ஐஒஎஸ் பயனாளிகளுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் தரும் புதிய வசதி.!

கூகுள் அசிஸ்டெண்ட் பயனாளிகள் செய்த ரிசர்வேஷன்கள் அதாவது முன்பதிவுகள் அனைத்தையும் டிராக் செய்து பார்க்கும் புதிய வசதி.

|

ஐஒஎஸ் பயனாஅளிகளுக்கு கூகுள் நிறுவனம் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் கூகுள் அசிஸ்டெண்ட் பயனாளிகள் செய்த ரிசர்வேஷன்கள் அதாவது முன்பதிவுகள் அனைத்தையும் டிராக் செய்து பார்க்க முடியும். இந்த புதிய வசதி கடந்த மாதம் முதல் 7.26 வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐஒஎஸ் பயனாளிகளுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் தரும் புதிய வசதி.!


கூகுள் அசிஸ்டெண்ட் செயலியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் உள்ள அக்கவுண்ட் செக்சனுக்கு கீழே இந்த ரிசர்வேஷன் சம்பந்தப்பட்ட விபரங்கள் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் ரிசர்வேஷன் பகுதியை க்ளிக் செய்தால், அது உடனே ஒரு பிரெளசரை ஓப்பன் செய்து அதில் நாம் செய்த ரிசர்வேஷன்கள் விபரங்களை தொகுத்து வழங்கும்.

இந்த விபரங்கள் கூகுளில் உள்ள மை அக்கவுண்ட் பக்கத்தில் தோன்றும். இந்த ரிசர்வேஷன் பகுதியில் இதுவரை நாம் சென்று வந்த பயணங்கள், பதிவு செய்த ஹோட்டல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் இனிமேல் நாம் கலந்து கொள்ள போகும் நிகழ்ச்சிகள் குறித்த ரிசர்வேஷன் விபரங்களை காண்பிக்கும்.

ஐஒஎஸ் பயனாளிகளுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் தரும் புதிய வசதி.!


பயனாளிகளுக்கு கூகுள் இந்த விபரங்களை அவர்களுடைய ஜிமெயில் இருந்து டிராக் செய்து எடுத்து கொடுக்கின்றது. விமான பயணம் செய்த விபரங்கள் பற்றி கூறும்போது, நாம் செல்ல வேண்டிய விமானம், அதன் எண், செல்ல வேண்டிய இடம், தேதி உள்பட அனைத்து விபரங்களையும் தற்போது அசிஸ்டெண்ட்டில் உள்ள புதிய வசதியில் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஒரு குறிப்பிட்ட பயண விபரத்தை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதனை க்ளிக் செய்தால் அந்த பயண விபரம் குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த ரிசர்வேஷன் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் இருந்தே இதுகுறித்த ஜிமெயிலுக்கு செல்லும் வசதியும் உண்டு

மேலும் இந்த ரிசர்வேஷன் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதி இன்னும் ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் அசிஸ்டெண்ட் செயலிக்கு கொண்டு வரப்பட்டவில்லை. ஆண்ட்ராய்டு பயனாளிக்கு இல்லாத இந்த வசதியை ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொண்டு செல்வது என்பது கூகுளுக்கு இது புதியதல்ல. இதற்கு முன்னர் யூவர் ஸ்டவ்' என்ற வசதியையும் கூகுள் நிறுவனம் ஐஒஎஸ் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு இந்த புதிய வசதியை கூகுள் நிறுவனம் அளிக்கவில்லை எனினும் மிக விரைவில் ஆண்ட்ராய்டு ரசிகர்களுக்கு இந்த வசதி தரப்படும் என்ற நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஒஎஸ் பயனாளிகளுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் தரும் புதிய வசதி.!
How To Increase the Speed of your Laptop (TAMIL)

ஆனால் அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு இந்த வசதியை வேறு வடிவில் தரும் வகையில் செயல்படுத்த ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஒருசில முன்னுதாரணங்களும் உண்டு. ஐஒஎஸ் மூலம் பிரெளசரை ஓப்பன் செய்து மை அக்கவுண்ட் பக்கத்தை பார்ப்பதை போல், ஆண்ட்ராய்டு பயனாளிகளும் இந்த அனுபவத்தை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
Best Mobiles in India

English summary
Google Assistant on iOS receives a new ‘Reservations’ section :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X