ஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.!

கூகுள் செய்தி நடைமுறையில் இருந்தாலும் இந்த செயலியை மேம்படுத்தி புதிய அப்டேட் வெர்ஷனை விரைவில் வெளியிட கூகுள் திட்டமிட்டுள்ளது.

|

சமீபத்தில் நடந்த டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொண்ட கூகுள் அதிகாரிகள், கூகுளை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல புதிய அப்டேட்டுக்களை அறிவித்தனர். இதனால் கூகுள் பயனாளிகளுக்கு பல புதிய வசதிகள் கிடைக்கவுள்ளன.

ஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.!

அவற்றில் ஒன்றுதான் கூகுள் செய்தி என்ற செயலி. ஏற்கனவே கூகுள் செய்தி நடைமுறையில் இருந்தாலும் இந்த செயலியை மேம்படுத்தி புதிய அப்டேட் வெர்ஷனை விரைவில் வெளியிட கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்த கூகுள் செய்தியின் புதிய வடிவம் உடனுக்குடன் செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட உள்ளது.

ஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.!

இந்த புதிய அப்டேட்டுடன் கூடிய செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் நியூஸ் ஸ்டேண்ட் என்ற பெயரில் இடம்பெறும். முதலில் இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளிகளுக்கு தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தொடக்க நாளில் இருந்தே இந்த புதிய வடிவ செய்தி செயலியை ஆண்ட்ராய்டு பயனாளிகள் செய்திகளை பெற்று பயனடைய தொடங்கினர்.
ஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.!

ஆனால் ஐஒஎஸ் பயனாளிகளுக்கு இந்த செயலி சென்றடையவில்லை. எனவே ஐஒஎஸ் பயனாளிகளுக்காக கூகுள் தற்போது ஏஐ பவருடன் கூடிய புதிய கூகுள் நியூஸ் சென்ற செயலியை தொடங்கி அதனை செயல்படுத்தியுள்ளது.


இந்த மறுவடிவமைப்பு செய்தி பயன்பாட்டில் தற்போது 'உங்களுக்கான செய்தி' என்ற வகைய்ல் 'ஃபார் யூ' என்ற ஆப்சன் உள்ளது. இதில் உங்களுக்கு ஆர்வமுள்ள செய்தி மற்றும் நீங்கள் ஏற்கனவே தேடிய செய்தி குறித்த தகவல்கள் இருக்கும். 'உங்களுக்காக' பகுதி என்பது உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை அடங்கிய ஒரு கலவையாகும். இதில் நீங்கள் ஏற்கனவே தேடிய செய்திகளுக்கு இணையான செய்திகளை உங்கள் முன் தோன்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் இதில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் நியூஸ்கேஸ்ட் என்ற பிரிவுதான். இந்த நியூஸ்கேஸ்ட் பிரிவில் உங்களுக்கு தேவையான பொன்மொழிகள், வீடியோக்கள் மற்றும் தற்போதைய டிரெண்டில் உள்ள புதிய செய்திகளின் தொகுப்பு ஆகியவை அடங்கியிருக்கும். இந்த தொகுப்புகள் பயனாளிகளுக்கு மிகுந்த பயனுள்ள்வையாக இருக்கும். இந்த புதிய வசதியின் மூலம் ஒரு செய்தியை படங்களுடன் முழுமையாக அறிந்து கொள்ள கூகுள் உதவுகிறது.

ஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.!

மேலும் கூகுள் செய்திகள் பிரிவுகளில் ஒரு செய்தியின் முழு கவரேஜை பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க கூகுள் திட்டமிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட செய்தி மற்றும் தலைப்பு குறித்து பல்வேறு செய்தி நிறுவனங்களின் தொகுப்புகள் இதில் இடம்பெறும். இந்த தொகுப்புகளை வைத்து ஒரு குறிப்பிட்ட செய்தி குறித்து தீர்மானமாக ஒரு முடிவை வாடிக்கையாளர்கள் பெறலாம்.


இந்த கூகுள் செய்தி செயலி, ஆப்பிள் நிறுவனத்தின் செய்தி செயலிக்கு நேரடி போட்டியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூகுளின் இந்த ஏஐ செய்தி செயலிக்கு போட்டியாக ஆப்பிள் தனது செய்தி செயலியை எப்படி மேம்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

English summary
Google begins rolling out the AI powered Google News app for iOS users; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X