பிச்சை டா.. சுந்தர் பிச்சை! ChatGPT-ஐ சல்லி சல்லியா நொறுக்க Google-ன் "பக்கா மாஸ்" பிளான்!
"நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா!" என்று கெத்தாக சொல்லும்படி.. சாட்ஜிபிடி-க்கு (ChatGPT) எதிராக ஒரு தரமான வேலையை பார்த்துள்ளது கூகுள் (Google) நிறுவனம். அதென்ன வேலை என்பதை புரிந்துகொள்ள யுனிவர்சல் ஸ்பீச் மாடல் என்றால் என்னவென்று மேலோட்டமாகவாவது அறிந்திருக்க வேண்டும்.
யுனிவர்சல் ஸ்பீச் மாடல் என்ன? இதற்கும் கூகுள் நிறுவனம் சாட்ஜிபிடி-ஐ எதிர்ப்பதற்கும் என்ன தொடர்பு? யுனிவர்சல் ஸ்பீச் மாடல் வழியாக கூகுள் போட்டுள்ள புதிய திட்டம் என்ன? சாட்ஜிபிடி-ஐ எதிர்க்க கூகுள் நிறுவனம் வேறு என்னென்ன திட்டங்களை வகுத்துள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Universal Speech Model என்றால் என்ன?
மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், யூட்யூப்பில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான வீடியோக்களில் க்ளோஸ்டு கேப்ஷன்ஸ் (Closed captions - CC) கிடைக்கிறது அல்லவா? அதாவது சப்-டைட்டில்ஸ் (Subtitles) கிடைக்கிறது அல்லவா? அதற்கு பின்புலமாக இருப்பது கூகுளின் யுஎஸ்எம் தான்!
யுஎஸ்எம் (USM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிவர்சல் ஸ்பீச் மாடல் என்பது 300 க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 மில்லியன் மணிநேர பேச்சு மற்றும் 28 பில்லியன் வாக்கியங்களில் பயிற்சியளிக்கப்பட்ட 2பி பாராமீட்டர்ஸ்களை (2B Parameters) கொண்ட அதிநவீன ஸ்பீச் மாடல்களின் (Speech Models) ஒரு குடும்பமாகும்.
இதெப்படி ChatGPT-ஐ காலி செய்யும்?
கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட்டிற்கு (Microsoft) இடையேயான ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial intelligence) யுத்தமானது நாளுக்கு நாள் சூடுபிடித்து கொண்டே போகும் நிலையில், கூகுள் நிறுவனம் அதன் யுனிவர்சல் ஸ்பீச் மாடலில் மிகவும் முக்கியமான ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூறியுள்ளது!
அதாவது கூகுள் நிறுவனம், 1000 வெவ்வேறு மொழிகளை ஆதரிக்கும் ஏஐ லேங்குவேஜ் மாடலை (1000-language AI model) உருவாக்கும் இலக்கை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்தி உள்ளது. கூகுளின் இந்த 1000-லேங்குவேஜ் ஏஐ மாடல் தயார் ஆனதும், அது சாட்ஜிபிடி உடன் போட்டியிடுவதற்கு கூகுளுக்கான ஒரு பலமான அடித்தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
Google Search-க்கு வரும் Bard
மைக்ரோசாஃப்ட்டின் பிங் சேர்ச்சில் (Bing Search) சேர்க்கப்பட்டுள்ள சாட்ஜிபிடி-ஐ போலவே, கூகுள் சேர்ச்சில் பார்ட்-இன் அடிப்படை தொழில்நுட்பமான எல்ஏஎம்டிஏ-வை (LaMDA) சேர்க்க உள்ளத்தையும் கூகுள் உறுதிப்படுத்தி உள்ளது. இது கேள்விகளுக்கான பதில்களை வழங்குவதோடு சேர்த்து, கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையிலான சாட் பாக்ஸையும் வழங்கும்.
ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சையின் வேண்டுகோள்
சிஎன்பிசி வழியாக கிடைத்த ஒரு சமீபத்திய தகவலின்படி, கூகுள் சிஇஓ-வான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் பொதுவான இமெயில் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூகுள் ஊழியர்கள் அனைவரும் பார்ட்-ஐ சோதித்து பார்க்குமாறும், அதனுடன் சிறிது நேரம் செலவிடுமாறும் கேட்டு கொண்டுள்ளார்!
பல புதிய ஏஐ அம்சங்களை அறிமுகப்படுத்தும் கூகுள்
1000-லேங்குவேஜ் ஏஐ மாடலின் உருவாக்கம், பார்ட்-ஐ பயன்படுத்துமாறு வேண்டுகோள் போன்ற விஷயங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் கூகுள் நிறுவனம் அதன் தயாரிப்புகளில் பல வகையான புதிய ஏஐ அம்சங்களை (AI Features) அறிமுகப்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், ஆண்ட்ராய்டு ஜிப்போர்ட்-க்கு வரும் டெக்ஸ்ட்-டூ-இமேஜ் ஜெனரேட்டர் அம்சமும் அடங்கும்!


Click it and Unblock the Notifications








