இந்தி திணிப்பு சர்ச்சை.! வசமாக சிக்கியது கூகுள்.!

|

கூகுள் இணையதளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், குறிப்பாக கூகுள் மூலம் அதிகளவு மக்களுக்கு வருமானம் மற்றும் வேலைகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி திணிப்பு சர்ச்சை.! வசமாக சிக்கியது கூகுள்.!

இந்நிலையில் இந்தித் திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்துவரும் நிலையில் தற்போது கூகுள் நிறுவனமே இந்த திணிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்

தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்

அதாவாது கூகுளின் தேடலில் அங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது
அனுமதியில்லாமல் , ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஒப்புதல் இல்லாமல் காட்டப்படுகிறது

ஒப்புதல் இல்லாமல் காட்டப்படுகிறது

குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டில் கூகுளுக்கு சொந்தமான க்ரோம் உலாவியில் (Browser) ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கான தேடலை மேற்கொள்ளும்போது, அதற்கான விளக்கம்
ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும், பயன்பாட்டாளரின் ஒப்புதல் இல்லாமல் காட்டப்படுகிறது.

ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 பயனாளர்களுக்கு எந்தவொரு ஆப்சனும் இல்லை

பயனாளர்களுக்கு எந்தவொரு ஆப்சனும் இல்லை

குறிப்பாக கூகுள் தேடல் முடிவுகளில் இந்தியில் காட்டப்படுவதில் விருப்பமில்லை என்றால் அதை நிராகரிக்கவோ அதற்குப் பதிலாக தமிழ் மொழியை தேர்ந்தெடுக்கவோ கூகுள் பயனாளர்களுக்கு எந்தவொரு ஆப்சனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 குற்றச்சாட்டு என்னவென்றால்?

குற்றச்சாட்டு என்னவென்றால்?

இணையவாசிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையோ அல்லது க்ரோம் உலாவியையோ அல்லது இரண்டையுமே தமிழ் மொழியில் பயன்படுத்தினாலும், நீங்கள் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்து ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கான விளக்கம் தொடர்பாக தேடல் மேற்கொண்டால் ஆங்கிலம் மட்டுமின்றி
இந்தியிலும் பதில் வருவது அப்போது உறுதிசெய்யப்பட்டது.

விளக்கமளித்துள்ளது கூகுள் நிறுவனம்

விளக்கமளித்துள்ளது கூகுள் நிறுவனம்

கூகுள் தரப்பில், ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காக தான் இந்தியாவில் அதிகமாகப் புழக்கத்தில் இந்த மொழியில் தேடல் முடிவுகளை வழங்குகிறோம் என்றும் இது விரைவில் தமிழ் உள்ளிட்ட
மற்ற பிராந்திய மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுமெனவும் விளக்கமளித்துள்ளது கூகுள் நிறுவனம்.

 இந்தி மொழியில் சோதனை செய்கிறோம்

இந்தி மொழியில் சோதனை செய்கிறோம்

மேலும் வார்த்தைகளை தட்டச்சு செய்யும் போதே உடனுக்குடன் தேடல் முடிவுகளை வழங்கும் ஒன்பாக்ஸ் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியள்ளது, இதன் மூலம் ஒரு வார்த்தையை தேடும் போதே உடனுக்குடன் அதற்கான பதிலையும் பெற முடியும். ஆனால் இந்த சேவை இந்தி மொழியில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதிலும் மற்ற மொழிகளை விட செறிவு மகுந்ததாக இருப்பதால் இந்த சேவையை இந்தி மொழியில் சோதனை செய்கிறோம்
என கூகுள் விளக்கம் தெரிவித்துள்ளது.

ரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25?ரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25?

இந்தி மொழி செறிவு

இந்தி மொழி செறிவு

இருந்தபோதிலும் இந்தி மொழி செறிவு மிகுந்தது என்றால், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் செறிவு இல்லாதவைகளா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக இந்திய நாட்டில், பல்வேறு மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில், இது போன்ற சேவைகளை இந்தி என்ற ஒற்றை மொழியில் மட்டும் பரிசோதனை செய்வது எப்படி
சரியாகும் என கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

தமிழ் ஆர்வலர்கள்

தமிழ் ஆர்வலர்கள்

கூகுளில் அனைத்து மக்களுக்கும் உதவியாய் தான் இருக்கிறது, ஆனாலும் இந்த இந்தி திணிப்பு குற்றச்சாட்டுக்கு எதிராக தகுந்த நடவடிக்கையை எடுக்குமென்று எதிர்பார்க்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

Best Mobiles in India

English summary
Google Caught In 'Hindi Imposition In Tamil Nadu' Controversy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X