வேற லெவல் அப்டேட்: கனவிலும் கூட நினைக்காத வசதியுடன் ஜிமெயில்.!

இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ரிப்ளைஸ் மற்றும் குவிக் ரிமைன்டர்ஸ் போன்ற பல்வேறு வசதிகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் கூட எளிமையாக பயன்படுத்த முடியும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையில் தொடர்ந்து புதிய அப்டேட் மற்றும் நம்பமுடியாத வசதிகள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது, மேலும் உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இந்த ஜிமெயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். மேலும் வங்கி சார்ந்த பல்வேறு பணிகளுக்கு இந்த ஜிமெயில் சேவை மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஜிமெயில் சேவையில் எளிமையாக புகைப்படங்களை வைக்க வழிசெய்துள்ளது அந்நிறுவனம்.

 குவிக் ரிமைன்டர்ஸ்:

குவிக் ரிமைன்டர்ஸ்:

ஜிமெயில் சேவையில் இப்போது வழங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், உங்கள் வரும் முக்கியாமான மின்னஞ்சல்களுக்கு உடனே குவிக் ரிமைன்டர்ஸ் எனும் வசதியின் மூலம் பதில் அனுப்ப முடியும். மேலும் அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப்
செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தேவையில்லாத மற்றும் ஆபத்து நிரைந்த மின்னஞ்சல் வரும் போது எச்சரிக்கை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ஃபிடென்ஷியல் மோட் :

கான்ஃபிடென்ஷியல் மோட் :

அடுத்து ஜிமெயில் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் எனும் வசதி ஆனது மின்னஞ்சல்களை டவுன்லோடு, ஃபார்வேர்டு, காப்பி அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும் என கூகுள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின்னஞ்சல் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் சேவையில் வழங்கப்படுகிறது. மேலும் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ரிப்ளைஸ் மற்றும் குவிக் ரிமைன்டர்ஸ் போன்ற பல்வேறு வசதிகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் கூட எளிமையாக பயன்படுத்த முடியும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில் செட்டிங்ஸ்:

ஜிமெயில் செட்டிங்ஸ்:

இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய வசதிகளை பெற ஜிமெயில் செட்டிங்ஸ் பகுதியில் டிரை தி நியூ ஜிமெயில் எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு எளிமைய புதிய அப்டேட் வசதிகளை பெற முடியும்.

அப்டேட்:

அப்டேட்:

இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு உதவியாக இருக்கும், ஆனால் ஜிமெயில் சேவையை மிகவும் பாதுகாப்பு வசதியுடன் பயன்படுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
Google brings snooze button confidential mode and more to Gmail with new update; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X