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. இந்த 200 மில்லியன் ஊக்கத்தொகை நிறுவனத்தின் பங்குச் சந்தை செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்க தொகையை நிராகரித்த பிச்சை

ஊக்க தொகையை நிராகரித்த பிச்சை

அதிகமாகச் சம்பளம் பெற்றதாக உணர்கிறேன் என்று கூறி, சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலிகான் வேலியில் சில ஊழியர்கள் வாழ்வதற்கே கஷ்டப்படும்போது, சுந்தர் பிச்சைக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம் என்று ஆல்பாபெட் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google CEO and Alphabet CEO Sundar Pitchai Bags $242 Million A Year As His Salary Package For 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X