Google போட்ட புது குண்டு.. இனி உங்க போன்ல இருக்குற Bluetooth-ஐ நிரந்தரமா OFF பண்ண முடியாது.. ஏன்னா?
ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ஒட்டுமொத்த பயனர்களும் ஷாக் ஆகும்படியான ஒரு வேலையை கூகுள் (Google) நிறுவனம் செய்து உள்ளது. இனிமேல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள ப்ளூடூத் (Bluetooth) அம்சமானது ஆஃப் செய்ய முடியாதபடி மாறப்போகிறது. ஏன்? எதற்காக? இதோ விவரங்கள்:
ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Android Operating System) வழியாக, யூஸர் எக்ஸ்பீரியன்ஸை (User Experience) மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் கூகுள் நிறுவனத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இந்த வரிசையில் கூகுளின் லேட்டஸ்ட் ஓஎஸ் ஆன ஆண்ட்ராய்டு 15 அப்டேட் (Android 15 Update) ஆனது இதுவரை இல்லாத அளவிலான.. பெரிய-பெரிய அம்சங்களை மற்றும் முக்கிய மாற்றங்களை கொண்டுவருகிறது.

இருப்பினும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் வழியாக ப்ளூடூத் அம்சத்திற்கு வரும் ஒரு மாற்றமானது, ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சலசலப்பையும், வரவேற்பையும் ஒருசேர பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 15 வழியாக, கூகுள் நிறுவனம் ஒரு புதிய ப்ளூடூத் மோட்-ஐ (New Bluetooth Mode) அறிமுகம் செய்யவுள்ளது.
வழக்கமாக உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூடூத் அம்சத்தை ஆஃப் அல்லது டிசேபிள் (Off or Disable) செய்துவிட்டால் என்னவாகும்? - அடுத்த நொடியே கனெக்ட் செய்யப்பட்டு இருந்த அனைத்து வகையான ப்ளூடூத் சேவைகளில் இருந்தும் முற்றிலும் துண்டிக்கப்படுவீர்கள், அப்படித்தானே! ஆனால் இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை!

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் உடன் வரும் புதிய ப்ளூடூத் மோட் ஆனது ப்ளூடூத் ஆஃப் செய்யப்பட்டாலும் கூட, பார்ப்பதற்கு அது ஆஃப் செய்யப்பட்டு இருப்பது போல் தோன்றினாலும் கூட, அது குறைந்த ஆற்றல் நிலையில் (Low-energy state) தொடர்ந்து செயல்படும்.
இதனால் என்ன பயன்? இந்த புதிய ப்ளூடூத் மோட் ஆனது ப்ளூடூத்தின் முக்கிய செயல்பாடுகளை இன்ஆக்டிவ் (Inactive) நிலையில் வைத்து இருக்கும் மறுகையில் பேட்டரி லைஃப்பை (Battery Life) கணிசமாக பாதிக்காமல், பேக்கிரவுண்டில் (Background) அத்தியாவசிய பணிகளை செய்யும். கூகுளின் கூற்றுப்படி, இந்த புதுமையான அணுகுமுறையானது ப்ளூடூத் சேவைகளின் வசதி மற்றும் செயல்திறனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும்.

எடுத்துக்காட்டாக, ப்ளூடூத் அம்சத்தை முழுமையாக ஆக்டிவ் ஆக அல்லது ஆன் செய்து வைத்திருக்க தேவையில்லாமல், ஃபைண்ட் மை டிவைஸ் மற்றும் ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களுடன் கெனெக்ட் செய்துவைக்க இதுவொரு அட்டகாசமான வழியாகும். இது தடையற்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்குவதோடு சேர்த்து யூஸர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துகிறது கூடவே ஆற்றல் சேமிப்பிற்கும் (Energy conservation) பங்களிக்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தொடர்ச்சியான இயங்கிக்கொண்டே இருக்கும் இந்த புதிய ப்ளூடூத் மோட் ஆனது ப்ரைவஸி (Privacy) தொடர்பான கவலைகளையும் எழுப்பியுள்ளது. இது பார்ப்பதற்கு செயலற்று இருக்கும் ஆனால் பேக்கிரவுண்டில் செயல்பட்டு கொண்டே இருக்கும் என்றால்.. பயனர்களின் பாதுகாப்பு எப்போதுமே ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும். இந்த கேள்விக்கு கூகுள் தன பதிலளிக்க வேண்டும்!
புதிய ப்ளூடூத் மோட் ஒருபக்கம் இருக்க கூகுள் நிறுவனமானது லுக்அப் (LookUp) என்கிற புதிய டூலை அதன் போன் ஆப்பில் சேர்க்கவுள்ளது. கூகுளின் இந்த புதிய டூல், தெரியாத அல்லது காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமிக்கப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காட்டி, அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்பை ஏற்க வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பதை தீர்மானம் செய்ய உதவும்.
அதாவது ட்ரூகாலர் ஆப்பில் அணுக கிடைக்கும் அன்நோன் நம்பர்களை ஐடென்டிட்டிஃபை (Identify unknown numbers) செய்யும் அம்சம் கூகுள் போன் ஆப்பிற்கும் வரவுள்ளது. கூகுளின் இந்த நடவடிக்கை ட்ரூகாலர் ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், மேலும் கூகுள் போன் ஆப்பை டீஃபால்ட் போன் கால் ஆப் ஆக செட் செய்யும் பயனர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இருப்பினும் தற்போது வரையிலாக இந்த புதிய டூல் ஆனது கூகுள் போன் ஆப்பின் பீட்டா வெர்ஷன் (127.0.620688474) வழியாக சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது. லுக்அப் டூல் ஆனது எப்போது அனைவருக்கும் வந்து சேரும் என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், பீட்டா டெஸ்டிங் முடிந்ததும், ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் அடுத்த பிக்சல் பீச்சர் ட்ராப் அப்டேட்டில் (Pixel Feature Drop update) இந்த டூல் சேர்க்கப்படலாம்!


Click it and Unblock the Notifications








