பணியாளர்கள் கணினிகளில் இருந்து ஜூம் மென்பொருளை தடைசெய்கிறது கூகுள்.!

|

கொரோனா அச்சம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகிறது.

 டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது

வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றபடி பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது. அதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூம் வீடியோ கான்பரன்சிங்

ஜூம் வீடியோ கான்பரன்சிங்

இந்நிலையில் பாதுகாப்பு சிக்கல்களை காரணம்காட்டி ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தனது ஊழியர்களின் மடிக்கணினியில் இருந்து ஜூம் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை தடை செய்தது.

தினசரி 3 ஜிபினு மொத்தம் 84 ஜிபி வேண்டுமா., அப்போ இதான் ஒரே வழி!தினசரி 3 ஜிபினு மொத்தம் 84 ஜிபி வேண்டுமா., அப்போ இதான் ஒரே வழி!

 ஜூம் டெஸ்க்டாப் கி

அன்மையில் ஜூம் டெஸ்க்டாப் கிளையண்டைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எங்கள் பாதுகாப்பு குழு தகவல் கொடுத்தது, எனவே இது எங்கள் ஊழியர்கள் பயன்படுத்தும் பயன்பாடுகளுக்கான பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யாததால் இனி அது கார்ப்பரேட் கணினிகளில் இயங்காது
என கூகுள் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா கூறினார்.

வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஆப்பயன்பாடுகளைப்

மேலும் எங்கள் கார்ப்பரேட் நெட்வொர்க்கிற்கு வெளியே இருக்கும் வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஆப்பயன்பாடுகளைப் பயன்படுத்த ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையை நாங்கள் நீண்ட காலமாக வைத்திருக்கிறோம் என ஜோஸ் அவர்கள்
தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மொபைல் பயன்பாடுகள்

ஆனாலும் மொபைல் பயன்பாடுகள் மற்றும் பிரௌசர்கள் மூலம் ஜூம் பயன்படுத்த கூகுள் அனுமதிக்கும் என்று அவர்தெரிவித்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

பற்றி எதுவும்

ஏற்கனவேஜூம் ஆப் தனியுரிமைக் கொள்கையில் இந்த வகையான பரிமாற்றத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஜூம்-ன் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில், பாதுகாப்பு அம்சத்தில் இதுகுறித்து தனியுரிமைக் கொள்கையில் எதுவுமே இல்லை என்பது. ஜூம்-ன் தனியுரிமைக் கொள்கையை பகுப்பாய்வு செய்த ஆர்வலர் பாட் வால்ஷ் இதை கண்டறிந்து கூறியுள்ளார்.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குச்

ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தப் பயன்பாடு, சந்திப்பு அமர்வுகளின் (meeting sessions) இறுதி-இறுதி குறியாக்கத்தின் (end-to-end encryption) பற்றாக்குறை மற்றும் "ஜூம்பாம்பிங்" (zoombombing) ஆகியவற்றைப் பற்றி கவனமாக இருப்பவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது ஒரு பின்னடைவை எதிர்கொள்கிறது.

Hangouts சந்திப்பு

கூகிளின் Hangouts சந்திப்பு மற்றும் மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பிற்கு போட்டியாக ஜூம் ஆப் தற்போது தலையெடுத்து வருகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை.தற்சமயம் இந்த ஜூம் ஆப் பயன்பாட்டை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

Source:buzzfeednews.com

Best Mobiles in India

English summary
Google Banned Zoom Software from employees computer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X