Home
News

Coding எழுதுனா.. நீ என்ன பெரிய ஆளா? சரியான நேரத்தில் Google-ன் தரமான செய்கை.. ChatGPT-க்கு செக்மேட்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலாக, பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும் அளவிற்கு ஏஐ (AI) பிரபலமடையும் என்று யாரும் நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டோம். எல்லாவற்றிக்கும் காரணம் மைக்ரோசாஃப்ட்டின் (Microsoft) நிதியுவியை பெறும் நிறுவனமான ஓப்பன் ஏஐ-யின் சாட்ஜிபிடி (ChatGPT) தான்!

"கூகுள் சேர்ச்சின் (Google Search) கதை முடிந்தே விட்டது" என்று கூறும் அளவிற்கு சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட் (AI Chatbot) ஆனது உலகளவில் பிரபலமானது; அதுவும் ஒருசில வாரங்களில்! அதற்கு மிகவும் முக்கிய காரணங்களில் ஒன்று - சாட்ஜிபிடியின் கோட்டிங் (Coding) எழுதும் திறமையே ஆகும்.

சரியான நேரத்தில் Google-ன் தரமான செய்கை.. ChatGPT-க்கு செக்மேட்!

அந்த திறமையை ஒன்றுமில்லாமல் செய்யும் படியான, ஒரு தரமான வேலையை தான் கூகுள் பார்த்துள்ளது. சாட்ஜிபிடி-யின் போட்டியாளராக அறிமுகமான பார்ட் ஏஐ சாட்பாட்டிற்கு (Bard AI Chatbot) புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இந்த அப்டேட்டின் கீழ் கூகுள் பார்ட் கோடிங் எழுதும் திறனை பெற்றுள்ளது.

அதாவது இனிமேல் கூகுள் பார்ட் ஆனது சாட்ஜிபிடி-ஐ போலவே சாஃப்ட்வேரை (Software) உருவாக்க உதவும் கோட்டிங்கை எழுத மக்களுக்கு உதவும். கோட்டிங் எழுதுவது மட்டுமின்றி, கோட் ஸ்னிப்பெட்களை ஜெனெரேட் செய்வது (Generating code snippets) மற்றும் கோட்களை டீபக்கிங் ( Debugging code) செய்வது போன்றவைகளிலும் உதவும். இது ப்ரோகிராமிங் கற்றுக்கொள்ள தொடங்குபவர்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்

மேலும் கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, பார்ட்-க்கு கிடைத்துள்ள கோட்டிங் திறமையின் கீழ் ஜாவா (Java), பைத்தான் (Python), ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) , சி++ (C++) உள்ளிட்ட 20 ப்ரோகிராமிங் லேங்குவேஜ்களுக்கான (Programming Languages) ஆதரவும் இருக்கும். மேலும் கோலாப் (Colab) மற்றும் ஷீட்ஸ் (Sheets) போன்ற கூகுளின் பிற தயாரிப்புகளுடன் பார்ட்-ஐ ஒருங்கிணைக்க முடியும்.

ஒருவேளை நீங்கள், பார்ட் உதவியுடன் கோட்டிங் எழுத விரும்பினால் "உங்களால் இந்த கோட்டிங்கை வேகமாக உருவாக்க முடியுமா?" போன்ற மிகவும் எளிய அறிவுறுத்தல்களின் வழியாக உங்களுக்கு தேவையான கோட்டிங்கை வேகமாகவும், திறமையாகவும் பெற முடியும் என்று கூகுள் நிறுவனம் கூறி உள்ளது.

இதுபோன்ற மேம்படுத்தல்கள், ​​கூகுளின் பாரம்பரியமான சேர்ச் டூலை (Search Tool) இயக்குவதற்கு பதிலாக; அதாவது கூகுள் செய்து தேடுவதற்கு பதிலாக.. பார்ட் ஏஐ உடன் சாட் (Chat) செய்து கேள்விகளை கேட்கக்கூடிய, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய பழக்கம் / வழக்கம் கடைநிலை பயனர்களை சென்றடையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கூகுள் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சாட்ஜிபிடி-க்கு எதிரான கடும் போட்டியாளராக உருமாற வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழும், அதன் ஏஐ திறன்களை (AI Capabilities) அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் நோக்கத்தின் கீழும், கூகுள் ப்ரெயின் (Google Brain) மற்றும் டீப் மைண்ட் (Deep Mind) ஆகிய இரண்டு யூனிட்களையும் ஒன்றாக இணைத்துள்ளது.

இனிமேல் இந்த ஒருங்கிணைப்பு கூகுள் டீப்மைண்ட் என்று அழைக்கப்படும் என்று சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார், அதுமட்டுமின்றி டெமிஸ் ஹசாபிஸை (Demis Hassabis) கூகுள் டீப்மைண்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இவருடன் இணைத்து பணியாதர் ஜெஃப் டீன் (Jeff Dean) கூகுளின் தலைமை விஞ்ஞானியாக (Google's Chief Scientist) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
google bard now helps you to write and debug codes in 20 programming languages include java python
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X