கூகுள் கொண்டாடும் டிஎன்ஏ ஆராய்ச்சியாளிரின் பிறந்தநாள்!!!

|

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரோஸ்லின்ட் எல்ஸி பிராங்களின் எனும் பையோ பிஸிஸ்ட்டின் 93வது பிறந்தநாளை இன்று கூகுள் கொண்டாடுகிறது. கூகுளின் சேர்ச் என்ஜின் ஹோம் பேஜ்ஜில் இதை சித்தரிக்கும் படத்தை இன்று நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் எப்பொழுதாவது எப்படி பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு சில குணங்கள் வருகிறது என வியந்தது உண்டா? அது ஜெனிடிக் வாயிலாக எப்படி நடக்கிறது என உலகுக்கு தெரியபடுத்தியவர் இவர்தான்.

டிஎன்ஏ(DNA) அமைப்பு பற்றிய இவரது ஆராய்ச்சி மகத்தானது. பிரிட்டிஷ் பெண்மணியான பிராங்களின் ஜூலை 25, 1920 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவரது பெற்றோருக்கு இவர் இரண்டாவது குழந்தை.

கூகுள் கொண்டாடும் டிஎன்ஏ ஆராய்ச்சியாளிரின் பிறந்தநாள்!!!

1941 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் உள்ள நியூங்கேம் கல்லூரியில் பிசிக்கல் கெமெஸ்ட்ரி பட்டபடிப்பை முடித்தார். பின்பு துணை ஆராய்ச்சி அலுவலராக பணிபுரிந்தார். இந்த ஆராய்ச்சி மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் 1945 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.

பிராங்களினின் டிஎன்ஏ(DNA) அமைப்பின் ஆராய்ச்சி பற்றிய படங்களை மௌரிஸ் என்பவர் அவரது நண்பர்களான கிரிக் மற்றும் வாட்ஸன் என்பவர்களுக்கு திருட்டுதனமாக குடுத்துவிட்டார். அவர்கள் இருவரும் 1962 ஆம் ஆண்டு டிஎன்ஏ(DNA) ஆராய்ச்சிகாக நோபல் பரிசு பெற்றனர்.

பிராங்களின் 1956 ஆம் ஆண்டில் இருந்தே உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். ஏப்ரல் 16, 1958 ஆம் ஆண்டு அவர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தார்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X