ஸ்பேம் அழைப்புகளுக்கு ஆப்பு வைக்கும் Google.. வந்தது புதிய வசதி.. பயன்படுத்துவது எப்படி? இதோ முழு விவரம்..
கூகுள் (Google) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் அவ்வப்போது புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் அனைத்து மொபைல் போன் பயனர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
இந்நிலையில் போலி அழைப்புகளின் (spam calls) எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்க கூகுள் ஸ்பேம் டிடெக்ஷன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி மூலம் போலி அழைப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கூகுள் கொண்டுவந்துள்ள இந்த வசதி மட்டும் எனேபிள் செய்யப்பட்டால், ஸ்பேம் அழைப்பு எனக் கண்டறியும் போது உங்கள் போன் ஒலி எழுப்பி vibration கொடுக்கும் அதோடு Likely scam என உங்கள் போனின் திரையில் தெரியும் என்று கூறப்படுகிறது. எனவே இதன் மூலம் நீங்கள் ஸ்பேம் அழைப்புகளை முன்கூட்டியே கண்டறியலாம். சரி இப்போது இந்த ஸ்பேம் டிடெக்ஷன் வசதியை எனெபிள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அதாவது இந்த வசதி Default ஆக ஆஃப் செய்யப்பட்டிருக்கும். உங்கள் போனின் செட்டிங்ஸ் மூலம் எனேபிள் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த புதிய வசதி தற்போது கூகுள் பிக்சல் போன் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
டெலிகாம் நிறுவனங்களும் இந்த ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க பல்வேறு முயற்சி செய்து வருகின்றன. ஒருவேளை ஜியோ சிம் பயன்படுத்தி வந்தால், மைஜியோ (MyJio) செயலி மூலம் ஒரே கிளிக் செய்தால் போதும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களை தடுக்க முடியும்.
ஆனாலும் ஜியோ பயனர்கள் இதை செய்வதன் மூலம் ஒடிபி மற்றும் நம்பகமான பிராண்டுகளின் முக்கியமான செய்திகள் தொடர்ந்து கிடைக்கும். குறிப்பாக ஸ்பேம் அழைப்புகளை மட்டும் முழுமையாகத் தடுக்கலாம். பின்பு சில விளம்பர அழைப்புகள் மட்டும் அனுமதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது ஜியோ சிம் பயன்படுத்தும் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கும் வழிகளைப் பார்க்கலாம்
அதாவது மைஜியோ (MyJio) செயலியைத் திறந்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தடுக்க Do Not Disturb (DND) சேவையை இயக்க வேண்டும். குறிப்பாக இதன் மூலம் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் சில டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தடுக்க முடியும்.

அதேபோல் இதில் பிளாக் செய்ய வேண்டிய அழைப்புகள் மற்றும் மேசேஜ்களின் குறிப்பிட்ட வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் DND சேவையை விருப்பப்படி பயன்படுத்தலாம். குறிப்பாக இதில் ரியல் எஸ்டேட், கல்வி, வங்கி, சுகாதாரம், சுற்றுலா என பல ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு நெட்வொர்க் அடிப்படையிலான ஏஐ (AI)ஆற்றல் பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகம் செய்தது. குறிப்பாக இது ஏர்டெல் பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் (எஸ்எம்எஸ்) ஏற்படும் சிக்கலைக் கணிசமான அளவில் தீர்க்கும்.
photo credit: bloomberg, bwbx.io, hiya.com


Click it and Unblock the Notifications