Home
News

என்ன சார் இதெல்லாம்.. Samsung-க்கு டாட்டா காட்டிய கையோடு Apple-கிட்ட இருந்து காப்பி அடித்த Google நிறுவனம்!

கூகுள் (Google) நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 16 ஸ்டேபிள் அப்டேட்டை ரிலீஸ் செய்ய தொடங்கிய வேகத்தில், அதன் அடுத்த ஸ்மார்ட்போன்களான பிக்சல் 10 சீரிஸ் (Pixel 10 Series) பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் ஆன்லைனில் லீக் ஆன வண்ணம் உள்ளன

பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸில் இருக்கும் மிக முக்கியமான மாற்றம் - சிப்செட் டிபார்ட்மென்ட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung-க்கு டாட்டா. Apple-கிட்ட காப்பி.. என்ன Google இதெல்லாம்?

இந்த சீரிஸ் ஆனது டென்சார் ஜி5 சிப்செட் (Tensor G5 chipset) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரசியமாக இம்முறை இந்த சிப்செட்டை சாம்சங் தயாரிக்க போவதில்லை; மாறாக டிஎஸ்எம்சி ஆல் தயாரிக்கப்பட்ட முதல் சிப்செட் ஆக இருக்கும். இது செயல்திறன் மற்றும் பேட்டரி லைஃப்பை மேம்படுத்தும் என்றும், கிம்பல் போன்ற கேமரா ஸ்டெபிலைசேஷனை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றை முக்கியமாக பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் "காந்தங்களும்" இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அதாவது ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஃபோன்களில் பேக் செய்வது போலவே, பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் கட்டமைக்கப்பட்ட காந்தங்களுடன் க்யூஐ 2.2 வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Qi 2 2 Wireless charging support) இடம்பெறும் என்று (அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாத) ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி பிக்சல் 10 சீரிஸ் உடன் மூன்று பிக்சல்ஸ்னாப் ஆக்சஸெரீஸ்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது - ஒரு மேக்னட் சார்ஜர், ஒரு ஸ்டாண்ட் கொண்ட சார்ஜர் மற்றும் ஒரு ரிங் ஸ்டாண்ட் (Ring Stand) ஆகியவைகள் அறிமுகம் செய்யப்படலாம்.

மேக்னட் சார்ஜர் ஆனது வெறுமனே ஒரு சார்ஜராக மட்டுமே இருக்கும், ஸ்டாண்டுடன் இருப்பது பெயர் குறிப்பிடுவது போலவே ஸ்டாண்டை கொண்டிருக்கும். அதே நேரத்தில் "ரிங் ஸ்டாண்ட்" ஆனது சார்ஜர் இல்லாத ஸ்டாண்டுடன் வரும் சார்ஜராக இருக்கும்.

கூகுள் நிறுவனம் அதன் ஹப் மோட்-ஐ அதன் ஸ்மார்ட்போன்களுக்கு கொண்டுவருவதில் பணியாற்றி வருவதால், பிக்சல்ஸ்னாப் சார்ஜருடன் இணைக்கும்போது, பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்மார்ட் டிஸ்பிளேக்களாக மாறக்கூடும்.

மேலும் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங்கிற்காக ஒரு கன்வீனியன்ஸ்பவர் சிபிஎஸ்4041 கண்ட்ரோலர் சிப்பை பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த சிப் பிக்சல் 10 சீரிஸில் 60W வரை பாஸ்ட் சார்ஜிங்கை செய்ய ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் கூகுள் பிக்சல் 10 சீரீஸின் கீழ் முதலில் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro), கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL). பின்னர் சில மாதங்கள் கழித்து பிக்சல் 10ஏ (Pixel 10a) மாடல் அறிமுகமாகும்.

அனைத்து பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் சில நல்ல "வடிவமைப்பு மாற்றங்கள்" இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கூகுள் நிறுவனம் அதன் சிக்னேச்சர் ஆஸ்தெட்டிக்கை தக்கவைக்கவும் தவறாது.குறிப்பாக பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடல் ஆனது 162.7 x 76.6 x 8.5 மிமீ அளவுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இது அதன் முன்னோடியை விட சற்று சிறியதாக இருக்கும். ஆக இது 6.8-இன்ச் டிஸ்பிளேவை தேர்வு செய்யலாம்.

மேலும் ப்ரோ மாடல்கள் பளபளப்பான பிரேம்களை கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் பிக்சல் 10 மாடல் ஆனது முந்தைய மாடல்களுடன் பொருந்தக்கூடிய மேட் ஃபினிஷை கொண்டிருக்கலாம். பிக்சல் 10 சீரிஸில் கேமராக்களிலும் சில நல்ல மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்.

இந்த முறை பேஸிக் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆனது வழக்கமாக டூயல் ரியர் கேமரா செட்டப்பிற்கு பதிலாக ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், பிக்சல் சீரீஸின் கீழ் உள்ள ஒரு நான்-ப்ரோ மாடலில் இப்படி நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். அதாவது ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்த பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் பிக்சல் 10 மாடலில் இடம்பெறும் என்பது போல தெரிகிறது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Brings Apple Like Magnetic Wireless Charging in Pixel 10 Series Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X