நண்பனுக்கு நண்பன்., குருவுக்கு குரு- 23வது பிறந்தநாளை கொண்டாடும் "கூகுள்": வாழ்த்துகள் சொல்வோம்!

|

கூகுள் தனது 23-வது பிறந்தநாளை கேக் புகைப்படத்துடனான சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது. செப்டம்பர் 27, 1998 அன்று தொடங்கப்பட்ட அதன் அதிகாரப்பூர்வ நிறுவனத்தை நினைவு கூர்கிறது. கூகுள் தற்போது 23-வது பிறந்தநாளை சிறப்பு கேக் புகைப்படத்துடனான டூடுல் உடன் கொண்டாடுகிறது. கூகுள் ஃபவுண்டேஷன் 1997 ஆம் ஆண்டு தொடங்கி, அதிகாரப்பூர்வ நிறுவனமாக செப்டம்பர் 27, 1998-ல் நிறுவப்பட்டது.

பிரபல தேடுதளமாக இருக்கும் கூகுள்

பிரபல தேடுதளமாக இருக்கும் கூகுள்

உலகின் பிரபல தேடுதளமாக இருப்பது கூகுள். பலரின் சந்தேகத்திற்கு தீர்வாக இருப்பது கூகுள். கூகுள் தனது 23-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. தேடுபொறியாக 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற லேரி பேஜ், செர்ஜி பிரின் ஆகியோர் இந்த தேடுபொறியை உருவாக்கினர்.

ஆரம்பத்தில் Googol என பெயர்

ஆரம்பத்தில் Googol என பெயர்

ஆரம்பத்தில் கூகுளுக்கு Googol என பெயரிடப்பட்டது. அதன்பின் Google என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லேரி பேஜ், செர்ஜி பிரின் ஆகிய இரண்டு கூகுள் இணை நிறுவனர்களும் தங்கள் தங்கும் அறைகளில் தேடுபொறியை உருவாக்கி முன்மாதிரியாக உருவாக்கினர். 1998-ல் கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

23-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

23-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

கூகுள் தனது 23-வது பிறந்தநாளை தனித்துவமான டூடுல் உடன் கொண்டாடுகிறது. சிறப்பு கேக் புகைப்படத்துடன் டூடுலை வெளியிட்டுள்ளது. தினசரி உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மொழிகளின் மூலம் கூகுளில் பில்லியன் கணக்கான தேடல்கள் உள்ளன. கூகுள் புதிய டூடுல் குறித்து அதன் வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளது. இணையத்தையும் கூகுளையும் பிரிக்க முடியாத அளவு கூகுள் பயன்பாடு இருந்து வருகிறது. அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேடுப்பொறி தொழில்நுட்பமாக கூகுள் செயல்பட்டு வருகிறது. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

அனைத்து சந்தேகத்திற்கும் தீர்வு

அனைத்து சந்தேகத்திற்கும் தீர்வு

ஏதாவது சந்தேகம் என்றாலும் சரி, எதையாவது படித்து அறிந்துக் கொள்ள வேண்டுமானாலும் சரி நமக்கு கைக் கொடுப்பது கூகுள் தான். மனிதனின் இரண்டாவது மூளையாக செயல்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளும் கூகுளில் ஆகச் சிறந்த பயன்பாட்டை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டே வருகிறது.

கூகுள் தேடிபொறி சேவை

கூகுள் தேடிபொறி சேவை

கூகுள் தேடிபொறி சேவை மட்டுமின்றி ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ் என பல சேவைகளை வழங்குகிறது. அதன்படி 2015 ஆம் ஆண்டு கூகுள் புகைப்படங்கள் தொடங்கப்பட்டது. இந்த சேவை ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. கூகுள் போட்டோஸ் ஆனது ஸ்மார்ட்போனிலோ அல்லது வேறு கேமரா மூலமாகவோ எடுக்கும் ஹை குவாலிட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைக்க பயன்படுகிறது. அதிக எம்பி இருக்கும் புகைப்படங்களை சேமித்து வைக்க பெரிதளவு கூகுள் போட்டோஸ் பயன்படுகிறது.

கூகுள் போட்டோஸ் பயன்பாடு

கூகுள் போட்டோஸ் பயன்பாடு

கூகுள் போட்டோஸ் பயன்பாடானது சேமிப்புக்கு எந்தவொரு அளவும் இதுவரை நிர்ணயக்கவில்லை. அதேபோல் சேமித்து வைப்பதற்கு எந்தவொரு கட்டணமும் நிர்ணயிக்கவில்லை. இதேபோன்று கூகுள் டிரைவ் பயன்பாடும் பெரிதளவு உதவியாக இருக்கிறது. கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து பார்க்கையில் 15 ஜிபி வரை போட்டோஸ்களை பேக் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது என இருந்த நிலையில் 2021 ஜூன் 1-க்கு பிறகு கட்டணம் விதிக்கப்பட்டது. ஜூன் 1, 2021-க்கு முன்புவரை போட்டோ, வீடியோக்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதற்குபிறகு போட்டோக்கள் சேமிக்கும்போது தேவைக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் கூகுளின் பல சேவைகள் பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Celebrates its 23rd Birthday With Special Cake Doodle.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X