எம்எஸ் சுப்புலட்சுமியின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் டூடில்

Written By:

கூகுள் நிறுவனம் தனது இணையதளத்தில் உள்ள ஹோம் பக்கத்தில், பாரத ரத்னா விருது வாங்கிய கர்னாடிக் இசை மேதை மதிப்பிற்க்குரிய எம்எஸ். சுப்புலட்சுமியின் 97வது பிறந்தநாளை சித்தரிக்கும் வகையில் கூகுள் டூடில் படத்தை போட்டுள்ளது.

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்ற முதல் இசை கலைஞர் இவர் தான். அது மட்டுமல்லாமல் ஆசியாவின் உயரிய விருதான ராமான் மஹாஸே (Ramon Magsaysay) விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எம்எஸ் சுப்புலட்சுமியின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் டூடில்

மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் தனது 13 வயதின் போது பொதுமக்கள் முன்னிலையில் இவரது இசை நிகழ்ச்சி அரங்கேறியது. இவரது இசை இன்றும் பல இசைக் கலைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக உள்ளது. இன்றைய மாடர்ன் இசைகளுக்கு இவரது இசை மிகவும் துணை புரிகிறுது.

மதிப்பிற்க்குரிய எம்எஸ். சுப்புலட்சுமி அவர்ள் ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது அம்மா சண்முகவடிவீர் அம்மால் வீணை கலைஞர் ஆவார். இவரது பாட்டி வயலின் கலைஞர் ஆவார். இத்தகைய சிறப்பு மிக்கவரின் பிறந்தநாளை இன்று கொண்டாடுவதில் நாமும் பெருமிதம் அடைகிறோம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்