Home
News

Sundar Pichai அறிமுகம் செய்த "புதிய" சிஇஓ.. Google நிறுவனத்திற்குள் என்ன நடக்கிறது?

கூகுள் (Google) நிறுவனத்திற்குள் நடந்துள்ள மிகவும் முக்கியமானதொரு ஒருங்கிணைப்பை தொடர்ந்து, ஆல்பபெட்டின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை (Sundar Pichai) தனது ஊழியர்களிடம் 5 முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். கூகுளின் புதிய ஒருங்கிணைப்பு என்ன? சுந்தர் பிச்சை அப்படி என்ன கூறியுள்ளார்? இதோ விவரங்கள்:

கூகுளின் "தாய் நிறுவனமான" ஆல்பபெட் (Parent Company Alphabet), அதன் 2 முக்கிய யூனிட்களான கூகுள் ப்ரெயின் (Google Brain) மற்றும் டீப் மைண்ட் (Deep Mind) ஆகியவற்றை இணைப்பதன் மூலம், அதன் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொடர்பான ஆராய்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Sundar Pichai அறிமுகம் செய்த புதிய சிஇஓ! Google-க்குள் என்ன நடக்கிறது?

கூகுளின் இந்த நடவடிக்கை, மைக்ரோசாஃப்ட்டின் நிதி உதவியை பெரும் ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற ஏஐ சாட்போட்களுடன் (AI Chatbot) போட்டியிடும் நோக்கத்தின் கீழ் தான் நடந்துள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த புதிய ஒருங்கிணைப்பின் முக்கியதுவம் குறித்த 5 முக்கியமான விஷயங்களையும் சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ளார்.

நாம தான் ப்ரஸ்ட்டு! கடந்த பல ஆண்டுகளாக கூகுள் தான் முதல் ஏஐ நிறுவனமாக (AI-First Company) இருப்பதாகவும், கூகுள் நிறுவனம் இதை தனது வணிகத்தின் மிக முக்கியமான பகுதியாக பார்க்கிறது என்றும் பிச்சை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சேர்ச் (Search), யூட்யூப் (YouTube) மற்றும் ஜிமெயில் (Gmail) போன்ற பல முக்கிய தயாரிப்புகளை மேம்படுத்தவும் ஏஐ-ஐ பயன்படுத்துகிறோம்.

இனி கூகுள் டீப்மைண்ட்! "ஜெனரல் ஏஐ-யின் தைரியமான மற்றும் பொறுப்பான வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவும், மிகவும் திறமையான அமைப்புகளை- மிகவும் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் உருவாக்க உதவுவதற்காகவும் ஒரு யூனிட்டை நாங்கள் உருவாக்குகிறோம். கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind) எனப்படும் இந்த குழு, ஏஐ துறையின் 2 இரண்டு முன்னணி ஆராய்ச்சி குழுக்களை ஒன்றிணைக்கிறது!

கூகுள் டீப்மைண்ட்-ஐ யார் வழி நடத்துவார்கள்? கூகுள் டீப்மைண்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis) செயல்படுவார். இவர் மிகவும் திறமையான மற்றும் பொறுப்பான ஜெனரல் ஏஐ அமைப்புகளின் வளர்ச்சிக்கு தலைமை தாங்குவார். இது நம் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்று சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

வேறு யாருக்கு உயர்பதவி கொடுக்கப்பட்டுள்ளது? ஜெஃப் டீன் (Jeff Dean) கூகுளின் தலைமை விஞ்ஞானி (Google's Chief Scientist) என்கிற உயர்பதவியை ஏற்றுள்ளார், அவர் சுந்தர் பிச்சையிடம் ரிப்போர்ட் செய்வார். இந்த பதவியின் கீழ் அவர் கூகுள் ரிசர்ச் மற்றும் கூகுள் டீப் மைண்ட் ஆகியவற்றின் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றுவார். மேலும் இவர் டெமிஸ் உடனும் இணைந்து பணியாற்றுவார்.

இதெல்லாம் எதை நோக்கி செல்கிறது? கூகுளின் இந்த புதிய முயற்சியானது - அல்காரிதம்கள் (Algorithms) மற்றும் கோட்பாடு (Theory), தனியுரிமை மற்றும் பாதுகாப்பு (Privacy and Security), குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing), சுகாதாரம், காலநிலை மற்றும் நிலைத்தன்மை மற்றும் பொறுப்பான ஏஐ போன்ற பகுதிகளில் கணினி அறிவியலில் (Computer science) அடிப்படை முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்று சுந்தர் பிச்சை நம்புகிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
google brain merged with deepmind sundar pichai announced demis hassabis as google deepmind ceo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X