Home
News

இப்போவே சொல்லிட்டோம்.. அப்புறம் உங்க போன்ல Calendar காணாம போயிடும்.. பார்த்துக்கோங்க.. Google எச்சரிக்கை! ஏன்?

கூகுள் (Google) நிறுவனமானது தனது கேலெண்டர் ஆப்பை (Calendar App) பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு (Android Users) முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதென்ன எச்சரிக்கை? ஸ்மார்ட்போனில் உள்ள காலெண்டர் ஆப் காணாமல் போகும் அளவிற்கு என்ன பிரச்சனை? இதோ விவரங்கள்:

கூகுள் கேலெண்டர் (Google Calendar) என்பது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமின்றி, ஐபோன் மற்றும் பிசி பயனர்களுக்கும் கூட ஒரு முக்கியமான கேலெண்டர் ஆப் ஆகும். இது டீம்ஸ் (Teams), ஜூம் (Zoom) மற்றும் பல போன்ற மூன்றாம் தரப்பு ஆப்களுடன் சேர்த்து ஜிமெயில் (Gmail), நோட்டிஃபிகேஷன்ஸ் (Notifications), நோட்ஸ் (Notes) போன்ற பல கூகுள் சேவைகளையும் ஆதரிக்கிறது.

உங்க போன்ல Calendar காணாம போயிடும்.. Google எச்சரிக்கை! ஏன்?

அதாவது ஈவென்ட்களை உருவாக்குதல் (Creating events), மீட்டிங்களை திட்டமிடுதல் (Schedule meetings) மற்றும் நோட்டிஃபிக்கேஷன்களை அமைத்தல் (Set reminders) போன்ற வேலைகளை மிகவும் எளிமையான முறையில் கையாள அனுமதிக்கும் கூகுள் கேலெண்டர் ஆப்பிற்கு தான் தற்போது ஒரு சிக்கல் வந்து உள்ளது!

அதென்ன சிக்கல்? ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பழைய வெர்ஷன்களை (Older Versions of Android Operating Systems) கொண்ட ஸ்மார்ட்போனை நீங்கள் இன்னுமும் பயன்படுத்துகிறீர்கள் என்றால், விரைவில் அந்தந்த போன்களில் காலெண்டர் ஆப்பிற்கான ஆதரவு நிறுத்தப்படும் (Drop Support) என்று கூகுள் அறிவித்துள்ளது.

உங்க போன்ல Calendar காணாம போயிடும்.. Google எச்சரிக்கை! ஏன்?

பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் என்றால் என்னென்ன வெர்ஷன்கள்? நீங்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களை (Android Oreo 8.0 or Higher Version) கொண்டுள்ளீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் கேலண்டர் ஆப்பிற்கு எந்த சிக்கலும் இல்லை.

ஒருவேளை நீங்கள் ஆண்ட்ராய்டு 7.1 அல்லது அதற்கு கீழே உள்ள வெர்ஷன்களில் ( Android 7.1 or Below Version) இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவைகளில் கூகுள் காலெண்டர் ஆப் ஆனது விரைவில் வேலை செய்வதை நிறுத்தலாம்.

உங்க போன்ல Calendar காணாம போயிடும்.. Google எச்சரிக்கை! ஏன்?

கூகுள் நிறுவனம் ஏன் பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் உள்ள கேலெண்டர் ஆப்பிற்கான ஆதரவு கைவிடுகிறது? கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, பழைய ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம்களின் கீழ் உள்ள கூகுள் காலெண்டர் ஆதரவை கைவிடுவதற்கான முக்கிய காரணம் - பாதுகாப்பு கவலைகள் (Security concerns) தான்.

ஏனென்றால் ஆண்ட்ராய்டுகளின் பழைய வெர்ஷன்களுக்கு, புதிய வெர்ஷன்களை போல வழக்கமான அப்டேட்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைப்பதில்லை. இதன் விளைவாக பழைய வெர்ஷன்களில் ஹேக்கிங் போன்ற ஆன்லைன் வழியிலான தாக்குதல்கள் மற்றும் டேட்டா இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ஆனால் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் அதுபோன்ற சிக்கல்கள் இருக்காது. ஏனென்றால் அவைகள் அவ்வப்போது ஓஎஸ் அப்டேட்களை (OS Updates) மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) பெறுகின்றன.அவைகள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதால், ஹேக்கிங் அல்லது தரவு திருட்டு போன்ற பிரச்சனைகள் இருக்காது.

பழைய வெர்ஷன்களில் உள்ள கூகுள் காலெண்டரை பாதுகாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த பிரச்சனைக்கு மொத்தமாகவே இரண்டு தீர்வுகள் தான் உள்ளன. நீங்கள் பழைய ஓஎஸ்-ஐ தான் பயன்படுத்துவீர்கள் என்றால், உங்கள் போனில் உள்ள கூகுள் காலெண்டர் ஆப்பிற்கான ஆட்டோ அப்டேட் அம்சத்தை முடக்கி வைக்கவும்.

இப்படி செய்வதன் மூலம், உங்களிடம் இருக்கும் கூகுள் காலெண்டர் ஆப் ஆனது அப்டேட் கிடைத்தாலும் கூட, அப்டேட் ஆகாது. நீங்கள் அதை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் இந்த வழிமுறை பெரிய அளவிலான பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆகையால் இதை முடிந்தவரை.. 99.9% தவிர்ப்பதே நல்லது.

இரண்டாவதாக, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பழைய ஓஎஸ்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும். உங்கள் போன் செட்டிங்ஸ்-ல் ஆண்ட்ராய்டு 8 ஓரியோ அல்லது அதற்கு பிறகு வந்த வெர்ஷன்கள் இருக்கிறதா என்று செக் செய்து உடனே அப்டேட் செய்யவும். இது கூகுள் காலெண்டர் ஆப்பிற்கான ஆதரவை தக்கவைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Calendar Drop Support For Older Android Versions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X